Wednesday 29 February 2012

எதற்கு நம்பிக்கையீனம் ................!
























விடிந்தது புத்தம் புதியகாலை...........!
மறைந்தது நேற்றைய இருள்
நிறைந்தது எங்குமே ஒளி ...........!
விடியுமென நம்புங்கள் தோழர்களே
இயற்கையின் இயல்பும் அஃதே............!
எதற்கும் நம்முள் நம்பிக்கையீனம்
விடியாமற் போன இரவேது..........?

நன்றிகள்.

Monday 27 February 2012

தலைவர் பிரபாகரன் தொடர்............... 2



ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விசயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.


ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். “அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?”

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்’ என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?

ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.


அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட். தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்…’


பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாசின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.


பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்…

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.
(தொடரும்)

யார் வந்து கேட்டார்கள்.................?




தமிழ் ஈழமக்களை சிங்கள இராணுவமும், அகில உலகமும் கைகோர்த்து அளித்தது போதாதா? நாங்கள்தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் எனத் தான்றோன்றித்தனமாகக் கூறிக்கொள்வோர்.

தமது சுயநலன்களுக்காக உலக அரங்கில் தமிழ்மக்களிற்கு சாதகமான நிலைகள் ஏற்படும்போது அவற்றைச் சரியானமுறையில் பயன்படுத்தாது தவறுவர்களாயின்.







அது உலகமும்,சிங்கள அரசும் மேற்கொண்ட இனஅழிப்புக்குத் தமிஈழமக்கள் கொடுக்கும் அங்கிகாரத்திற்கு நிகரனாதே!

தமிழீழமக்களின் விடிவிற்காக உங்களைப் போன்றோரை யார் வந்து கேட்டார்கள் தமிழ்ஈழ மக்களிற்கு உதவி செய்யுங்கள் என்று?


தான்றோன்றித்தனமாக நீங்களே ஈழத்தமிழ் மக்களிற்கு குழிபறிக்காது உதவிதான் செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவம் கொடுக்காது இருப்பதே மேலான செயலாகும்.


தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றுபடுவோம்.

நன்றிகள் பல.

Sunday 26 February 2012

பிரபாகரனால்தான் உலகினிற்கே ......!


















இன்றைய உலக அரசியலில் இலங்கையோ அல்லது இலங்கையினது அரசியல் தலைவர்கள் என மார்தட்டிக் கொள்வோரும், உலக அரங்கில் சமாதானம் என்றும், உலகின் மனித உரிமைகளை தாங்கள்தான் நிலைநிறுத்துபவர்கள் என்று உலகையே ஏமாற்றுபவர்களும், பிரபல்யமாக இருப்பதற்குக் காரணகர்த்தாவாக விளங்குபவர்.

எங்கள் தமிழ் இனத்தின் விடிவெள்ளியாக உலேகுங்கும் தமிழர்களிற்கென அடையாளத்தை ஏற்படுத்திய மேதகு தலைவர் "வே. பிரபாகரன்" என்னும் ஒருவரே அன்றி வேறொன்றும் இல்லை.








தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

இது உந்தன் நாடே........



ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

அன்று யுத்தத்தின் அடி
இன்று வறுமையின் பிடி
இதுதான் உந்தன் வாழ்வா
உந்தன் குருதியில் உறுதியை
ஊட்டிடடா தமிழா

வழி இன்று தெரிகின்ற போது
விழி மூடி தூங்குவதா நீ
எல்லோரும் மன்னர்கள் தானே
ஏன் இன்னும் சேவகம் உனக்கு

ஏரு பூட்டி மாற்றான் வாழ
சோறு கொடுத்த எம் தமிழா
தேர்தல் மட்டும் நமக்கோர் வழி
நினைவில் வையடா


 நிலத்தை நீ இழந்து விட்டாய்-நீர்
புலத்தை நீ இழந்து விட்டாய்
உயிரை நீ இழந்து விட்டாய்- சொந்த
உறவை நீ இழந்து விட்டாய்

சொந்த கடலில் மீன்பிடியை இழந்தோம்
நெடும் காடு வீடுகளை இழந்தோம்
பசு மாடுக் கூட்டங்களை இழந்து
பள்ளிக் கோயில் சுகங்களை இழந்து
வெல்லும் வீரம் இருந்தும் மானமும் இழந்தோம்


ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

தூரம் தனைக் கடந்து விட்டோம்
பாரம் தனை சுமந்து விட்டோம்
பொய் சொல்லி எம்மினத்தை- முள்
புதரின் நடுவே தள்ளி விட்டார்

இனி வாழ வளி இல்லை எமக்கு
ஒரு வாக்கு பலமிருக்கு உனக்கு
உனை ஆள ஒருவனை தெரிந்து
உலகெங்கும் பறை சாற்ற தமிழை
எமக்கே உரிய உரிமை பெற்று வாழ

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா....!!!

நன்றிகள் பல .

வீரத்தைப் பறைசாற்றும்.. ...........!


தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் வீரத்தாயாரின் காட்சி.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Friday 24 February 2012

சிறுவித்தியாசம்தான்.......!



வெற்றிக்கும்,தோல்விக்கும்,
சிறுவித்தியாசம்தான்.




கடமையைச்செய்தால் வெறி.
கடமைக்கு செய்தால் தோல்வி.

நன்றிகள் பல.

Saturday 18 February 2012

விடுதலைப் புலிகள் மட்டுமே ........

ஏறத்தாழ 32 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், சொல்லொணாத இழப்புகள், எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான பயணம், காலத்தை வென்று, விடுதலையின் வெம்மையைத் தணியாமல் காப்பாற்றிக் களத்தில் இருக்கும் காரணி, உலக வல்லாதிக்கங்களுக்கு எதிராகச் சமரில் இருக்கும் ஒரே இயக்கம், அரச ஒடுக்குமுறை மற்றும் பேரினவாத மேலாதிக்கம் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய்ந்த போது வரலாற்றுத் தேவையாகத், தன்னியல்பாகத் தோன்றிய ஒரு இயக்கம், உண்மையில் தனித்துவம் மிக்க உலகின் முந்தைக் குடியின் முகவரியாகப் பரிணமித்திருக்கிறது.
Prabakaran

உளவியல் ரீதியாக இன்று ஒவ்வொரு தமிழரும் புலிகளை தங்கள் இனத்தின் முற்று முழு முகவரியாகவும், ஏகப் பிரதிநிதிகளாகவும் சிந்தனை செய்தது, உலகின் பல்வேறு நாடுகளில் புலிக்கொடி பறந்த போது வெட்ட வெளிச்சமானது. உளவியல் தாக்கங்கள் மனித இனக் குழுக்களுக்கு எப்போதும் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் தோன்றும் வாழ்வாதார உரிமைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது.

இன்றைக்கு உலகெங்கும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளில் ஒன்றான உளவியல் அமைதியை பெருமளவில் இழந்திருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் எம்மக்களின் மன அமைதியை குலைக்க முயலும் போதெல்லாம் அந்த வெற்றிடங்களை நிரப்பிச் சமன்படுத்தும் பணியைச் செவ்வனே செய்தவர்கள் விடுதலைப் புலிகள் தான், அவர்கள் மக்களின் நம்பிக்கையை, விடுதலை நோக்கிய அவர்களின் தாகத்தைத் தணியாமல் வைத்திருந்தார்கள்.

வெற்றியோ, தோல்வியோ விடுதலைப் போராட்டத்தின் சமரில் எமது இன எதிரிகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் ஆற்றல் இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்.

தங்கள் குறிக்கோள்களை அடையத் தேவையான தெளிவான சிந்தனைகளோடு அவர்கள் விடுதலையை நோக்கிய பயணம் செய்கிறார்கள், கடந்த மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

" இது எமது மண், இந்த மண்ணிலே தான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். எங்கள் மூதாதையரின் மூச்சுக்காற்று இந்த மண்ணில் கலந்திருக்கிறது"

இந்த வாக்கியங்களின் பின்னால் இருக்கும் மறைபொருள் மிக எளிதானது, நாம் தனி ஈழம் நோக்கியே பயணப்படுகிறோம் என்கிற அந்த எளிதான உரையின் சாரம் அறியாது தனி ஈழம் கேட்கவில்லை என்று திரிக்க முனைவது முற்றிலும் தவறான ஒரு முன்னுதாரணம், இதனை எந்தப் பேராசிரியர் செய்தாலும், அது சரியான நேரத்தில் செய்யப்படும் மிகத் தவறான வரலாற்றுப் பிழையாகவே உட்கொள்ளப்படுமே அன்றி புலமையாகவும் ஆய்வாகவும் அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகள், மாகாண இடைவெளியை உருவாக்கினார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு சிறுபிள்ளைத் தனமானது. ஏனெனில், புலிகள் பல்வேறு மாகாண மற்றும் நிலப்பரப்பின் இடைவெளியைக் குறைத்து தங்கள் தேசத்தின் இயங்கு எல்லைகளை விரிவுபடுத்தினார்கள், ஒரு அகண்ட வெளியில் சங்கமிக்க வேண்டும், மொழி இன அடையாளங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பணியைப் புலிகள் சரியாகச் செய்தார்கள்.

இதனூடே தன்னடையாளங்களில் திளைத்த வேறுபாடுகள் தனிமை கண்டன, அவ்வாறு தனிமை கண்ட அடையாளங்களை சிலர் மாகாணம் என்கிறார்கள், சிலர் மதம் என்கிறார்கள், இவை யாவற்றையும் விலக்கி விட்டுத் தங்கள் பாதையில் புலிகள் பயணப்பட்டு மிகுந்த இழப்புகளுக்கிடையில் ஒரு இரண்டாம் கட்ட அரசியல் நகர்த்தலுக்கு விடுதலையை கொண்டு வரும் சூழலில், புலிகள் மாகாண இடைவெளியை உருவாக்கினார்கள், அகலப்படுத்தினார்கள்.

என்றெல்லாம் ஆய்வுகள் செய்வது தமிழினத் துரோகமாகவே நோக்கப்படும் பேராபத்து இருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த அரசியல் இயக்கமும், தனி மனிதனும், கொள்கையும் நிகழ்த்த முடியாத ஒரு தாக்கத்தை இன்று உலகத் தமிழினத்தின் முதுகெலும்பில் செலுத்திய புரட்சியை விடுதலைப் புலிகள் தனியாய் நின்று உறுதி செய்தார்கள்.

தமிழகத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஓரணியில் நின்று சாதிக்குழிகளில், மதக்குழிகளில் இருந்து விடுபட்டு பதுங்கு குழிகளில் துயருறும் தங்கள் உறவுகளை நினைத்துப் பதை பதைத்தார்கள், உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றால் இந்த விடுதலை உணர்வை, எமது தேசிய இன மொழி அடையாளங்களை அடைகாத்துக் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே அன்றி வேறொருவருமில்லை.

வெறும் ஆய்வுப் புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு வித்தை காட்டுவதற்கான களம் அல்ல ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம். அதுதான் எமது இன மற்றும் மொழி அடையாளங்களை எமக்கு மீட்டுக் கொடுத்த பெருங்கொடை.

உலகின் எந்த ஒரு அங்கீகரிக்கப் படாத விடுதலை இயக்கமும் செய்யமுடியாத சாதனையாம் மரபு வழி ராணுவத்தைக் கட்டமைத்த பெருமைக்குரியவர்கள் புலிகள், அழியப் போகும் இனமாக அருகிக் கொண்டிருந்த எம்மினத்தை எந்தச் சிவப்புச் சித்தாந்தமும் செய்ய முடியாத வரலாற்றுச் சாதனையாய் தரை, கடல் மற்றும் வான் படைகளை ஒருங்கே கட்டமைத்த தமிழினத்தின் மீள்வடிவம் தான் புலிகள்.

களத்தில் நின்று தம் மண்ணையும் மக்களையும் காக்கப் போராடும் ஒரு விடுதலை இயக்கத்தினை விமர்சனம் செய்ய வெறும் புள்ளி விவரங்களும், கோட்பாடுகளும் மட்டுமே போதாது. மண்ணை நேசிக்கவும் அந்த மண்ணிலே எந்த நேரத்திலும் புதையுண்டு போவதற்கும் தயாரான ஒரு உணர்வுப் பெருவெளி வேண்டும், மாறாக வெறும் இதழ்களில் கதைக்கும் புலமை மட்டும் ஒரு போதும் போதாது.

உலகின் மூத்தகுடி என்கிற பெருமையை உறுதி செய்து வடிவம் கொடுத்தவர்கள் புலிகள் தான், அதனால் தான் உலகின் எந்த மூலையில் ஈழ ஆதரவுப் போராட்டம் நடந்தாலும், அதன் ஊடாகப் பட்டொளி வீசி சிலிர்ப்போடு ஒரு புலிக்கொடி ஏனும் சட்டென்று மலர்ந்து விடுகிறது.

விடுதலைப் புலிகள் ஆடம்பர வாழ்வை விரும்புகிறார்கள், அவர்கள் பொருளாதார மேம்பாடுகளில் கிடைத்த மேல்தட்டு வர்க்கச் சிந்தனைகளில் உழல்கிறார்கள் என்ற போலியான வறட்டுக் குற்றச்சாட்டு புலிகளின் மீது சுமத்தப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகள் தடை செய்து ஆயுத உதவியின் மூலம் போரின் கடும் பிடியில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு விடுதலை இயக்கத்தை நோக்கி வைக்கப்படும் இது போன்ற குற்றச்சாட்டுகள், உளவியல் பற்றிய தாக்கங்களை அறிந்தவர்களுக்கு வெறும் நகைச்சுவை மட்டுமே.

ஏனெனில் எந்த நேரமும் மரணம் தன்னை நோக்கி வரலாம் என்கிற உறுதியான மன நிலையில் இருக்கும் போராளி எவனும் வாழ்வின் பொருளாதாரச் சுவைகளை நுகரும் எண்ணம் கொண்டிருக்க இயலாது, உணவே நாம் சார்ந்திருக்கும் பொருள் இல்லை என்கிற ஒரு புதிய வரலாற்றில் "விடுதலை உணர்வே வாழ்க்கை" என்ற தமிழ்ச் சிந்தனையை வடிவமைத்தவர்கள் புலிகள்.

அவர்கள் மீது வைக்கப்படும் ஆடம்பர வாழ்வுக் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதிகாரப் பூர்வமற்ற மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகளும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று அலைந்து திரியும் இன்றையத் தலைவர்களின் நடுவில் தலை மகவையும் வான் படைக்குத் தலைமை தாங்க வைத்திருக்கும் ஒரு தலைவனைப் பற்றிய அவதூறு என்றே இதனைப் பொருள் கொள்ள முடியும்.

காலம் வெகு வேகமாக மாறித் தன் சாதகக் காற்றை ஈழ விடுதலையின் பக்கம் அடித்து வரும்போது, மாகாண இடைவெளி பற்றியும் தோட்டத்துச் சமவெளி பற்றியும் பேசித் திரிவது ஒரு வரலாற்றுப் பிழையன்றி, இனத் துரோகமும் ஆகும்.

ஈழ விடுதலை என்கிற அந்த மந்திரச் சொல், உலகெங்கிலும் தமிழர்களைத் தங்கள் சாதி, மத, நிலப்பரப்பு அடையாளங்களை துறக்க வைத்திருக்கிறது.

ஆரியம், திராவிடம் என்கிற கால இடைவெளியைக் கூட கழற்றி எரிந்திருக்கும் இந்த தமிழுணர்வு முன்னெப்போதும் நிகழவில்லை என்றே சொல்ல முடியும்.

இன்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழ் மறவனும் ஒரு போராளியாய் மாறித் தன்னால் ஆன போராட்ட வடிவங்களை முன்னெடுக்கத் துணிந்திருக்கிறான். வரலாற்றில் இது நமக்குக் கிடைத்த பொற்காலம்.

இந்த வாராது வந்த மாமணியை, தமிழர்களின் இன மொழி அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒரே கருவியான தமிழ் தேசியத்தை அதன் கட்டமைப்பாளர்களான தமிழீழ விடுதலைப் புலிகளை நமது வழமையான "பானைக்குள் நண்டு" விட்ட கதையாய் சிதைத்து விடாமல் காக்க வேண்டிய தார்மீகக் கடமை சாமான்ய மக்களை விடவும் ஊடகங்களில் இயங்கும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

மாற்றுக் கருத்துக்களும், ஆய்வுகளும் செய்வதற்கு ஒரு காலம் இருக்கிறது, அந்தக் காலம் வரும்போது எனக்குள்ளும் இருக்கும் சில மாற்றுக் கருத்துக்களை தயங்காமல் எடுத்துரைப்பேன், அதுவரையில் உதவி செய்யாவிடினும், உபத்திரவம் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது சித்தாந்தவாதிகளுக்கு.

தமிழராய் ஒன்றிணைவோம், தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்போம் புலிகளின் தாகம் என்றில்லை, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் தாகமும் தமிழீழத் தாயகம் தான்.

விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய வாழும் தமிழர்களின் பன்னாட்டு முகவரி, உலக அடையாளம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


எமக்கொரு மகுடம் செய்வோம்!

காயம் நடுங்குதடா - எம்
தாய் நிலத்தை எதிரி சிதைக்கையிலே
மானம் இருக்குதடா - இந்த
மண்ணில் எமக்கொரு மகுடம் செய்வோம்!

பட்டபாடு எல்லாம் - நாங்கள்
மறந்துபோக ஈனர்கள் இல்லை
இட்ட வடுக்களுக்கு ஒருநாள்
சுடச்சுட நெருப்பாய் பொங்கி எழுவோம்
உன்னை எரிப்போம்

உணவுதர மறுத்தாய் - நீ
மருந்துக்குத் தடை விதித்தாய்
தூய்மையாய்க் கட்டி காத்திட்ட எங்களின்
பண்பாட்டைச் சிதைத்தாய்
வளங்களையே அழித்தாய்
எங்கள் கன்னியரைக் கற்பழித்தாய்
எங்களின் வீதியில் உங்களின் பெயர்களை
வேண்டுமென்றே திணித்தாய்

நித்திரைகள் கெடுத்தாய்
நித்தம் எம் இனத்தை சுட்டாய்
வீதியில் நாங்கள் நடமாட - எதிராய்
ஊரடங்கு செய்தாய் - எம்
இனத்திலுள்ள
பித்துப்பிடித்தோரை உம்மிடம்
சேர்த்துக்கொண்டாய் - பின்பு
எமக்கே எதிராக்கினாய்

இத்தனை செய்தததை மறப்போமா - நாம்
உனக்கடிமையாய் வாழ்வோமா?
இதனால்

காயம் நடுங்குதடா - எம்
தாய் நிலத்தை எதிரி சிதைக்கையிலே
மானம் இருக்குதடா - இந்த
மண்ணில் எமக்கொரு மகுடம் செய்வோம்!!

நன்றிகள் பல.

விளையாட்டு மைதானத்தில்தானா .........!



தமிழ்ஈழத்தேசியக் கோடி சிட்னியிலுள்ள
விளையாட்டு மைதானத்தில் மட்டும்தானா பறக்கும்?




உலகநாடுகள் வீழ்த்திய தேசியக்கோடியை
உலகெங்கும் பறப்பதற்கான முயற்சிக்காக......




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள்.

ஈழமக்களின் ஏக்கத்தை............!

ஈழமக்களது எக்கத்தினை வெளிப்படுத்தும் குழந்தையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற முயற்சியில் பலரும் முயற்சி செய்வதனூடாக உலகெங்கும் எம்மினத்திற்கு நிகழ்ந்த கொடுமையை கொண்டு செல்வதுதான் தமிழ் மக்களின் எதிர்கால விடிவிற்கு வழிவகுக்கும்.





தமிழீழம்,தாயகமக்களின் விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Monday 6 February 2012

காலம்கடந்தும் போற்றற்குரியோராவர்...........!



நேர்மையான குணயியல்பை கொண்ட மனிதர்கள் காலம்கடந்தும் போற்றற்குரியோராவர். சமூகங்கள் நாகரிகத்தின் பல படிநிலைகளைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்நகர்வு முன்னேற்றத்தை நோக்கியா இல்லையா என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும்.

சமூகம் பல குழுக்களை உள்ளடக்கியது. குழுக்கள் தேசியம், இனம், மதம், மொழி, பண்பாடு போன்ற காரணிகளில் ஒன்றாகவோ அல்லது கூட்டாகவோ இருக்கின்றன. உலக சமூகங்கள் இதையும் மீறி வட்டாரம், சாதி, உபசாதி என பல துண்டுக்களானது. குழுக்கள் தன்நலன் சார்ந்து இயங்கும் ஒரு அமைப்பாக இருப்பதோடல்லாமல் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் சென்று போராடும் நிலையில் உள்ளன.

தன்நலன் என்று வருகின்றபோது ஒவ்வொரு குழுவும் தனக்காக தேவைகளை இனங்கண்டு அதை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. இத்தைகய சூழல் இரு குழுக்களுக்கிடையே இறுக்கத்தையும் உராய்வையும் ஏற்படுத்துகின்றது.

உரிமைப் போராட்டத்திற்கு வித்திடுகிறது. இதுவே நாளடைவில் தீராத பகையாகி சிக்கலுக்கு வழிவகுக்கின்றது.ஆக சிக்கல்கள் இருவேறு குழுக்களின் தன்னலன் காக்கும் போராட்டத்தின் விளைவாகவே தோன்றுகின்றன.

இங்கே கூர்ந்து நோக்க வேண்டியது, இரு குழுக்களுமே தன்பக்கமே நீதி இருப்பதாக நம்புவதோடு அதை நிலைநாட்டும் முயற்சியில் வெகுவாக ஈடுபடுகின்றன. இது நிலைமையை மோசமாக்குவதோடு ஒரு சிக்கலை தீர்வெல்லையிலிருந்து வெகுதூரத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றது.

இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளின் மூலம் இதுவே. தனிமனிதன் மற்றம் சமூகங்களின் மனம் பல காரணிகளால் கட்டமைக்கப்படுகிறது. குழு மற்றும் பகுதி சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கங்கள் வாழ்வியல்முறை போன்றவை ஒரு இனக்குழு மற்றும் பகுதிசார்ந்த நியதிகளின் உருவாக்கத்தில் பங்குவகிக்கின்றன.

இதுவே தனிமனிதன் மட்டுமின்றி சமூகங்களின் மனதையும் தகவுமைக்கின்றது. பொது நியதி என்ற ஒன்றைக் கடந்து ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த குழுவின் நலன்நோக்கியே தன் பார்வையை செலுத்துவதோடு அதைக்காக்கும் பொருட்டு மனசாட்சிக்குப் புறம்பான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம் இவ்வாறான கட்டமைக்கப்பட்ட மனமேயாகும்.

தன்நலன் என்ற ஒன்று இருக்கின்றதெனில், பொதுநலன் என்ற எதிர்ப் பண்பு ஒன்று உண்டென்பது தெளிவு. இங்கே பொதுநலன் என்பது பொது நியதி. மனித குலம் அனைத்திற்கும் பொதுவான நியதி. சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் நாடு போன்ற அடையாளங்களுக்கப்பாற்பட்ட மனிதத்திற்கான நியதி.

கால முதிர்வு வளர்ச்சியின் அடையாளமாகவே அறியப்பட்டு வந்துள்ளது. கலை, அரசியல், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி காலத்தின் கொடை என்றே கருதப்படுகிறது.

ஆனால் மனித மனம் மட்டும் காலத்தோடு சேர்ந்து முன்னோக்கிப் பயணிக்காமல் பல தலைகளால் கட்டுண்டு செம்மையுறாமலேயே உள்ளது. ஏதாவது ஒரு காரணியைச் சார்ந்தியங்கும் போக்கு முன்னெப்போதையும் விட இப்போது தலைதூக்கியுள்ளது.

பொதுநியதி சார்ந்தியங்கும் போக்கு அரிதாகி, குறைந்த பட்சம் தேசிய உணர்வு என்ற நிலையில் நம் புத்தி சிறைபட்டு நிற்கிறது. அறிவுக்கண் அடைப்பட்ட நிலையில் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறது.

வள்ளுவம். இங்கு மெய்ப்பொருள் என்பது விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கி ஆய்ந்தறியும் போக்கு இன்றைய அறிவுலகம் தன்னலன் சார்ந்த காரணிகளால் கட்டுண்டு பொதுநியதியை நோக்கிப் பயணிக்க மறுக்கின்றது அல்லது தனது சிரீய அறிவை தன்குழுவிற்காக நியாயம் கடந்து வாதாட செலவிடுகிறது.

பல முக்கியப் பிரச்சனைகளில் அறிவுலகம் சாதிக்கும் மெளனம் அல்லது எதிர்வாதமே இதற்குச் சான்று. எந்த ஒரு சிக்கலையும், அதன் மூலம் மற்றும் வரலாறு கொண்டே ஆராய வேண்டும்.

கால ஓட்டம் ஒரு சிக்கலின் நிலையை மாற்றியிருந்தாலும், அதன் மையக்கரு தீர்வு காணப்படும் வரை இருந்து கொண்டேதானிருக்கும். அறிவைப் புறந்தள்ளி தன்னல உணர்வால் வழிநடத்தப்படும் எந்த சிக்கலும் தீர்வைப் பழித்தே வந்துள்ளன.

இந்நிலையை மாற்ற வினையாற்றுவே அறிவுலகத்தின் இன்றைய தேவையாகும். இலங்கை இனச்சிக்கல் குறித்த நம் பார்வையும் இப்போக்கிற்கு விதிவிலக்கு அல்ல. சிக்கல் தீவிரமடைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மிடையே அதுகுறித்த சரியான புரிதல் இல்லை.

சிக்கலின் வரலாறு, இயல்பு மற்றும் அதன் பொது நியதி குறித்து விவாதித்து பொதுக் கருத்து உருவாக்க தமிழ் பேசும் நல்லுலகம் தவறிவிட்டது. இன்னும் நம்மில் பலர் வாழ்வுரிமைக்காக போராடும் ஈழதமிழர்கள், இலங்கையின் வந்தேறிகள் எனவும் அவர்களின் தனித்தாயக கோரிக்கை நியாயமற்றது எனவும் கருதுகின்றோம்.

சிங்களப் பேரினவாதத்தின் தொடரும் வன்கொடுமைகள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு நியாயப்படுத்தப் படுவதோடல்லாமல் மானமுள்ள இருப்பிற்காக போராடும் ஒரு தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச யாருக்கும் துணிவில்லை.

தேசியம், இறையான்மை போன்ற பின்காலனிய அரசியல் கற்பிதங்கள் அல்லல்படும் சிறுபான்மை தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்தப்படாமல் அவற்றிற்க்கு எதிரான சக்தியாக மாற்றப்பட்டு பேரினவாத அரசின் கையில் கொலைக்கருவியாக வழங்கப்பட்டதில் இந்திய அறிவுலகம் மற்றும் ஊடகங்கள் ஆற்றும்பணி முரண்நகையாய் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தோற்றுவாயிலிருந்து இன்றுவரை மாந்தர்குலம் கணக்கில்லா சிக்கல்களை சந்தித்ததோடு அல்லாமல் சொல்லொனாத்துயரையும் அனுபவித்துள்ளது.

அனைத்திலும் இழையோடும் பொது நியதியை அறிவுலகம் இனங்கண்டு சாமானியர்களுக்கு உணர்த்தியிருந்தால் துயரத்தின் வீச்சு நிச்சயம் குறைந்திருக்கும்.


மெளனமும் ஒத்துப்போதலுமான புத்திசாலிகளின் நேர்மையற்ற போக்கு முரண்பாடுகளினால் ஏற்படும் சேதத்தை அதிகப்படுத்தவே செய்கிறது. 
கருத்துச்சுதந்திரம் ஓரளவிற்காவது இருக்கும் இக்காலத்தும் அறிவுலகம் அவ்வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை நேர்மையாக பதிவுசெய்ய மறுப்பது தூங்குபவனைப்போல நடிப்பதற்கு ஒப்பாகும்.

பழமொழியோடு ஒப்பிடும் அளவிற்கு இச்செயல் எளிமையானது அல்ல என்பதை நினைவிற்கொள்க.

தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றுபடுவோம்.

நன்றிகள் ஏ.அழகியநம்பி