Tuesday 20 August 2013

சிறு குருவி இயந்திரம் ஒன்றை................!


பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.


நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும்.

இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.

இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும்.

சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Friday 16 August 2013

மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா.....!

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா.

மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.


மற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது 'வீரமுரசு' எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்!

இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராசம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்சு(ஸ்) கல்லூரியில் படித்தார்.

பல்கலைக்கழக நுழைவுரிமை பேறு (Matriculation )தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் காவல்துறை அலுவலகத்தில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது.

சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோசம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் நிறுவனம் தொடங்கினார்.

சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திரபால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்.

தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரசு மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது.

அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

அந்தக் காலத்தில் இந்து முசுலீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லாகு(ஹு)அக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், மேல் முறையீட்டில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும்.

சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று.

சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார்.

சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேசை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்சு(ஸ்) விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார்.

அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேசையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். 

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள்.

அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார்.

சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிதானிய அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது.

எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Tuesday 13 August 2013

தமிழர்கள் யார்.............?

இதுதான் முதலில் அதிகம் பார்க்கபடவேண்டியது .பல குழுக்கள் தமிழை பேசினர். ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சம் வேறுப்பட்டே இருந்தன. அப்புறம் அவர்களின் எழுத்துவடிவங்கள் வெவ்வேறானவை.

பல்லவ வட்டெழுத்து முறையில் இருந்தே தன் வரி வடிவத்தை தாய் ( தாய்லாந்தின் ) மொழி எடுத்துக்கொண்டது.


மூர்கள் என்று சொல்லப்படும் மொரக்காவை சார்ந்தவர்கள். ஐரோப்பியர்கள்; கிரேக்கர்கள்; எகிப்தியர்கள் என பல வர்தககுளுக்கள் அவர்களின் மொழிபயன்பட்டை அதிகபடுத்தியவை.

தமிழர்கள் இது போன்றே இருந்து வந்து உள்ளனர். இப்ன் பட்டுடா என்கிற அரேபியாவின் வழிப்போக்கன் கேரளம் வந்தது இன்னும் வரலாற்றில் உண்டு. ஆனால் பட்டுடவின் மரக்கலம் உடைந்த தருணத்தில் அவனுக்கு மன்னன் உதவில்லை என்றும் உதவினார் என்றும் பதிவு செய்யபடுகிறது.

தமிழர்களின் வணிக பொருள் திரவியங்கள். அதில் மிளகும் அடக்கம். மிளகு தமிழ் மண்ணில் மட்டுமே ( கேரளமும் ) விளைந்ததாக பதிய படுகிறது.

ஏசுவின் பிறப்பின் தருணத்தில் ஏசுவை காண வந்தது திரவிய வர்தர்கர்கள் - கிழக்கில் இருந்து வந்தவர்கள் - என்று நம்பபடுகிறது. இது உண்மையாக இருந்தால் - அவர்கள் தமிழர்கள் ஆக இருக்கலாம்.

சுமேரியர்களுடன் தமிழர்கள் தென் அமெரிக்காவில் கலந்துகொண்டனர் என்று சொல்லப்படுகிறது. மேக்சிகோவில் உள்ளவர்கள் அந்த மண்ணின் மனிதர்களைத்தான் திருமணம் செய்து கொண்டனராம். இது அங்கே விதி போல் கடைபிடிக்கபட்டிருக்கலாம். வெள்ளையர்கள் வந்த தருணத்திலும் இந்த நிலை என்று ஒரு முறை அறிந்துகொண்டேன்.

முதல் நாடுகள் (First Nations) என்று ஒரு குழு கனடா மண்ணில் உண்டு - இவர்கள் பூர்விகர்களுக்கு பின்னால் வந்திருக்கலாம் - இவர்கள் வணிக குழுவாக இருக்கலாம். எனக்கு இது தொடர்பாக முழுமையாக தெரியவில்லை.

மேக்சிகோவின் பல நகர் பெயர்கள் தமிழ் பெயர்களின் திரிபே என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். மலையூர் என்கிற ஊரின் பெயரே மலேசியா என்கிறது ஆங்கிலர்களின் ஆய்வு.

ஆக வெள்ளையர்களின் வரவிற்கு முந்தய வரலாற்றில் தமிழர்கள் என்று எந்த நிலையிலும் தமிழர்கள் அறியப்படவில்லை அவர்களின் குழு பெயரிலே அறியப்பட்டனர். மாயன்கள் - அபோர்கின்கள் - ஈழர்கள் - வேட்டுவர்கள் - நாகர்கள் - யட்சர்கள் ( இந்த பெயர் பற்றி ஆய்வு செய்வது நலம் ) என்று நிறைய குழுக்களாகவே தமிழன் அறியப்பட்டான்.

தமிழனாய் அல்ல. இன்றும் தமிழர்களை குழு பெயர் சொல்லி குறிக்கும் வழக்கம் மலையாள பூமியில் உண்டு. பாண்டிகள் நாம் சேரர்களுக்கு.

வழக்கம் போல் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் BBC (British Broadcasting Corporation) வாயிலாக தமிழர்களுக்கு உரிமை கொண்டாடக் கூடிய நிலப்பரப்பு தமிழர்களின் ஆள்மைக்குள் இருக்கவில்லை எனச்சொல்லுவதாகவே இந்த ஆய்வு தமிழர்கள்மீதும், தமிழர்கள் வரலாற்றின் மீதும் திணிக்க்கப்பாடுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. 

தமிழ்மக்களே எங்களுக்கு என சொந்த நாடு இல்லாத காரணத்தால் உலகமும், தமிழர்களை அழிக்க நினைக்கும் இனங்களும் தங்களது அரசு, தமது கட்டுப்பாட்டினுள் இருக்கும் ஊடகங்கள் ஊடாகவும் தமிழர்களின் வரலாற்றையும் தமிழ்மக்கள் சார்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒடுக்குவது, அழிப்பதே நோக்கமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday 10 August 2013

ஈழத்தில் தமிழர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன...?

நடுங்க ஆரம்பித்துதது விட்டதா இலங்கை ?

இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பேருந்து ஓட்டுனரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரசு, ஒரு பேருந்து ஓட்டுனரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பேருந்து ஓட்டுனரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம்பிள்ளை.

இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா!
(சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!)


ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் ‘இனப்படுகொலை’ என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். அந்த ஒற்றைப் பெண்மணியால் உயிர்த்திருக்கிறது அந்தக் கடுமையான குற்றச்சாட்டு. ‘சர்வதேச சுதந்திர விசாரணையின் மூலமே இலங்கையில் என்ன நடந்தது என்கிற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்’ என்று நவ்விப் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் நவநீதம்பிள்ளை சொல்கிற போதெல்லாம் வியர்த்துப் போகிறது புத்தனின் புத்திரர்களுக்கு!

இத்தனைக்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் எவரும், கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ பேசவில்லை. விசாரணையே இல்லாமல் ராசபக்சேவைத் தூக்கில் போடு என்றோ, எங்கள் சகோதரிகளைக் கற்பழித்த அவனது உறுப்புகளையோ துருப்புகளையோ உப்புக் கண்டம் போடவேண்டும் என்றோ கோரவில்லை எவரும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்றுதான் சொல்கிறோம். தன்னுடைய உயிர் நண்பனின் அனுக்கிரகத்தால் இத்தனை நாளாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்காதிருக்கிறது இலங்கை. இன்னும் நீண்ட நாளைக்கு இந்த நாடகம் நீடிக்காது – என்பதை உணர்த்துவதாக இருக்கிறது நவநீதம் பிள்ளையின் விசயம்.

அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்கிறார் நவ்விப் பிள்ளை. மழையில் நனைவதற்கு முன்பே சளியில் அவதிப் படுகிற சுவாசகாசம் (Asthma) நோயாளி மாதிரி, இப்போதே நெளிந்துகொண்டிருக்கிறது ராசபக்சே அரசு.

நவ்விப் பிள்ளையின் பாதுகாப்பு ஆலோசகர், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க இலங்கைக்கு வந்திருக்கிறார். நடந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான சரத் பொன்சேகா ‘நான் நவ்விப்பிள்ளைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். நவ்விப் பிள்ளை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தடையின்றிப் போகலாம் – என்று அறிவித்திருக்கிறது இலங்கை. எந்த இலங்கை? ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவைக் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த அதே இலங்கை. அந்த அளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது அது.

நவ்விப் பிள்ளையின் இலங்கை விசயத்துக்கு முன்னோட்டமாக, அவர் அனுப்பிய ஐ.நா. குழு ஒன்று சென்ற ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றது. ‘இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையே நடத்திக்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மை அற்றது. இலங்கை அதிகாரிகளின் விசாரணை பாரபட்சமானது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் – என்று வாக்குறுதி கொடுத்த இலங்கை, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றெல்லாம் குற்றஞ்சாட்டிய அந்தக் குழு, சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்வதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவின் அறிக்கை, அடங்காப்பிடாரி இலங்கையின் பிடரியில் விழுந்த அடி.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்புக்குள் இருந்துகொண்டே, ‘இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஐ.நா. தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டது’ என்று நவநீதம் பிள்ளை ஒளிவு மறைவின்றிப் பேசியது, ஐ.நா.வுக்குள் இருக்கும் இலங்கையின் கர்த்தாக்களை (agent) அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னைத் தானே விசாரிக்க இலங்கை அமைத்த எல்.எல்.ஆர்.சி. விசாரணை ஆணையம் ஒரு மோசடி – என்பதையும், வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் – என்கிற உண்மையையும் உலகறிய எடுத்துச் சொல்லி இலங்கையை மேலதிக அச்சத்தில் ஆழ்த்தினார் அவர்.


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்க வேண்டியது. பல்வேறு நெருக்கடிகள் மூலம், அவரது வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது இலங்கை. அவர் வருவதை நீண்ட காலத்துக்குத் தடுக்க முடியாது – என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் அவரைச் சந்தித்துப் பேச ஒரு குழுவை அனுப்பத் தீர்மானித்தது. அந்தக் குழு, நவ்விப் பிள்ளையிடம் – தமிழர் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், மீள் குடியேற்றம், மறு சீரமைப்பு – பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும் என்று செய்திகள் வந்தன. (இந்த வார்த்தைகளுக்கான ராயல்டியை நாச்சிகளுக்கும் நா.சா.க்களுக்கும் கொடுத்தார்களா இல்லையா!) இதுபோன்ற வார்த்தை சாலங்களால் ஏமாந்துவிட நவ்விப் பிள்ளை ஒன்றும் அமெரிக்காவோ மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியோ கிடையாது என்பதை, இலங்கை இப்போது உணர்ந்திருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டதும், நவநீதம்பிள்ளை சொன்ன வார்த்தைகள் மறக்க இயலாதவை. “உலகின் எந்த மூலையில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான குரலாக மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்” என்றார் அவர். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஐ.நா.வில் பொறுப்பேற்கும் முன், சுமார் 8 ஆண்டுகள், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரித்த சர்வதேச குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர்தான், அதன் தீர்ப்புரையை எழுதியவர்.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ஜீன் பால் அகாய்சு – என்பவருக்கு அந்த நடுவர் மன்றம் கொடுத்த தண்டனை உலக வரலாற்றில் மிக முக்கியப் பதிவு.

1994ல், ருவாண்டா நாட்டில் டூட்சி இனத்தவருக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. அந்த நாட்டின் சனநாயகக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர், ஜீன் பால் அகாய்சு. முன்னாள் ஆசிரியரான அவர், சமயோசிதத்துக்குப் பெயர்பெற்றவர். டாபா பகுதி மேயராக இருந்த அவரது பொறுப்பில்தான் அந்தப் பகுதி காவல்துறை இயங்கியது. அவரது பகுதியில், கூடூ இனத்தைச் சேர்ந்தவர்களால் டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பாலியல் வன்முறை முதலான பல்வேறு கொடுமைகள் வேறு. அகாய்சுவால் அந்தக் கொலைகளையும் கொடுமைகளையும் தடுக்க முடியவில்லை.

விசாரணையில், அந்தப் படுகொலைகளைத் தடுக்க அகாய்சு முயலவேயில்லை என்பதும், அவரது மேற்பார்வையிலேயே அவை நடைபெற்றன என்பதும், கொல்லப்பட வேண்டிய டூட்சி இனத்தவரின் பட்டியலை கூ(ஹூ)டூ இனத்தவருக்கு அவர்தான் கொடுத்தார் என்பதும், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த டூட்சி இனத்தவரைத் தேடிக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதும் அம்பலமானது. (ஈழத்திலும் இதெல்லாம் அம்பலமாகாமல் போகுமா என்ன?)

இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு சாம்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அகாய்சு. ருவாண்டா இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒப்படைப்பதற்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்திய முதல் ஆப்பிரிக்க நாடு சாம்பியா தான்.

அகாய்சு மீது, இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பான யெனீவா மாநாடு மீறல் – உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

“அகாய்சு-க்கு நடந்த கொலைகளில் நேரடித் தொடர்பு இல்லை, அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரமும் இல்லை. டாபா மக்களின் வெறிச் செயல்களுக்காக, அகாய்சு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. நவநீதம்பிள்ளை இடம்பெற்றிருந்த நடுவர் மன்றம் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 – ல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடிப்படையில், அகாய்சுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அகாய்சு, இப்போது மாலி சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இனப்படுகொலை – என்பதைக் குறிக்கும் ‘இனப்படுகொலை’ என்கிற வார்த்தை 1944க்குப் பின்தான் உருவானது. ஜெனோ – என்பது ‘இனம்’ அல்லது ‘இனக்குழு’ என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை. சைட் – என்பது படுகொலையைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை.

போலந்து நாட்டு யூதரான சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் தான், நாசிக்கள் நடத்திய இனப்படுகொலையைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை முதல்முதலாகப் பயன்படுத்தியவர். அவரது தொடர் முயற்சிகளால், 1948ல், இனப்படுகொலையைக் கொடிய குற்றமாக ஐ.நா. அறிவித்தது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கவும் தண்டிக்கவும் 1948ம் ஆண்டே யெனீவா மாநாடு உருவானாலும், அதன் அடிப்படையில் முதல் முதலாகத் தண்டனை வழங்கியது, நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த ருவாண்டா இனப்படுகொலைக்கான நடுவர் மன்றம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. ஒரு பட்டிமன்றத்திலேயே கூட திட்டவட்டமான தீர்ப்பைத் தெரிவிக்காமல், வழவழா கொழகொழா என்று தீர்ப்பு வழங்கும் நாம், அதன் சில பகுதிகளைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

“படுகொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மானுட விரோதச் செயல்கள் அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்……..

கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை இனப்படுகொலைக் குற்றமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்……

டூட்சி இனத்தை அழித்து ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பழிப்புகள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்திருக்கின்றன. டூட்சி இன மகளிர் மட்டுமே இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து, இந்தப் பாலியல் பலாத்காரங்கள், டூட்சி இனத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது……

ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரை பலவந்தப்படுத்தி உடல்ரீதியாக பலாத்காரம் செய்வது – கற்பழிப்பு. அதுவும் இனப்படுகொலையே! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சிறிது சிறிதாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிற இத்தகைய குற்றம் நிச்சயமாக இனப்படுகொலை தான்”……………………..

இவையெல்லாம் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பின் சில பகுதிகள். (டூட்சி என்று வரும் இடங்களில் ‘தமிழ்’ என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்… உள்ளம் கொதிக்கும்!)

போர்க்களங்களில் கற்பழிப்பெல்லாம் சகசம் – என்று சொல்லும் வக்கிரபுத்தி பிடித்த மிருகங்களை நவநீதம் பிள்ளை கடுமையாகச் சாடியிருந்தார். ‘கற்பழிப்பு என்பது போரில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சின்னம் கிடையாது. இனி, அது கொடிய போர்க் குற்றம், இனப்படுகொலையாகவே அது கருதப்படும்’ என்றார் பிள்ளை.

அந்த நவநீதம் பிள்ளை தான் இப்போது இலங்கைக்கு வரப் போகிறார். உள்ளூரில் ஓணான் பிடித்து அடுத்தவன் வேட்டிக்குள் விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மகிந்தன் குழுவினருக்குக் காய்ச்சல் வருமா வராதா?

இப்போது பேருந்து ஓட்டுனரின் விசயத்துக்கு வருகிறேன். நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர். அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும், அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர் இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றது சாதாரண சாதனையல்ல!

பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்கு எதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.

1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு, 1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.

முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம்பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் அவர்தான்.

வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. ‘நீதிபதியின் அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது’ என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின், நகைச்சுவை உணர்வுடன்!

2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத் தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை, அந்தப் பொறுப்பில் இருப்பார். அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இலங்கை.

நவநீதம் பிள்ளையின் நேர்மையும் அஞ்சாமையும் அனுபவமும் அறிவும் தெளிவும், செய்த இனப்படுகொலையை, நடத்திய பாலியல் வன்முறைகளை மூடி மறைக்க இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து எறிந்துவிடும் என்கிற அச்சத்தில் இலங்கையும், நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.

அன்று நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நவநீதம் பிள்ளை, நீதிபதியாகவே அந்த அறைக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இன்று, இலங்கைக்குள் நுழைவதற்கான தடங்கல்களை எல்லாம் தகர்த்து அங்கே செல்கிறார். அங்கும் அவர் வரலாறு படைப்பார் என்பது நிச்சயம். ருவாண்டாவில் டூட்சி இன மக்களுக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?

காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் இலங்கைக்கு. இப்படியொரு இக்கட்டான நிலையில் நவநீதம் பிள்ளை வருவதைக் குறுக்குவழிகளில் தடுக்க முயல்வது தற்கொலை முயற்சியாகி விடும் என்பதால், அத்தகைய முயற்சிகளில் இலங்கை இறங்காது.

இதையெல்லாம் பேசும் இந்த நேரத்தில், தமிழினத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையே உள்ள டூட்ஸி இன மக்களுக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே கிடைத்த நீதி, 4 ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எழும். நீதி கிடைப்பதில் ஏற்படும் இந்தக் காலதாமதத்துக்குக் காரணம் யார் யார்? மூன்று விரல்களை நீட்ட வேண்டியிருக்கிறது….

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு.........!


யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, க(ஹ)ம்மன் கீ(ஹீ)ல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேசுவரத்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம்.   

வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்கு ஆசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.


காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.

ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.

ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)

நயினாதீவு கல்வெட்டு

1).............. நாங்கள் .......................

2) வந்து ஊராத்துறை
3) (யில்) பிரதேசிகள் வந்து
4) இருக்க வேணுமென்றும்
5) அவர்கள் ரஷைப்படn
6) வணுமென்றும் பல தை
7) றகளில் பிரதேசிகள் வந்து நந்து
 றையிn(ல) கூடவேணு மென்று
9) (ம்) நாம் ஆனை குதிரை மேல் ஸ்நெஹ
10) (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை
11) கொடுவந்த மரக்கலங் கெட்டது
12) ண்டாகில் நாலத் தொன்று பண்டா
13) (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும
் 14) (உ) டையவனுக்கு விடக்கடவதாகவு
15) (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண்
16) டாகில் செம்பாகம் பண்டாரத்துக்
17) (கு) க் கொண்டு செம்பாகம் உடைய
18) (வ) னுக்கு விடக்கடவதாகவும் இவ்
19) வவஸ்தை (ரு) ள்ளதனையுங்க
20) வில்லிலுஞ் செம்பிலும் எழுத்துவெ
21) ட்டி வித்து இவ்வவஸ்தை செய்துங் கு

சமஸ்கிருதப் பாகத்தின் மொழி பெயர்ப்பு

பெயர்ப்புவரி 22 – 23 சகல சிங்களத்துக்கும் சக்கரவர்த்தி யாகிய பகை அரசர்களுக்கு காட்டுத் தீயாயாகிய வேபராக்கிரம புஜோ (பாஹி)....

இந்திரபாலா.கா.(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், 1969

ஸிகரஹா என்பது பன்றி எனப் பொருள்தரும் சமஸ்கிருதச் சொல். சூகரம் என்று தமிழ் நிகண்டுகளிலும் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பிராகிருத வழக்காறுகளில் இது ஹ{ரா என்றும் ஊரா என்றும் உருமாறும். சிங்களத்தில் இது வழக்கிலுள்ள சொல். ஸ{கரதித்த (ஸ{கர தீர்த்தம்) என்று சூளவம்சம் குறிப்பிடுவது பன்றித்துறை என்பதற்குச் சமதையானது. பன்றியின் காற்குளம் என்ற பொருளில் கடற்கோட்டைக்கு ஒல்லாந்தர் ஹம்மன் ஹீல் (ர்யஅஅநnhநடை) எனப் பெயரிட்டது. கோட்டையின் வடிவமைப்பினால் மாத்திரம் அல்ல என்றே தோன்றுகின்றது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கடற்கோட்டைப் பகுதியைக் கடந்து சென்ற பன்நாட்டுக் கடல்வணிகத்தின் தொல்லியற் தடங்களை நெடுந்தீவில் பெரியதுறை அருகிலுள்ள வெடியரசன் கோட்டையிலும் காரைநகரில் கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள வேரப்பிட்டியிலும் பொன்னாலையில் சம்புத்துறைக்குப் பக்கத்திலுள்ள திசைமழுவையிலும் காணலாம். பழைய துறைகளை ஒட்டியுள்ள இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் பௌத்த சின்னங்கள், கடல்வணிகத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் அக்காலத்தில் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.

இருப்பினும், இப்பகுதியின் கடல்வழித் தொடர்புகள் பௌத்த தடயங்களின் காலத்திற்கும் முந்தியவை என்பதை, காரைநகரின் உட்புறத்தில் களபூமியில் கிடைத்த பெருங்கற்காலத் தடயங்களும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள வேலணைத்தீவின் தென்கிழக்கில் சாட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் கிடைத்த மட்கலத்தடயங்களும் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாம் இராசாதிராசசோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு

இவன் தன் படைநிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம் , மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளும் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மருமகனராய் ஈழ ராச்சியத்துக்குங் கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனஞ் செய்து இவரையும் இவருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகலிட்டுப் புலைச்சேரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும், அழித்து ஈழத்தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங் கொண்டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காதமேற்படவுந் தென் வடல் முப்பதின்காதமேற்படவும் அழித்து இத்துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக்கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் தமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரியம் எல்லாப் படியாலும் இவன் (சோழத்தளபதியாகிய பழையனுருடையான வேதவன் முடையான் அம்மையப்பனான ‘அண்ணன் பல்லவராயன்) அழியச் செய்வித்த படிக்கும் (சதாசிவபண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம்: 1967)

12ஆம் நூற்றாண்டில் ஊர்காவற்றுறையின் கேந்திர, வணிக முக்கியத்துவங்களை இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன. இரண்டாம் இராஜாதிராஜசோழனது (1163-1178) திருவாலங்காட்டுக் கல்வெட்டு, சோழர்களுக்கும் பராக்கிரமபாகுவிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் படைத்தளஙக்களுள் ஒன்றாக ஊராத்துறை இருந்ததை அறியத்தருகின்றது.

தற்பொழுது நயினாதீவுக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள, முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ் சமஸ்கிருதக் கல்வெட்டு, ஊர்காவற்றுறையில் பன்நாட்டு வணிகம் ஊக்குவிக்கப்பட்டதைத் தெரியப்படுத்துகின்றது. கடற்கோட்டைக்கு அணித்தாக, நீரோட்டங்கள் கலக்கும் அபாயகரமான ஏழாற்றுப் பிரிவில் அடிக்கடி மரக்கல விபத்துக்கள் நடந்ததையும் இக்கல்வெட்டைக் கொண்டு ஊகிக்க முடிகின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் சிதைந்த மரக்கலங்களில் வந்த பொருட்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. சர்வதேசக்கடல் சார் சட்டங்களின் (ஐவெநசயெவழையெட ஆயசவைiநெ டுயறள) தோற்றுவாய்க்குரிய எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.

காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும், முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில், வியாவில் என்ற இடத்தில், ஐயனார் கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது.

இக்கோயில், போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை, காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும் செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)

காரைநகர்ச் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...

வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று, சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு, பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)

நானுமெனது தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது. முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர் கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார் கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின் வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை இடிக்க வரவில்லை....

(---சூரியநாராயணக் குருக்கள்)

------ பின்னர் போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது. அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர் நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப் பூசை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில அறையில் வைத்து இரகசியமாய்ப் பூசை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும் இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)

(ஆன்ம தர்சநம், கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)

வரிசையாக ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று, கடற்கோட்டையைப் பூதத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக் கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.

அழிபாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை, கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால் மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம் இராசேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை அறியத்தருகின்றது.

கடற்கோட்டைக் கல்வெட்டுக்கள்

முதலாவது கல்வெட்டு

ஸவஸ்திஸ்ரீ
ஈழமு(ழு)
(ங்)துவ்கொ
ண்டு ஈழ
த்தnசெர
யும் பெண்

டிர் பண்டார
மும் பிடிச்
சுக் கொடுபொ
ன அதிகார
த் தண்டநாச
கனார் ஐய

(ங்) கொண்டn (சொ)
(ழ) மூவேந்(த)
வெளார் மா
தொட்டமான
இராசராசபுர

ஸ்வ்திஸ்ரீ
ஈழமான மு
ம்முடி சொழ
மண்டல...
...ண...
குல....

இந்திரபாலா. கா:(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் 1969)

பாய்க்கப்பல் போய் நீராவிக்கப்பல் வந்த காலத்தில், பாக்குநீரிணையின் ஆழம் போதாததால் ஊர்காவற்றுறை பன்நாட்டு முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும், இந்தியாவின் கிழக்குக் கரையுடன் வணிகம் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது.

யாழ்ப்பாணப் பரவைக்கடலின் சங்கு வங்காளம் வரை சென்றதையும், விசாகப்பட்டினத்து வடக்கன் மாடு இங்கு வந்ததையும் ஊர்காவற்றுறையில் இன்றும் காணப்படும் சங்குக் கழிவுக்குவியல்களாலும் இடிந்து போன கால்நடைத் தொற்று நோய்த்தடுப்புக் கட்டிடங்களாலும் அறிந்து கொள்ளலாம்.

ஊர்காவற்றுறையில் இறக்கப்பட்ட சரக்கு, மாட்டு வண்டித் தொடர்களில் அனுராதபுரம், கண்டிவரை சென்றதை எனது பாட்டனார் கூறக் கேட்டிருக்கின்றேன்.

காலனித்துவம் போய்த் தேசியங்கள் வந்த காலத்தில் ஊர்காவற்றுறையின் வணிகம் நின்று போனாலும் கேந்திர முக்கியத்துவம் போய்விடவில்லை வணிகத்தையும் கடற்பாதைகளையும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவைப்பட்ட கேந்திர அமைவிடம் அவற்றைத் தடுக்கவும் தேவைப்பட்டது.

வடபுலத்திற்கான இலங்கைக்கடற்படையின் தலைமையகம் கடற்கோட்டைக்கு மிகவும் அண்மித்த நிலப்பகுதியான காரைநகர், நீலங்காட்டில் அமைந்தது. இக்காரணத்தினாலேயே, 1971 ஆம் ஆண்டு J.P. கிளர்ச்சியின் போது கைதான ரோகண விசயவீரவும் சகாக்களும் பாதுகாப்புக் கருதி கடற்கோட்டையிலேயே சிலகாலம் சிறைவைக்கப்பட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மிகப்பழங்காலந்தொட்டு மேற்கிற்கும் கிழக்கிற்குமான கடற்பாதை, மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையின் ஊடாகச் சென்றது. அபாயகரமானது என்பதால் ஆழ்கடல் பாதைகள் ஆதிகாலத்தில் இயன்றளவு தவிர்க்கப்பட்டன. இலங்கையின் தென்கிழக்கு மூலையில் , காந்தப்பாறைகள் என அறியப்பட்ட காரணமாக இலங்கைப் பாதுகாப்பும் மன்னார் வளைகுடாவின் முத்தும் பாக்கு நீரிணையின் சங்கும் கிழக்கையும் மேற்கையும் இங்கு சந்திக்க வைத்தன.

இந்தியாவின் மேற்குக் கரையினரும் கிழக்குக் கரையினரும் பரஸ்பரம் வந்து போனதும் கிரேக்கரும் உரோமரும் வந்ததும் அரபுக்களும் சீனரும் வந்ததும் பின்னர் ஐரோப்பியர் வந்ததும் மன்னார் வளைகுடா பாக்குநீரிணைக் கடற்பாதையின் ஊடாகவே பெரிதும் நடைபெற்றதை அதன் இருபுறக் கரைகளிலும் காணப்படும் எண்ணிறந்த தொல்லியற் தடங்களால் அறிந்து கொள்ளலாம்.

இராமர் அணை என்றும் ஆதாமின் பாலம் என்றும்அழைக்கப்படும் சேதுவை இவர்கள் மன்னார்த்தீவிற்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள கால்வாயால் அல்லது இராமேசுவரம் தீவுக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயால் கடந்தனர்.

பெரிய துறைமுகம் எனப்பொருள் தரும் மாதோட்டம் என்ற மாந்தையிலும் பாம்பன் கால்வாயின் பெருநிலப்பகுதியில் உள்ள அழகன் குளத்திலும் அறியப்பட்ட தொல்லியற் தடங்கள், அவை பல நூற்றாண்டுகளாக பல நாட்டினரும் வந்துபோன பெரும் நகரங்களாக விளங்கின என்பதைத் தெரியப்படுத்துகின்றன.

ஏறத்தாழ ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் மாந்தைக் கால்வாய் சேறடைந்து போக, பாம்பன் கால்வாய் மட்டும் தொடர்ந்து இயங்கியது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய வணிகர்களான செட்டியர்களின் தாயகம் எனப்படும் செட்டிநாடு, பாம்பன் கால்வாய்க்கு வடக்கிலும் மற்றொரு பாரம்பரிய வணிகர்களான முசுலீம்களின் பழைமை முக்கியத்துவம் வாய்ந்த நகரமான கீழக்கரை, பாம்பன் கால்வாய்க்குத் தெற்கிலும் அமைந்திருப்பது தற்செயலானவ அன்று.

1860 இல் நீராவிக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. 1869 இல் சுயெசு(ஸ்) கால்வாய் திறக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகமும் இலங்கையைச் சுற்றி செல்லும் கடற்பாதையும் தனி முக்கியத்துவம் பெற்றன. பாக்குநீரிணைப்பாதை அறவே கைவிடப்பட்டது. துறைமுகங்கள் செல்வாக்கிழந்தன. வணிகப்பெரு மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையை மீண்டும் பன்நாட்டுக் கடற்பாதையாக்கும் சேதுசமுத்திரத்திட்டம் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருவதொன்று. சேதுசமுத்திரத் திட்டம் வந்தால், கொழும்பின் இழப்பைச் சரி செய்யவும் தூத்துக்குடியுடன் போட்டியிடவும் காங்கேசன்துறையை விரிவாக்கவென்று, அறுபதுகளின் பிற்பகுதியில், டட்லிசேனநாயக்கா வந்து காங்கேசன்துறை மருத்துவமனைப் பகுதியில் அத்திவாரமிட்டதைப் பார்த்து நினைவுக்கு வருகிறது. அத்திவாரக்கல் இப்பவும் இருக்கலாம்.

இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் முனைப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா மட்டும், தன்னுடைய கடற்பகுதியில் செய்யப்போவதாக , பல்வேறு அபிவிருத்திக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதுகாப்பு என்பதே முனைப்பான காரணம் என்பதில் ஐயமில்லை. இதில், தனக்குப் பங்கு என்ன என்பது இலங்கை அரசின் கவலை.

இருவருக்கும் பொதுவான பாதையாக இருக்கலாம் என்றும் இலங்கை அரசின் நிலப்பாலத்திட்டத்தை இதனுடன் இணைக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல பன்நாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளக் காத்திருக்கின்றன. டெல்லியிலும் சென்னையிலும் கொழும்பிலும் இதைத் தீர்மானித்துவிடலாம் என்ற போக்கும் தெரிகின்றது.

எது எவ்வாறாயினும் சேதுசமுத்திரத் திட்டத்தால் வரப்போகும் கால்வாய் எங்கள் தீவகத்தின் புழைக்கடையின் ஊடாகத்தான் போகப் போகின்றது. பாக்கு நீரிணையின் பாரம்பரியப் பங்காளிகள், அதன் இருபுறமும் வாழும் மக்கள், பாக்குநீரிணை இவர்களது பொருளாதார உரிமை மட்டுமல்ல, பண்பாட்டு உரிமையும் கூட, திட்டத்தில் இவர்களுக்குப் பங்கு என்ன என்பது தெளிவாகவில்லை.

பாதிப்பு என்ன என்பதும் தெளிவாகவில்லை. சூழல், பொருளாதார, பண்பாட்டு விளைவுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. எங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு!.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Friday 9 August 2013

ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம்.......!

அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு அகத்தியர் இலங்கை" எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர்.

அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.


அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர்.

அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.

இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு.

ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.

இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர்.

மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.

ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.

எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது.

இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது......மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

விசயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விசயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.......


சிங்கள இனத்தின் தோற்றம்

வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று.

சிங்கத்தில் இருந்து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.

 இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள்.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விசயன் ஆவான்.விசயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விசயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விசயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விசயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான்.

அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வந்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விசயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள்

அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விசயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விசயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். 

இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விசயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். 

கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விசயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர்.

தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.

தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.


பரதன் என்னும் தமிழ் அரசன்

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான்.

இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்; கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;.

'இட்டார் பெரியோர்,
இடாதார் இழிகுலத்தோர்"

என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயறகரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.


தமிழ் கூறும் நல்லுலகம்

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள். 

தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கலியாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள்.

பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான்.

இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர். கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகன் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான்.

ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்; நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன.


இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி

சுகேசனின் ஆட்சி

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். 

இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன.

இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான்.

இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர்.

சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும்.

பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.


 இராவணனும் இராமாணமும்

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை.

ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். 

எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேசுவரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூசிப்பது சிவ தூசனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். 

சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான்.

இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீசணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீசண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும்.

எமது மக்கள் விபீசணனைப் போன்று "கோடாரி காம்புகளாக மாறக்கூடாது". எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், "வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும்" மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீசணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விசயனின் விசயத்துடன் ஆரம்பிக்கின்றது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன்.....!

கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன் நின்ற அரிய புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு உள்ளே )


ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன்  ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய   படங்களை  தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண  பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம்.

தன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும் எடுத்த பதவி தான் கேணல் ..அதன் பின்பு ஆட்டை கடித்து மாட்டை கடித்து ராம்போ பிரசாத் ஐ கடித்து நீலனையும் கடித்து  இறுதியில் தலைவரையும் கடித்தது அந்த நரி ??அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி இன்று  அமைச்சராக உள்ளது.

பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி  இன்று கூறுகிறது மாற்றத்தை  ஏற்படுத்தினாராம்?அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் ??வாயை திறந்தாலே பொய் ?? 

ஒரு இனத்தின் துரோகிகள் அதன் எதிரி இனமான மற்றைய  இனத்தின் கதா  நாயகர்களாக பார்க்கப்படுவார்கள் அதுவே  இன்று இலங்கையில் நடைபெறுகிறது.
தமிழினத்தின் அந்த துரோகிக்கு ஆதரவளிப்பவன் தமிழன் இல்லை என்பதை விட அவன் மனிதனே இல்லை என்றே கூறவேண்டும் ..

ஆரையம்பதி மண்ணில் அணையாத ஒளி விளக்காய், மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் போராளி - ரம்போ பிரசாத் அல்லது வசந்தன் (கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார்). 

ரம்போ பிரசாத் அல்லது வசந்தன் 
தாயின் மடியில் : 24.05.1964     -     வீர சாவு : 16.09.1991 

தென் தமிழீழத்தில், வீரம் செறிந்த ஆரையூர் மண்ணில் திரு / திருமதி கிருஷ்ணபிள்ளை அவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாக 24.05.1964 அன்று பிறந்த பிரசாத், தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த ஊரில் அமைந்திருந்த ராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்று, பின்னர் மட்டுநகர் இந்து கல்லூரியில் உயர் கல்வியை  பயின்றார். 

தமிழ் ஈழத்தின் எழுச்சியில் விடுதலையை நோக்கிய பயணத்தில் 1983 இல், கோட்டை கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கப்டன்.பிரான்சிஸ் அண்ணனின் தொடர்பு மூலம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்தியாவில் ஐந்தாவது பயிற்சி பாசறையில் கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி, லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), மேஜர்.அகத்தியர் (கோட்டைக்கல்லாறு), மேஜர்.குலதீபன் (களுவாஞ்சிகுடி) ஆகியோருடன் லெப்.கேர்ணல்.ராதாவிடம் படைத்துறை பயிற்சி பெற்றுக்கொண்ட இவர், ராதா அண்ணனின் பல பாராட்டுக்களை பெற்று இருந்தார்.

இப் பயிற்சி பாசறையில் திறமையான பயிற்றுனராக ராதா அண்ணனால் இனம் காணப்பட்டதனால், ஈழ மண்ணில் இந்திய படைகள் வெளியேறிய பின்னர் நடந்த பாரிய பயிற்சி பாசறைக்கு பயிற்சி ஆசிரியனாக மட்டக்களப்பு மண்ணில் நியமிக்கப்பட்டார். 

ரம்போ பிரசாத் அவர்கள் 1986 - 88 காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் வாழைக்காலை முகாம் பொறுப்பாளராக இருந்தார். இக் காலப்பகுதில் கொக்கட்டிசோலையை அழித்தொழித்து, ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் போது, புளுக்குனாவை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை விசேட அதிரடி படையினரை தாந்தாமலை வீதியில் வழி மறித்து தாக்கி துவம்சம் செய்த பெருமை இம் மாவீரனுக்கும் அவனது படையணிக்குமே சாரும். 

ரம்போ அவர்களின் பெயர் சொல்லும் தாக்குதல்களின் ஆரம்பமே, மாங்கேணி இலங்கை இராணுவ முகாம் தாக்குதல். இத் தாக்குதல் லெப்.கேணல்.குமரப்பாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தது, மேலும் இவ்வணியில் வீரம் செறிந்த அருணா அண்ணன், கமல் அண்ணன், மற்றும் பல மூத்த உறுப்பினர்களுடன் ரம்போவும் பங்கு கொண்டு தனது வீரத்தை சிறப்பாக பறை சாற்றினான்.

இப்படி துணிவுடன் களமாடிய பிரசாத், வட தமிழ் ஈழத்தில் 1987 இல் JR ஜெயவர்த்தன, லலித் அத்துலத் முதலி ஆகியோரால் ஆரம்பிக்க பட்ட Liberation ஆபரேஷன் இன் பொழுது, தேசிய தலைவரின் கட்டளைக்கமைய தமிழீழத்தின் சகல பகுதிகளில் இருந்தும் படையணிகள் யாழ் மண்ணை மீட்க புறப்பட்டனர்.

அந்த கால கட்டத்தில், மட்/ அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த லெப்.கேணல்.குமரப்பா தனது படையணியோடு மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டார். அதில் ரம்போ பிரசாத், லெப்.கேணல்.ரீகன், கப்டன்.சபேசன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். இவர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளும் யாழ் மண்ணை சென்றடைந்தவேளை, தேசிய தலைவரின் நெறிப் படுத்தலின்கீழ் 05 ஜூலை 1987 அன்று தமிழீழ வரலாற்றில் முதல் முறையாக கரும்புலி தாக்குதல் சிங்கள இராணுவ படைகளுக்கு எதிராக வட தமிழ் ஈழத்தில் உள்ள நெல்லியடியில் அமைந்திருந்த பாரிய இராணுவ முகாமில் மேட்கொள்ளபட்டது.

இதை கப்டன்.மில்லர் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, தயாராக இருந்த விடுதலை புலிகளின் படை அணிகள் சிறப்பாக போராடி சிங்கள இராணுவத்தை அழித்தொழித்து, இந்த இராணுவ முகாமை தம்வசம் ஆக்கிகொண்டனர். இந்த இராணுவ முகாம் தாக்குதலின் பொது, இம் மாவீரன் பிரசாத் அவர்கள் கனரக ஆயுதங்களை இலகுவாக கையாண்டு இருந்ததினால், இவரை அன்று தொடக்கம் ரம்போ என்று அடையாள பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். 

உலகின் முதல் தற்கொலை படைகூட தமிழன்தான் என்பதில் சந்தேகமில்லை. - மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்யாருமேயாகும். 

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்து பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர். இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்... 

ரம்போ பிரசாத் அவர்கள் முன்னின்று பல கண்ணிவெடி தாக்குதல்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிரான அதிரடி வழி மறிப்பு தாக்குதல்கள் என இவரது வீரம் ஈழ மண்ணில் பறை சாற்றி நின்றது. மேலும் இந்திய ராணுவம், ஈழ மண்ணை விட்டு ஓட்டம் எடுத்த போது, ஒட்டுக்குழுக்களின் முகாம்களை மேஜர்.அண்டனியின் தலைமையில் தாக்கி அளித்ததில் பெரும் பங்காற்றிய தளபதி ரம்போ பிரசாத்தாகும்.

இவர் வருடம் தோரும், கண்ணகை அம்மன் கோவில் சடங்கு காலம் மட்டும் தான் பிறந்த மண்ணை மிதித்து, தனது சொந்தங்கள், பாடசாலை நண்பர்கள், தனது பாடசாலை ஆசிரியர்கள் என சகலரையும் சந்தித்து கொள்ளுவது வழக்கம். இதட்கேன்று, இவர் வருடத்தில் ஒதுக்கிகொள்வது இந்த இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே. 

மட்டக்களப்பில் விடுதலை பயணிப்பில் பணியாற்றிய வேளையில், இவருடன் சேர்ந்து இந்திய மண்ணில் பயிற்சி பெற்றவர்களான கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி (கல்முனை), லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), ஆகியோர் மிக முக்கிய பொறுப்புகளை வகுத்தவர்கள் ஆகும். அன்றைய நிலையில் தேசிய தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்த மட்டக்களப்பு தளபதியால் ஒதுக்கப்பட்டார் இச் சிறந்த வீரம் மிக்க போராளி.

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து விலகி குருநாகல் பிரதேசத்தில் ஒளிந்திருந்த போதும், தன்னுடன் இரண்டு சயனைடு வில்லைகளை ஒளித்து வைத்திருந்தான் பிரசாத், அவ் வேளையில்தான், சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு, தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அக் கைதுக்கு பின்னர், தான் விசாரணைக்காக நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட நேரும் என்னும் பட்சத்தில், தான் வளர்க்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட மரபுக்கமைய சயனைடு உட்கொண்டு தன் வீரத்தை பறை சாற்றி, தன் உயிரை எதிரியின் கைகளில் மாட்டாமல் தானே மாய்த்து கொண்டான். இவ் வீர மறவன். இவரது இளைய சகோதரர் வீரவேங்கை - முரளி (கிருஷ்ணபிள்ளை கிரிஷ்ணமுரளி) 16.06.1990 ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி இலங்கை முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்தவர். 

தமிழீழ வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில், ஆரையூரில் அவதரித்த முதல் ஆண் மாவீரரான வீரவேங்கை - பிரதீஸ் (சின்னதுரை ரகு), வீரவேங்கை - பிரியன் (தம்பிப்பிள்ளை நவரெத்தினராஜா) ஆகிய இரு வேங்கைகளும் 09. 09 .1985 அன்று இலங்கை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தபோது தங்களுக்கு கொடுக்க பட்டிருந்த கைக்குண்டை வீசிவிட்டு சயனைடு அருந்தி தங்களின் விடுதலை அமைப்பையும், தனது ஊரின் வீரத்தையும் காப்பாற்றி தமிழீழ மண்ணை முத்தமிட்டனர். இவ் விரு மாவீரர்களும், தென் தமிழீழ மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி பாசறையில் தங்களின் படைத்துறை பயிற்சியை முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரதீஸ் (ரகு), இவர் LTTE Aunty என்று போராளிகளால் அன்பாக அழைக்கப்பட்ட பூரணம் அம்மாவின் ஒரே மகன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். பூரணம் அம்மா எமது இன விடுதலைக்காகவும், எம் அமைப்புக்காகவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் கையால் ஒரு பிடி உணவு உண்ணாத கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த போராளிகள் இருக்க முடியாது.

இதை மேல் மட்டங்கள் மறந்ததுதான் வேதனைக்கு உரிய விடையம். இத் தாயின் அன்பு, பாசம் அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காமல் செய்து விட்டனர் தேச துரோகிகள். டெலோ அமைப்பில் இருந்து, இந்திய சிப்பாய்களுக்கு ஏவல் வேலை செய்த கிழவி ரவி, அன்வர் ஆகியோரால் 1988 இல் இத் தாய் சுட்டு கொல்லப்பட்டார்.

இப் படுகொலைகள் அனைத்துக்கும் தலைமை தாங்கியவர் முன்னாள் கிழக்கு மாகான டெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் என்பது எம் மக்கள் மறக்க கூடாத விடயம். இதைப் போன்று, ஆரையம்பதி மண்ணில் உதித்த லெப்.கலா(கிருஷ்ணபிள்ளை சதானந்தரத்தினம்), கல்முனையை சேர்ந்த ரமணண்ணா, மற்றும் சில போராளிகள் இந்திய இராணுவத்தின் சதியில் 19.04.1988 அன்று விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை வெட்டி படுகொலை செய்த பங்கும் இந்த டெலோ தலைவன் ஜனாவையே சாரும். இதில் உயிர் தப்பிய நானும், இன்னும் ஒரு முன்னாள் போராளியும் இன்றும் உயிருடன்தான் உள்ளோம். 

இவர்களை தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள் ஈழ மண்ணை ஆக்கிரமித்து இருந்த போது, EPRLF அடி வருடிகளினால் அடையாளம் காணப்பட்ட வேளை, எதிரியின் கைகளில் உயிருடன் சிக்காமல் சயனைடு அருந்தி, 2வது லெப்.அனித்தா (இந்திராதேவி தம்பிராஜா) கிழக்கு மாகாணத்தின் முதல் பெண் மாவீரர் பட்டியலில் தன்னை 28.11.1988 அன்று இணைத்துக் கொண்டு தனது ஊருக்கு பெருமை சேர்த்தார். 

இப்படி எம் மண்ணுக்கு வீரத்தை விதைத்து விட்டு சென்ற வீரர்களே, நீங்கள் என்றும் எம் நெஞ்சில் தீயாக எரிந்திடுவீர். துரோகிகளை எங்கள் மூலம் எரித்திடுங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday 3 August 2013

பூர்வீக தமிழர்கள் ஆண்ட நிலம் ஈழதேசம்......!

81 குறுநில அரசை ஒரு குடையில் ஆண்ட ஈழ வம்ச தமிழ் மன்னர்கள் ,

கரு முகில் கூட்டங்கள் விலகிடாத அந்த வைகறை வேளையில், நீம்மதியை இழந்து உறக்கத்தை மறந்தர்வர்களும் 

அதிகாலையில் அயர்ந்து தம்மை மறந்து தூங்கி இருக்கும் வேளையில் குதிரை வீரர்கள் கோட்டை வாசலினுள் அதிவகமாக உள் நுழைந்தனர், கோட்டை வாயில் காவலர் தலைகள் ஒரு சில வினாடிகளின் தரையை தொட்டது. ஈழ சேனனின் தோள் பலத்தை நன்கு அறிந்திருந்த நாக குத்தன் இன்று தான் அவன் வாள் வீச்சின் முழுமையான வலிமையை உணர்ந்தான் . 

இவர்களை எதிர்த்தவர்கள் தலைகள் மண்ணோடு மண்டி இட்டது. அபாயக் குரல்களின் பெரும் கூக்குரலால் வாய் வீரம் பேசிய தீசன் சகோதரர்கள் இவர்கள் கோட்டைக்குள் புகுந்த செய்தி அறிந்ததும் பாதுகாப்பு வழிகள் ஊடாக பெரும் காடுகளில் ஓடி ஒழித்தார்கள்.

பெரும் போர் ஒன்று நிகழும் என்று எண்ணி வந்த ஈழ சேனனும் நாக குத்தனும் நண்பர்களும், அதிக எதிர்ப்பு இன்றியே அனுராதபுரத்தை கைப்பற்றினர். வளை வாணனால் உதவிக்கு அனுப்ப பட்ட பெரும் படையும் வந்து சேர இவர்கள் படை பலத்துக்கு அஞ்சிய தீசன் சகோதரர்களுடைய உயிர் தப்பிய படையினர் இவர்களிடம் சரணடைந்தனர்.

தந்தை ஏற்கனவே தீசன் சகோதரர்களையும் உங்களை எதிர்க்கும் ஆயுததாரிகளையுமே தண்டிக்கும் படி கட்டளையிட்டு இருந்ததால் நாக குத்தன் சரண் அடைந்தவர்களை நல்ல முறையில் எந்த தீங்கும் செய்யாமல் ஏற்றுகொண்டான்.சரணடைந்தவர்களில் நல்லவர்கள் போல் நடித்த நய வஞ்சகர்களும் இருந்தார்கள் என்பது ஈழ சேனனின் இருபத்து இரண்டு வருட ஆட்சியின் முடிவிலேயே பூர்வீக ஈழவம்சத்தினரால் உணரப்பட்டது. அது பற்றி அந்த கால கதை நகர்வில் பார்ப்போம்.

உண்மை வரலாறு நான் மேலே எழுதிய திசையில் சென்று கொண்டு இருக்கையில் மாகாவம்ச மாயையில் குழப்பி போய் இருக்கும் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கின்றேன்.

அதாவது பூர்வீக தமிழர்கள் ஆண்ட நிலம் ஈழ தேசம் என்பதை சொல்ல விரும்பாத மகா நாம தேரர் தென்னிந்தியாவில் இருந்து வந்த குதிரை வியாபாரிகள் சேனனும் குத்தனும் (குத்திகனும்)சூர தீசனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினார்கள் என்கின்றார்.

முதலில் இரு சாதாரண குதிரைவியாபாரிகளிடம் படை பலத்தோடு இருந்த நாட்டை இழந்தது என்று சொல்வதற்கு தேரருக்கு வெட்கம் அவமானம் இல்லையா,இழந்திருந்தாலும் மீள இந்த இருவரிடம் இருந்து கைப்பற்றுவதற்கு இருபத்தி இரண்டுவரிடம் தேவையா, இருந்தாலும் அவர் பூர்வீக தமிழர்களான ஈழசேனன் நாக குத்தனிடம் நாட்டை இழந்தான் சூரதீசன் என்பதை விட அந்நியனிடம் இழந்தார்கள் என்று சொல்வதில் ஒரு தற்பெருமையும் சுயநலமும் அவர் அடி மனதில் இருந்திருக்கின்றது .

முதலாவது நாகர்கள்! கதிரமலையை ஆண்ட காலத்தில் அவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியர்களும் குதிரைகளை அரபு தேசங்களில் இருந்தே வர வளைத்தார்கள்.


இதை பல்வேறு வரலாறுகள் உறுதி படுத்துகின்றது. நாக அரசர்களும் அன்றைய நாகதீபத்தில் அதாவது யாழ் குடாநாட்டின் மேற்பகுதியில் பிறகாலத்தில் அதாவது மூன்றாவது (நாக வளை வாணன், தேவ நம்பிய தீசன் காலத்தில்) மிகப்பெரிய கடல் கோளால் தீவாகிய நயினாதீவில் உள்ள துறைமுகத்திலேயே அரபு கப்பல்கள் வந்து குதிரைகளை நாக அரசர்களுக்கு விற்றார்கள் இவர்களிடம் இருந்து நவரத்தினங்களையும் யானை தந்ததையும் அவர்கள் தேசங்களுக்கு பண்டமாற்றாக வாங்கி சென்றார்கள்.

எனவே ஈழத்துக்கு குதிரை வியாபாரிகளாக வந்தவர்கள் முசுலீம்களே இவர்களின் சந்ததியினர் பிற்காலத்தில் துறைமுகங்கள் சார்ந்த மன்னார் ,திருகோணமலை நயினாதீவு மட்டகிளப்பு ஆகிய பிரதேசங்களில் வந்து தங்கி வாழத்தொடங்கினார்கள் இவற்றை பின்னர் அந்த கால நீரோட்டத்தில் விரிவாக பார்ப்போம்.

எனவே தீரர் அதாவது தேரர் சொல்வது போல் சேனன் குத்தன் என்று உலகில் எந்த ஒரு நாட்டிலும் முசுலீம்களுக்கு பெயர் இல்லை .எனவே தேரர் சொல்வது உண்மையை மறைக்க சோடிக்க பட்ட பொய் என்பது நிரூபிக்க படுகின்றது.இங்கேயே தான் விழி இழந்தாலும் எதிரி உயிரை இழக்க வேண்டும் என்ற கருத்து உள்வாங்க பட்டுள்ளது 

அனுராத புரத்தை கைப்பற்றிய நாக குத்தனும் ஈழ சேனனும் தங்களது அரசை உறுதியாக வைத்திருப்பதற்காக குறுநில அரசர்களை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள் ஈழ சேனனின் மூதாதையினரின் உறவினர்கள் ஆண்ட மட்டக்களப்பு பகுதியயை இவர்கள் காலப்பகுதிலேயே மீண்டும் சிறந்த நகரமாக நாக குத்தன் வடிவமைத்து அங்கும் 7 குறுநில அரசுகளை உருவாக்கி அரசர்களை நியமித்தான்.

ஈழ சேனன் மூதாதையர் குலத்து இயக்கர்கள் வாழ்ந்த திருகோண மலையையும் புனர் நிர்மாணம் செய்து சிறந்த நகரமாக்கி அங்கும் 18 சிற்றரசர்களை நியமித்து மீண்டும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். அரசின் கீழ் கதிரமலை இருந்த 26 குறுநில அரசர்களும் ஏற்கனவே கதிரமலை அரசின் ஆளுகையின் கீழேயே இருந்தனர் சகலபகுதிகளையும் விரிவுபடுத்தி இவர்கள் 81 குறுநில அரசர்களை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்து அரசாண்டார்கள்.

கல்யாணி அரசையும் இவர்கள் உறவினர்களே ஆண்டார்கள் ஆனால் இந்த கல்யாணி அரசர்கள் உருகுணையில் அதாவது மாணிக்க கங்கையின் கரை பகுதியில் உள்ள இன்றைய மாகம அருகில் இருந்த காட்டு பகுதியில் சென்று ஒளித்து இருந்த தீசன் சகோதரர்களுடன் ரகசிய உறவுகளை பேணி வந்தார்கள் காலப்போக்கில் அவர்களுடன் திருமண உறவுகளை செய்து அவர்களை மறுபடியும் நாட்டு பகுதிகளுக்குள் வர மறைமுகமாக ஆதரவு அளித்தார்கள் .

ஈழ சேனனும் நாக குத்தனும் மறு புறம் தங்களது படை பலத்தையும் ஆளுகையையும் விரிவுபடுத்தி கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டியதோடு கடல் கோளால் அழிவுற்ற மாதோட்ட துறை முகத்தை திருத்தம் செய்ததோடு ஊர்காவற்றுறையிலும் மட்டக்களப்பிலும் புதிய துறைமுகங்களை நிர்மாணித்தார்கள்.

இவர்களே கோணமலையில் இயற்கையாக அமைந்த கடல் தொடு தளத்தையும் துறைமுகமாக பாவனையில் ஈடு படுத்தினார்கள், இவர்கள் காலத்திலேயே அரசர்கள் அரபு நாடுகளில் இருந்து பெரும் தொகையான குதிரைகளை வரவழைத்தார்கள் ஈழ வரலாற்றில் முதன் முதலில் மிகப்பெரிய குதிரை படையையும் யானை படையையும் வைத்திருந்த அரசர்கள் இவர்களே.

இவர்கள் காலத்தில் யானைகளை அதிவேகமாக ஓடுவதற்கு பயிற்றுவித்து இருந்தார்கள் இவ்வாறு சிறப்பாகவும் நீதி தவறாமலும் ஒரு மத சார்பில்லாமலும் இனங்களை பிரிவினை கண்ணோட்டத்தில் பார்க்காமலும் ஈழ சேனனும் நாக குத்தனும் அரசாண்ட வேளையில். அசைக்க முடியாத சாம்ராச்சியமாக இருந்த அனுராதபுரத்தை தீசன் சகோதரர்களால் கைப்பற்ற முடியவில்லை.

அவர்கள் வஞ்சக சூல்சிகளால் அரசை பெற முயற்சிக்கும் மனோ நிலையிலேயே செயல்பட்டார்கள். நேரடி போர் எந்த வேளையிலும் புரிய ஆரம்பத்தில் முன்வரவில்லை.எனவே போர் இல்லாத நாட்டில் அதிகமானவர்களை படையில் வைத்திருப்பது நன்மையான விடயம் இல்லை என்பதை உணர்ந்த இவர்கள் தமது படையினர் எண்ணிக்கையை குறைத்து ஏனைய நாட்டு நலன்களில் ஈடுபடுத்தினார்கள். 

நாக குத்தனும் தனது தங்கை பொன்னம்மை நாகச்சியரை ஈழ சேனனுக்கு திருமணம் செய்து வைத்து முழுமையாக அனுராத புர அரசையும் அவனிடமே கொடுத்து விட்டு. கதிரை மலைக்கு சென்று ஈழ ஊர் ஈழசேனன் தங்கையை தானும் திருமணம் செய்து கொண்டு தன் வயோதிப தந்தைக்கு அரசியல் பணிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு கதிரைமலை அரசை ஆண்டான் .,

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் தான் சில விளைவுகள் விபரீதம் ஆக தொடங்கியது கதிரமலை நாக அரசர்களின் வம்சத்தில் கல்யாணி அரசர்களே வம்சம் தோறும் திருமண உறவுகளை மேற்கொண்டு வந்தார்கள். மூத்த சிவன் என்ற பாண்டிய பரம்பரையில் வந்தவன்.

தந்தை பண்டு காபயன் இழந்த நாட்டை பெற வளை வாணன் அக்காவை முதலில் திருமணம் செய்த பின் இந்திர விழாவுக்கு வந்த சோழன் நெடும் கிள்ளி எனற சோழ இளவரசன் வளை வாணன் மூத்த மகள் பீலிய வளை நாகசியாரை காதல் திருமணம் செய்தான், தற்பொழுது இளைய மகள் பொன்னம்மை நாகசியாரை ஈழ சேனன் திருமணம் செய்ததால் இவர்கள் இடையே மனக்கசப்பு உருவானது.

இதனால் கோபம் உற்ற தென்பகுதி கல்யாணி நாக அரசர்கள். மூத்த சிவன் பிள்ளைகளுடனும் அவன் உறவினர்களுடனும் உறவுகளை மேற்கொண்டார்கள். இதனால் ஓடி ஒளித்து இருந்த சூர தீசன் மகா சிவன் சகோதரர்கள் வெளியில் தலை காட்ட தொடங்கினார்கள் காலபோக்கில் உருகுணை இராச்சியம் என்று ஒரு சிற்றரசை மாணிக்க கங்கை பகுதியில் களனி அதாவது கல்யாணி அரசர்களின் உதவியுடன் இரகசியமாக அமைத்தார்கள் .

ஈழ சேனன் இல்லத்துணைவியாக முடிக்கு உரிய அரசியாக பொன்னம்மை நாகசியாரை திருமணம் செய்து இல்லறத்தில் இனிமையாக இருவீரும் நல்லறங்கள் பல செய்து வாழ்ந்து வந்தார்கள் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர் 

பிறந்த குழந்தைகள் யார் என்பதையும் அவர்கள் ஈழவம்ச வரலாற்றில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதையும் ஈழ சேனன் ஆண்ட அனுராதபுர அரசு எவ்வாறான துரோகங்களாலும் சூழ்சிகளாலும் மீண்டும் கலப்பு வம்சத்தினரின் ஆளுகைக்குள் உட்பட்டது என்பதையும் வளரும் தொடரில் வரலாற்றின் நிகழ்வுகளில் பார்ப்போம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.