Wednesday 22 May 2013

எதிரி நாட்டு ஏவுகணைகளை....!

எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.


அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.

இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது.


அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதி நவீன இரசாயன கிளர்கதிர் (laser) வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.


திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.