Friday 30 March 2012

தலைவர் பிரபாகரன் தொடர் ..............3!



பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜெகதீஸ்வரியிடம் கேட்டார். ம்கூம். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா? 

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.


திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.


அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விசயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் சுவரொட்டி ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ சுவரொட்டிதானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?


தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோசம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள். 

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

(தொடரும்)

Saturday 24 March 2012

நோர்வே இழைத்த துரோகத்திற்கு ............!


தமிழ்ஈழத்திற்கும்,தமிழ்ஈழ மக்களிற்கும் நோர்வே இழைத்த துரோகத்திற்காக எரிக்சூல்கைம்மின் அமைச்சர் பதவியைப் பறித்தால் அவருடைய அமைச்சர் பதவி ஒன்றே போனது,

அவரிற்கு எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் அவரிற்கு வேறொரு பதவியையோ அல்லது சிறப்பான உயர்பதவி கூடக் கொடுக்கக்கூடும். அப்படி எவ்வித உயர்பதவிகள் கிடைக்காவிடினும் இதுவரை காலமும் பணியாற்றியதன் ஒய்வுவூதியமாவது மாதாமாதம் பெற்று உல்லாசமாக வாழ்க்கையின் மீதியை இன்பமாகக் கடக்கக் கூடியதாக அமையும்.

ஆனால் அழிக்கப்பட்ட தாயகமும், தமிழிஈழமக்களின் வாழ்வின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கற்பனை செய்து பாருங்கள் ஏதாவது தோன்றுகிறதா?

சமாதானத்திற்கு நடுநிலை வகுக்க முடியாதவர்களிற்கு ஏன் இந்தத் துரோகத்தனம்? எமது தாயகத்திற்கும், தாயமக்களிற்கும் இழைத்த அநீதிக்கு எரிக்சூல்கைமின் பதவியைப் பறித்ததனால் தமிழர் தாயகம், தமிழ்மக்களிற்கு ஏதாவது விடிவோ? இல்லையேல் நிரந்தரத் தீர்வோ கிட்டுமா?

உலகத் தமிழ் உறவுகளே நன்றாகச் சிந்தியுங்கள் இனப்படுகொலையை நடத்தியவனுக்கு எது உலக நீதியாக எந்தத் தண்டனை வழங்கப் படுகிறதோ அதே தண்டனை இனப்படுகொலையை நடத்துவதற்குத் துணைபோன சமாதானத் தூதுவரிற்கும் உண்டு. சமாதானத்தை மேற்கொண்ட நாடான நோர்வேக்கும் உண்டு.

அதைத் தவிர்ப்பதற்கான கண்துடைப்பே எரிக்சூல்கைமின் பதவிப் பறிப்பு நாடகமாகும், இது உலகையும், புலம்பெயர் தமிழர்களிற்கும் ஒரு கண்துடைப்பு வேடம், அனைவரையும் ஏமாற்றுவதன் ஊடே தங்கள் பக்கம் அனுதாப அலையை ஏற்படுத்துவதற்கான பெரிய கபட நாடகமேயாகும்.

சமாதான விரும்பிகள் என உலகை ஏமாற்றி சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கும் நோர்வே இப்படியான துரோகங்களைச் செய்து கொண்டு எப்படி நடுநிலையோ இல்லையேல் சமாதானத்திற்கான பரிசை சமாதானத்திற்காக உழைத்தவரிற்கு நேர்மையாகக் கொடுக்க முடியும்?

என்பதை மனதிற்கொண்டு தமிழ்ஈழத்தாயகம் , தமிழ்ஈழ மக்களின் விடிவு, நிரந்திரத்தீர்விற்கான முயற்சியில் உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

குமரிக்கண்டமுLம் அதன் எல்லைகளும் 


பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,

இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 2.
மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 3.
வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 4.
தொலை கிழக்கில் – சீன நாடு 5.
கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 6.
தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.

இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!



குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்.

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது 2.
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது 3.
3.மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது 4.
4.நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Thursday 22 March 2012

ஈழம் எனும் பெயர் முழு தீவையும்...........!



இலங்கை அல்லது ஈழம் எனும் பெயர்கள் இரண்டுமே முழுத் தீவையும் குறிக்கும் பெயர்களாகும்.தமிழீழம் என்பது தீவின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகளை மட்டுமே குறிக்கும்.

இலங்கையின் ஆரம்ப காலப் பெயர்களும் தமிழ்ப்பெயர்களே தாமிரபரணி(தப்ரபேன்).ஆரம்பகாலத்தில் அங்குள்ள மக்கள் "எல்"(சிறந்தது)(எலு-திரிபு ) பேசிய மொழி பிரிவுர்றன "சிங்க-எல(சிங்கல>சிங்கள)" & "தமிழ்".ஆங்கிலேயர் ஆட்சியின் பின் தீவின் (*சிலோன்)பெயரினை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது தமிழர்கள் "எல்(எல>எழு>ஏழு>ஈழு>ஈழம்)" இன் திரிபான "ஈழம்" அல்லது "எல்"("எல்"என்றால் சிறந்தது,புகழுக்குரியது,வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.) ஐ ஒத்த இலங்கு (விளங்குதல்/இன்னொரு பழைய பெயரான இலங்காபுரி இலங்கு=ஒளிரும்,புரி, புரம்=வசிக்கும் இடம் நகரம்/நாடு)+கை=இலங்கை எனும் பெயர்களை முன்மொழிந்தனர்.

அதேநேரம் சிங்களவர் இலங்கையை ஒத்த(இ)லங்கா(தமிழ் பெயரான இலங்கு என்பதன் திரிபான)என்றனர். பின்னர் ஆங்கிலப் பெயராக லங்கா என்பது ஏற்கப்பட்டு அதனுடன் "திரு" ஒத்த வடமொழி முன்னோட்டான சிறீ ஐ சேர்த்து "சிறீலங்கா"=Sri Lanka"எனப்பட்டது.


வரலாற்று அறிஞர் திரு ந.சி.கந்தையாபிள்ளையும் தென்புலோலியூர் திரு மு.கணபதிப்பிள்ளை,பழந்தமிழர்.(பக்கம் 18-19)

இன்றைய இலங்கையின் தேசிய கீதத்தில் கூட ஈழமணி திருநாடு என்றே குறிப்பிட்டுள்ளது.

சிறீலங்கா தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் போலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறிதுணிவருளே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமொதோர் ஒளி வளமே
நறியமலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

(1950ஆண்டு இதை தமிழ்ப் புலவர் பண்டிதர் திரு மு.நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயத்தார்.)

ஆனால் அறிஞர்கள் கி.மு 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும்,இயக்கர்களும் வாழ்ந்தார்கள்.இயக்கர்களால் பேசப்பட்ட "எலு" மொழி கொடுந்தமிழாக இருந்தது.

அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விசயனின் "லாலா" நாட்டு மொழியுடன் இயக்கர்களின் "எலு" மொழியும் சேர்ந்து "சீகளம்" என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கின்றார்கள்.

எல்:-(பெயர்ச்சொல்)= ன்
ஒளி, சூரியன், வெயில், பகல், நாள், இரவு, பெருமை, இகழ்மொழி இடைச்சொல் 
எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
எற்படக்கண்போன் மலர்ந்த (திருமுரு.74)
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170) எல்வளியலைக்கும் (அகநா.77)
எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி.8)

(இலக்கணப் பயன்பாடு)பார்க்க> http://dsal.uchicago.edu/cgbin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D&matchtype=exact&display=utf8)

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.



Tuesday 20 March 2012

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோக........!


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கியபிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது. சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது. மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர். மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது வொரு கண்ணீர் அத்தியாயம். சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன. குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுரையில் கவனித்தனர். சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனா. இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழ்ஈழ தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday 17 March 2012

சிதைக்கப்படும் என்று தெரிந்தும்.......!



சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
கனவில் தினம் தினம் ஒரு மாளிகை
கட்டி முடிக்கிறது மனம்.

கண்கள் மூடிய உறக்கத்திலும்
காட்சிப்பிழைகள்.

கருவில் சுமப்பது வெறும் கல்
என்பது தெரியாமல்
கற்பனை திரை எதற்கு ?

அழும் மேகம் அறியுமா ?,,
விரிசல் விழுந்து வீனைய்ப் போன
கரிசல் காட்டு பூமியை மட்டுமே சிலிர்க்க
வைக்கும் சத்தியம் ?

தூரத்தில் தூறல் என்று
நாவரண்டு ஓடுகிறாய்
அந்த கானல் நீருக்காக !

விதை விருட்சமாக அது காலக் கணிதத்திடம்
பதில் சொல்லியே ஆகா வேண்டும்,
ஆனால் காத்திருக்காத நீரோடைகள் சங்கமித்து
காட்டாறாக மாறி காலத்திற்கு கட்டளையிடலாம் !


மழைத்துளி கூட முத்தாகும்,
விடம் கூட மாணிக்கமாகும்,
கற்கள் கூட அதிசயப் பொருளாகும்.
அது செல்லும் பாதை சொல்லும் முடிவுரை.

போராடு தோழமையே !
சரியான பாதையில் !
சரியான நேரத்தில் !

உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday 10 March 2012

மாவீரர்களின் மானத்தில் சுய இலாபமீட்டாதீர்கள்....!



நிர்வாண போராளிகளை இணையத்தள விளம்பரப் பொருட்களாக்கி விடாதீர்கள் சமீபகாலமாக பல இணையத்தளங்கள் போர்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவற்றை வெளியிடுவது கொடூரமானது

சிங்களவன் செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக… மிக… அதிகமாக உள்ளது… என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்… எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்… என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன.

அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை ‘ப்ளாஷ்’ தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகக் கொடூரமான ஈனச் செயலாகவே நோக்கப்படுகின்றது.

போர்க் குற்றப் படங்கள் தமிழ் மக்களுக்கான காட்சிப்படுத்தல்களுக்குரியவை அல்ல என்பதை பொறுப்பற்ற சில இணையத் தளங்கள் புரிந்து கொள்வதில்லை. கோரமான, கொடூரமான படங்களை இணைத் தளங்களில் பார்வைக்குப் பதிவு செய்வதை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் சிலரால் நடாத்தப்படும் இணையத் தளங்கள் தமிழ்ப் போராளிகளது கோரமாகக் கொலை செய்யப்பட்ட படங்களையும், பெண் போராளிகளது சீரழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆடைகள் அற்ற உடல்களையும் காட்சிப் பொருட்களாக்கியுள்ளன.

இந்த இணையத் தளங்களால் மின்னும் காட்சிகளாக்கப்பட்ட அந்தப் பெண் போராளி ஒருவேளை அதன் பொறுப்பாளர்களது தங்கையாக இருந்திருந்தால், தாயாக இருந்திருந்தால் இப்படித்தான் காண்பித்து நிறைவடைந்திருப்பார்களா? என சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

போர்க் குற்றத்திற்காக அடையாளப்படுத்த வேண்டிய காட்சிகளாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்களது முகங்களையாவது மறைத்திருக்க வேண்டும். நாகரீகமடைந்த ஊடகவியலாளாகள் கோரமான காட்சிகளை வண்ணமிழக்கப்பண்ணி, கறுப்பு வெள்ளையாகக் காட்சிப்படுத்துவதும் உண்டு. ஆனால், சில தமிழ் இணையங்கள் மனங்களில் எந்தவித சலனமும் இன்றி எங்கள் தேசத்தின் ஆன்மாக்களை நிர்வாணமாகவே காட்சிக்கு விடுவதில் போட்டி போடுவதைத்தான் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து மனம் கோணாமல் எங்கள் மக்களது மன வருத்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் கிடைக்கக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்களை அதற்குரிய இடங்களில் சமர்ப்பியுங்கள். உங்கள் இணையத் தளங்களில் அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவாகளது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ எங்கள் மனங்களை ரணப்படுத்துகின்றீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். எங்களில் பலர் அந்தப் படங்களில் உள்ளவர்களது இரத்த உறவுகள், தோழர்கள், பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என அத்தனை நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எங்கள் போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள்.

மரணித்த எங்கள் பெண் போராளிகளை நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணப்படுத்தாதீர்கள் !

அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவர்களது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள்…

தமிழ்மக்களே தமிழீழத்தில் ஆயுதங்கள் மவுனிக்கப்படும்வரை களமாடி மாவீரர் ஆனவர்கள் தமிழ் மக்களின் நிரந்திர விடிவிற்காகவே அனைத்தையுமே இழந்தனர், அவர்களின் அந்த ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் உங்களுடைய காட்சிப்படுத்தப்படும் நிழற்படங்களை வெளியிடும்போது ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.

உங்களது குடும்ப உறுப்பினர்களின் காட்சியாக இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் வெளியிடுவீர்களா?

தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

இலங்காபுரி வந்தேறி சிங்களவனுக்கு...............!

இலங்காபுரி வந்தேறி சிங்களவனுக்கு ஆட்சியை இழக்கமுதல் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதியும் அதன் பெயர்களும்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.



“பழந்தமிழரின் கடல் மேலாண்மை”.............!











“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விடயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விடயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரசியமான விடயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)

RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் கடல் சுழல்கள் (Ocean currents) எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விட யம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து.

ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரசியிமான விடயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’. நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விடயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விடயங்களை இங்கே பகிர இயலாது.

கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kalingatamil@yahoo.co.in

நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விடயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள். 

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன்.

அதற்கு அவர்கள் சந்தோசப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


Friday 9 March 2012

வேடிக்கை பார்க்கிற உலகம்..........!

முள்ளிவாய்க்காலில் எம்மின அழிவில்
வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம்
விடியலை தேடுது தமிழ் ஈழம்!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


Saturday 3 March 2012

நீதிகேட்க ........! ஒற்றுமைப்படுவீரா...............?!




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Friday 2 March 2012

சிறைக்குள் எரிந்த என்னிதயம்...........!

காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே அழகாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறைச்சாலை. எமக்குச் சிறைச்சாலை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரவதைகூடங்கள் தான். பாதுகாப்பு என்பது இல்லாதபோது எம்நாடே ஒரு சித்திரவதை கூடமாகத்தானே இருக்கிறது. தெருவில் வைத்து ஒரு இயக்கம் யாரையும் அடிக்கும், சித்திரவதை செய்யும், சுட்டுத்தெருவில் வீசியெறியும். துப்பாக்கியும் குழுவுமிருந்தால் எதுவும் செய்யலாம் என்றாகி விட்டது எம்நாட்டில். நாய் கூடக் குரைத்துத் தன் எதிர்ப்பைக் காட்டும். என்ஈழத் தமிழ்மக்களுக்கு இந்த உரிமைகூட இல்லை.

இங்கே பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள், விசாரணையின் நிமித்தம் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் என்று பல வகைப்படுவர்.

இன்று 22.10.2007 மதியம், சிறையில் எங்கோ தீப்பற்றி விட்டது. பிடித்த தீ அதி வேகமாகப் பரவத்தொடங்கியது. எப்பொருட்கள் அழிந்தாலும், எரிந்தாலும், தீ எதனைக் காவுகொண்டாலும் ஒர் உயிர் கூட இழக்கப்படக்கூடாது என்பதில் நோர்வேயும், நோர்வேயிய மக்களும் உறுதியாக உள்ளனர். இதற்கு ஏற்றால் போல் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் தம்மாயுதங்களை மூன்றாமுலக நாடுகளுக்கு அனுப்பி தம் ஆயுதங்களை பரீட்சிப்பார்கள் அன்றேல் பழைய கழிவுகளைக் கொட்டும் குப்பைத்தொட்டியாகப் பாவிப்பார்கள்.

சிறையெங்கும் அல்லோலகல்லோலம். கைதிகள் எரிந்துபோய் விடக்கூடாது என்பதால் எல்லாச் சிறைக்கதவுகளும் திறந்து விடப்பட்டன. எல்லாக் கைதிகளும் வெளியே ஓடினார்கள். யார் யார் தப்பிக்கப் போகிறார்களோ யார் அறிவார்? பின்பென்ன காவல்துறையின் வேட்டை, பாதுகாப்பு எச்சரிக்கை என்று பல பல நடக்கும்.

அங்கே வேலை செய்பவர்கள் தீ பரவாதிருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொண்டிருந்தார்கள். தீயணைக்கும் படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைக்கும்படை வருவதற்கு முன்பே தீயணைக்கும் சிறுசிலிண்டர்கள், தண்ணீர்வாளிகள், தண்ணீர் குழாய்கள் இவற்றின் உதவியுடன் கைதிகளும், அங்கு வேலை செய்பவர்களும், அதிகாரிகளுமாக வளர்ந்து படர்ந்து கொண்டிந்த தீயை அணைத்து விட்டார்கள்.

இங்கே ஆச்சரியம் என்னவென்றால் ஒரு கைதி கூட தப்பிக்காது தாமும் சேர்ந்து தீயை அணைத்ததுதான். இந்த மனங்களையும், நேர்மையையும் வெல்ல எந்தக் கடவுளால் எந்த மதத்தால் முடியும்? காரணம் என்ன என என்மனம் படபடக்கத் தொடங்கியது. விடை விடைபெற்றுக் கொண்டே இருந்தது. கேள்வி கேள்வியாகவே தொடர்கிறது.

தீயணைப்புப் படையுடன், ஊடகங்கள், நகரப்பாதுகாவலர்கள் (பொலிஸ்) என எல்லோரும் கூடினார்கள். அக்கைதிகளிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொன்ன பதில்கள் நெஞ்சம் நெகிழ்ந்து ஆச்சரியத்தில் அதிரச்செய்தது.

மக்களின் பணத்தில் கட்டிய இந்த அழகிய சிறையை அழிந்துபோவதை நாம் விரும்பவில்லை. இதில் எமது வரிப்பணமும் இருக்கிறது. எமது பொருட்களை நாமே அழிக்கலாமா?

எத்தனை பேர் இப்படிச் சிந்திப்பார்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

நாங்கள் நாட்டையும், சட்டத்தை மதிக்கிறோம், தீர்ப்புக்கள் பிழையாகலாம் அதற்காக போராடுவோமே தவிர, மீண்டும் மீண்டும் குற்றம் செய்யமாட்டோம். தனிமனித உரிமைக்காகப் போராடும் வசதிகளை எம்நாடு செய்து தந்திருக்கிறது. நாம் திருந்திக் கொள்வதற்குத்தானே இங்கே வந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் தப்புக்களையே செய்து கொண்டே போனால் நாம் திருந்துவதும், வெளியே போவது எப்போது? நமது தண்டனைக்காலம் முடிந்ததும். நாமும் மற்றவர்களைப் போல் குற்றமற்றவர்களே. நாம் இங்கே மனிதத்துவத்துடன் அன்பாகவே நடத்தப்படுகிறோம்.

நாம் திருந்த வாய்ப்பளிக்கும் இந்தத் திருக்கோயிலை நாம் எப்படி அழிய விட முடியும்.

விடுதலைக்காகப் போராடுவது மட்டுமல்ல போராட்டம் தன் நாடு பொருளாதாரம், மனிதவுரிமை, சமவுரிமை, தேசியம், பெண்ணியம், நீதி என எல்லாத்துறைகளிலும் முன்னிற்கவும், தலைநிமிர்ந்து நிற்கவும் ஒவ்வொரு தனிமனிதனும் செய்யும் சிறு சிறு சேவையும் ஒரு விடுதலைப் போராட்டமே.

என்தாயகத்தின் நினைவு என் நெஞ்சை நெருட என் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுகிறேன். அங்கே நான் ஒர் இலங்கைத் தமிழன் என்ற என்னடையாளத்துடன் என்னை வாழவிட்டார்களா? குறைந்த பட்டசம் நாம் மனிதர்கள் மற்றவர்களும் மனிதர்கள் என்று எண்ண விட்டார்களா? நாம் இலங்கையர் என்று எண்ணுவதற்கு வழிவிட்டார்களா? நாம் தேசியமாய் ஒன்றாய் செயற்பட்டது எப்போ? இலங்கை என்ற தேசியம் கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் அதற்கு ஒரு யுகம் போதாது. தமிழர்களின் மனங்களை மட்டுமல்ல, சிங்களவர்களின் மனங்களையும் வென்று, அரசியல்வாதிகளால் ஆழமனதில் அழுத்திக் கீறிய இனவெறியை அழித்து, அழுக்கேறிய அள்ளூறாகி இதயப்பம்பகளைப் பிடுங்கி எறிந்து, முழுமையாக மாற்றி, மூளைகளில் மனிதத்தை ஊட்டி ஒரு அதியம் நடந்தாலன்றி ஐக்கிய இலங்கை என்றும் சாத்தியமாகுமா?

சட்டம் என்பது மக்களுக்காக மனிதருக்காக என்றில்லாது இனத்துக்காக மொழிக்காக மதத்துக்காக என்று ஆகும் போது தேசியம் குறுகி நடுத்தெருவுக்கு வந்து நடைப்பிணமாகிறது.

பேச்சுவார்த்தை என்பது போருக்கான தயார்படுத்தல், பயங்கரவாதம் என்பது ஒர் இனத்தை அழிப்பதற்குச் சொல்லும் சாட்டு. மனிதம் என்பது மதிக்கப்படாத வரை விடுதலை என்பதும், தீர்வுகள் என்பதும் என்றுமே சாத்தியமில்லாதது. தன்மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்பதில் சிங்களம் குறியாக இருக்கிறது. இலங்கைத் தமிழரை தாம் அழிப்போம். புலத்துத் தமிழன் புலத்தில் பொசுங்கிடுவான், வேறினமாய் மாறிடுவான். இதைத்தானே சிங்கள அரசும் விரும்புகிறது.

கம்பிகள் இல்லாச் திறந்தவெளிச் சிறையில் மதம், இனம், மார்க்கம், நிறம் எனும் கம்பிகளுக்குப் பின்னால் மனிதம் அடைக்கப்பட்டுக்கிடக்கிறது. மீட்பரைத் தேடுகிறோம் மனங்களைக்காணவில்லை. மீட்பர் என நம்பியவர்கள் எல்லோரும் ஆயுதங்களைக்காட்டிக் காசு பறித்தவர்களும் ஆயுதம் வாங்கக் காசு பறித்தவர்களாயுமல்லவா இருக்கிறார்கள். உலகமெனும் கொலைக்களத்தில் மனிதத்துக்குத் தூக்குத்தண்டனை.

ஏக்கத்துடனும், வேதனையுடனும், அங்கலாய்பபுடனும் துருவத்துக் குயிலாய் உறைபனியில் விறையுறும் கண்களை இறுக மூடி என்தேசத்தை நினைத்தபடி என்னிதையத்தை ஆறண்டால் சிறைக்குள் எரியவிட்டேன். முடிந்தது என் குறுங்கதை. முடியுமா? என்தேசத்தின் தொடர்க(வ)தை?

இது ஒர் உண்மைச் சம்பவம்.

நோர்வே நக்கீரா


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.