Saturday 31 December 2011

தமிழின விடுதலை ......


ஈழத்தமிழர்களின்
ஊற்றாகிய


இரத்த ஆற்றின்
உறையுமிடம்.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Thursday 29 December 2011

முள்ளிக்கு பின் .......புலம்பெயர்.........



தமிழ்ஈழ தாயகம்,தமிழ்மக்களின் தேசியம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்றவற்றை தமது சுய இலாபங்களிற்காக காட்டிக்கொடுத்தவர்கள்.

இன்று தமிழ்ஈழ மக்களின் விடிவு, தாயகத்தின் விடிவிற்காக உழைப்போரின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதிலும் களமிறங்கியுள்ளனர் என்றே அறிய முடிகிறது.


முள்ளிவாய்க்காலில் பின் கோடீசுவரர்கள் ஆனவர்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

தமிழீழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்காலில் வைகாசி (may) 18 க்குப் பின்னர் யாரார் பெரும் பணத்தை கையாள்கின்றனர், எவ்வளவோ மக்கள் ஒருவேளை உணவுக்கு கையேந்தும் நிலையில் உள்ளனர் என்பதை உணர்ந்து.

தாயகதமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக ஒன்றிணைந்து உழைப்போம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

கத்தியால் கல்லறை.....!


தூக்கிப் போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொள்வதும்,
சாதாரணமாய் செய்யும்.
அசாதாரண பிறவிகளே...!

நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்!!
ஆச்சரியமில்லை...!!!

காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்..!



தமிழ்ஈழ தாயகம், தாயகமக்களின்
கண்ணீர் துளிகளை
பெருங் கடலாக்கி அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்..!

பொய்கள் கோர்த்த
வார்த்தையில்
சிக்கிக் கொண்டே மரணிக்கிறது ....!
மனது....

சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
ஈழத்தமிழ் இனமும்,தாயகமும்...








தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Tuesday 27 December 2011

ஆழிப்பேரலையும், விடுதலைப்புலிகளும்!



ஆழிப்பேரலையின் பின்பு நடைபெற்ற மீட்புப் பணிகளிலும்,பாதிக்கப் பட்டவர்களின் வாழ்வை நிவர்த்தி செய்வதற்கென விடுதலைப் புலிகளின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியன் மீட்புப் பணியினை துரிதகதியில் உலகத்தின் கவனத்திற்கு உடனடியாகச் செய்து காண்பித்தவர்.


எமது தேசத்தின் மேதகு தலைவர் வே.பிரபாகரன் ஆகும்.இப்படிப்பட்ட தலைசிறந்த ஓர்தலைமையின் தமிழர்தாயகமும்,தமிழ்இனமும் தமது சுதந்திரத்தை அடைந்தால் எமது வளர்ச்சியினை உலகு ஏற்கமுடியாத காரணத்தால்தான் உலகமே ஒன்றுதிரண்டு எம்தேசத்தையும் எம்மக்களையும் ஈவிரக்கமின்றி அழித்தொளிதனர்.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Monday 26 December 2011

ஆழிப்பேரலை.



தமிழ் ஈழத்தின்!


தமிழ் மக்களின்!!


மிகப்பேரவலம்!!!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday 24 December 2011

தாயகத்தின் மீது ......


ஆழிப்பேரலையின் ஏழாவது ஆண்டு நினைவு. ஆழிப்பேரலையின் தாக்கத்திலிருந்து எமதுதேசம் தன்னைச் சுதாரிக்கும் முன் அனைத்து உலகமும் எமது தேசத்தின்மீது ஏற்படுத்திய செயற்கை ஆழிப்பேரலையின் தாக்கத்தின் விளைவுதான்.


முள்ளிவாய்க்கால் எனும் இனஅழிப்புப் பெரவலமாகும்.ஆழிப்பேரலையின் போது ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகளிலும் பன்மடங்காகும்.இயற்கை ஆழிப்பேரலையோ தமிழ்ஈழ மக்களின் ஒருபகுதியினரையே தாக்கி
அழித்த து.


அது இயற்கையின் சீற்றம்.ஆனால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதப் பேரவலம், இனச்சுத்திரிகரிப்பு, இனஅழிப்பு என்னும் செயற்கை ஆழிப்பேரலை  அனைத்து உலகநாடுகளும் ஒருமித்து அங்கீகாரம் கொடுத்து நன்கு திட்டமிட்டு செய்துமுடிக்கப்பட்டுள்ளது என்னும் வேதனையான விடயம்.


எம்மினத்தின் அழிவினை அட்டவணை போட்டு பலதடவை காலக்கெடு கூடக்கொடுத்து நெறிப்படுதியவர்கள் வேறுயாருமல்ல சமாதானப் புறாக்கள் எனத்தம்மைத்தாமே உலகிற்கு பறைசாற்றிக் கொண்டும்.

உலகில் சமாதானத்திற்காக உழைத்தவர்களிற்கு என வருடம் தோறும் நோபல் பரிசுகளை கொடுப்பவர்கள்தான்.


மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதன் ஊடாகவே பெரும்பணம் ஈட்டுவதால் போருளாதாரத்திலும், புகழிலும் உயர்நிலையில் வாழவேண்டும் என்பதற்காக எந்த இனம் அழிந்தாலும்,அளிக்கப்பட்டாலும் ஒருவார்த்தையும் கூறாது.


அவர்களுடைய புவிசார்நலன்,பொருளாதார நலன்களிற்காகவும்,உறுதியான ஒரு இனமாகவும் இனவிடுதலைப் போராட்டமாக இருந்தால் என்ன.

அவ்வினங்களின் தாயகப் பிரதேசங்களில் உள்ள இயற்கை வளங்களையோ தமது தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதலால் சுதந்திரத்திற்காக போராடுமினமும்,போராட்டக் கட்டமைப்புக்களை அள்ளித்துவிட்டு.


தங்களிற்கு ஒன்றுமே தெரியாதது போலிருப்பது.உலகமே வெட்கித் தலை குனிய வேண்டியவிடயமாகும்.இப்போது இந்த உலகில் இயற்கை அன்ர்த்தங்களிலும் பார்க்க செயற்கையாக ஏற்படுத்தப்படும்  அனர்த்தங்கள்தான் மிகப் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்துகிறது.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


கோடரிக்காம்புகளாக தாயக........


தமிழர்களின் வரலாற்றைப் பார்ப்போமானால் அன்றிலிருந்து,இன்றுவரை மண்,பொன்,பெண் இவை மூன்றிற்காகவும் தம்மிடையே அடித்து கொண்டும்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும்.கன்னியாகுமரி முதல் கடாரம் வரை பெரும் சாம்ராச்சியங்களை வைத்திருந்த பேர் அரசுகள் எல்லாம் அன்றும் அழிந்தன.

இன்றும் தமிழ்ஈழ தாயக விடுதலை
ஆயுதவழிப் போராட்டமானது உலகநாடுகளினால் நசுக்கப் பட்டதற்கு முக்கிய காரணங்கள் எவை தமிழ்இனத்தின் ஒற்றுமையின்மை,பொறாமை,காட்டிக்கொடுப்பு இவற்றினூடாகக் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, புகழ்,பதவிகள் இல்லையேல் சலுகைகள்.

இவ்விதமான அற்பஇன்பங்களிற்காக எம்மினத்தையேவிற்று அதனூடே கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியிலும்,புகழிலும்,பதவி இல்லையேல் சலுகைகளிலும் நீங்கள் காண்பது இன்பமல்ல ஈழத்தமிழ் இனத்தையே மீட்சியில்லா படுகுழியில் தள்ளுகிறீர்கள்.

ஒருஇனத்தின் அழிவிலா உங்களது சுபீட்சம்,மேன்மை,தற்பெருமை இல்லவே இல்லை. என்பதை ஒன்றுபட்ட தமிழ் உறவுகளின் செயற்பாட்டால் முறியடிப் போம்.உங்களைப் போன்றோர்தான் எம் இன அழிப்பிற்குக் கிடைத்த கோடரிக்காம்புகளாகும்.

தமிஈழத் தாயக விடியலிற்காக உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்று இணைவோம்.

நன்றிகள் பல

Friday 23 December 2011

இனவாதக் கல்வியும் தாயக......


இனவாதக் கல்வியும் அதன் வெட்டு முகமும்.1969 இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது.இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது.

1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக இனவாத அமைப்பு வளர்ச்சி பெற்றது.மலட்டுக் கல்வியும், காலனித்துவ கல்வியும் உண்மையில் மக்கள் நலனில் இருந்து பிரிந்து கிடக்கின்றது. இதனால் தேசத்துக்குரிய கல்வி முறை உருவாக்கப்படவேயில்லை.
தேச உற்பத்திகள், வருமானங்கள் இந்தகல்வியுடன பின்னிப்பினைய இல்லை. தேசிய பொருளாதார கட்டுமானங்கள் இந்த கல்வி முறைக்கு வெளியில் கதியற்று கிடக்கின்றது.

இதனால் சமுதாயத்தில் எற்பட்ட சமூக நெருக்கடிகளை, இந்த கல்வி முறை உற்பத்தி செய்தது. வாழ்வு உழைப்பும் ஒன்றாக இருக்க, கல்வி வேறு ஒன்றாக எதிர்திசையில் நீச்சலிட்டது. இதை சமளிக்க இனவாதத்தை கையில் எடுத்த ஆளும் வர்க்கங்கள் அதை கல்வியில் புகுத்தியது.

இதன் மூலம் சமூக நெருக்கடிகளை இன நெருக்கடியாக்கியது. கிடைக்கும் சில உயர் கௌவுரமான பட்டங்களை, இனத்துக்கிடையில் பகிரும் போட்டியாக்கியதன் மூலம், கல்வியை வக்கிரப்படுத்தி சமூக நெருக்கடியை இனநெருக்கடியாக்கினர்.

அதாவது கிடைக்கும் ஒரு சில எழும்புகள் யாருக்கு என்ற நிலைக்குள் கல்வி பந்தாடப்பட்டதன் மூலம், கல்வியை இனவாதமாக்கி முற்றாக அனைத்து சமூகத்துக்கும் மறுப்பது சாத்தியமாகியது. இதில் இன ஒடுக்கமுறை சார்ந்து, சிறுபான்மை இனங்கள் பாரிய மாறுப்புக்குள்ளாகின்றனர்.

இதுவே இந்த அமைப்பின் ஜனநாயகமாகியது. இனவாதக் கல்வி முறை இனத்தை மலடாக்குவதில் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இனவாத அமைப்பில் தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர்.

அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது.

கல்வியில் குறிப்பாக இனவாதம் புகுத்தப்பட்ட 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிகளின் குறிப்பான நியாமனம் முஸ்லிம் மந்திரி என்பதால் மட்டும் விதிவிலக்காகியது. ஆசிரியர் மாணவர் விகிதம் மேலும் குறிப்பாகும் போது, பின்தங்கிய பிரதேச சாதிய இன மாணவர்கள் அதிகம் பதிப்புக்கு உள்ளாகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 184350 யாகும். இங்கு 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர்என்னும் விகிதத்தில் காணப்படுகின்றது.

இதில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதியான கிளிநொச்சி முதல் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் அதிகம் பாதிப்படைகின்றது.

யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும், யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக காணப்படுகின்றது.

இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது ஆழமான கல்விப் பிளவை ஏற்படுத்துகின்றது. இது சாதி, மதம், இனம், பிரதேசம் என்று எங்கும் இது விரைவிப் போய்யுள்ளது.

ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைக் காணமுடியும்; 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர் 72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்தோரும் 2.3 சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகினர்.

இங்கும் யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும்.

கல்வியின் மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர்.1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180000 பேர் பங்கு கொண்ட போது, மலையக மாணவர்கள்; 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர்.

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்த போது, மலையக மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ் தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள்.
அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள் உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை. 12 பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே உள்ளனர்.

இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம் கிடைக்க வேண்டும்;. ஆனால் யாரும் இதை கண்டு கொள்வதில்லை.

யாழ்ப்பாணத்தில் 1998-1999 இல் 20 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை. 5 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட 132 859 பேரில் 17.1 சதவீதமான மாணவர்கள் அதாவது 23000 பேர் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை.

1.9 சதவீதமான 2500 குழந்தைகள் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. 13.3 சதவீதமான 17700 மாணவர்கள் இடம் பெயர்ந்து காணப்படுகின்றனர். 46.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் 2000 ரூபாவுக்கு குறைவான குடும்பங்களைச் சார்ந்த வறியவர்கள்.

6.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் அதாவது 9200 பேர் அன்றாட கஞ்சிக்கே உழைப்பில் ஈடுபடுகின்றனர். 10.2 சதவீதமான 13500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 0.09 சதவீதம்; அதாவது 1200 குழந்தைகள்ம் ஊனமுற்றவர்களாகும். 5.2 வீதமான 6908 இளம் வயதினர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர்.

இந்த சமூக அவலம் சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் என்ற பல்துறை சார்ந்து புரையோடிக் காணப்படுகின்றது. இது கால காலமாக நீடித்து இருக்கின்றது. இன்று இனவாத யுத்தம் இதை அகலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் மலட்டுக் கல்வி, மறுபுறம் சமூக அவலங்கள் இளம் குழந்தைகளின் வாழ்வில் நாசகாரமான நஞ்சாக திணிக்கப்படுகின்றது."தமிழ் ஈழத்தாயக விடிவிற்கான உலகத் தமிழர்களின் உரிமைக்குரலாக ஒன்றுபடுவோம்".


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

Wednesday 21 December 2011

பொறுப்பு யாரிற்கு!



தமிழ்ஈழ தாயக,தாயகமக்களின் சுபீட்சமான விடிவினை நோக்கி. உலகிலுள்ள அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றிணைப் பதினூடாகப் பாதிக்கப்பட்டவர்களின் விடிவிற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு.



அனைத்து தமிழ் ஊடகங்களினதும் தலையாய கடமையாகக் கொண்டு உழை க்கவேண்டும்.அதைத்தவிர்த்து தமிழ்த் தேசியத்திற்காக ஒன்றுபடும்வோம்.

  
தமிழ்மக்களையும், தமிழ்த்தேசியத்திற்காக உழைக்கும் அனைத்து வளங்களையும் ஒருமித்து தமிழ்ஈழத்தாயகத்திற்கான விடிவிற்காக உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல

நத்தார் நல் வாழ்த்துக்கள்

உலகின் தன்மானத் தமிழ் மக்கள் அனைவரிற்கும்!


இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!

நன்றிகள்!

Tuesday 20 December 2011

தாயகத்தை.....

உயிருமேலான தமிழ்ஈழதாயகத்தையே,பெற்ற அன்னையிலும் மிகச்சிறந்த உறவு என்பேன் .அப்படிப்பட்ட தமிழீழத்தாயாகத்தையும், தாயகமக்களையும் ஏன் வெறுக்கிறீர்கள்?


தாயகமோ,தாயகமகளோ செய்த தவறுதான் என்ன? நாங்கள் அங்கு,அம்மக்களிற்கு என்னசெய்கிறோம் என்பதை மிக அவதானத்துடன்,நிதானமாகச் செயற்படுகிறோமா என்றால் அதுதான் இல்லை.


எங்கு நாங்கள் சென்றாலும் தத்தமது சுயவிருப்பு,வெறுப்புக்களை தாயக மேம்பாடிற்காக உழைக்கும் இடங்களில் துற்பிரயோகம் செய்வதனூடாக அச்செயற்பாடுகளிற்கு அபகீர்த்தி ஏற்படுத்திக் கொள்வதும்.


ஏற்படக் கூடிய விளைவுகளை கருத்திற் கொள்ளாமல் தங்களது தற்பெருமை, தற்புகழ்ச்சி போன்றவற்றை எதிர்பார்த்து.

தாயகத்தின் விடிவினை மளுங்கடிக்காது தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழர்கள் அனைவரினதும் குரலாக ஒன்றிணைவோம்.


தமிழ்ஈழதாயகத்தின் விடிவிற்கான குரலிற்காக உலகத்தமிழர்களை ஒன்றினைப்பதே குறிக்கோள்.

தமிழ்ஈழ விடிவிற்காக உலகத்தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல

Monday 19 December 2011

தற்பெருமையா? தாயக....



புலம்பெயர் தேசங்களில் தாயக விடுதலைக்காக உழைக்கும் செயற்பாட்டாளர்களின் தாயக விடுதலைக்கான உணர்வை, உழைப்பை உருக்குலைகும். செயற்பாடுகளின் மூலம் தாயக விடுதலையையும்,அதன் செயற்பாடுகளையும் நிர்மூலம் ஆக்குவதோடு அதன் செயற்பாட்டாளர்களை புறம்தள்ளி.


தாயக விடுதலைக்கான சிறந்த செயற்பாட்டாளர்கள் என்று தற்பெருமை கொள்வதற்காக தாயவிடுதலையை பகடையாகப் பயன்படுத்தாது.

தாயகவிடுதலைக்கு ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்புக்களை இதயசுத்தியுடன் எவ்வித பலனையும் (உதாரணம் புகழ்,பதவி,சமூகத்தில் உயர்ந்த நிலையை எட்டலாம்)என்று எதிர்பார்க்காமல்.


தாயவிடுதலையை முழுமையான நோக்கம்,கொள்கை,குறிக்கோள் என்பவற்றை கருத்திற் கொண்டு உழைப்போம். அதுவே எமகிற்கு வளர்ச்சியைத்தரும்.


இல்லையேல் அது எமது இனத்தின் விடிவினை அன்றி அழிவையே ஏற்படுத்தும். ஒவொருவரும் தத்தமது இனத்தின் விடிவிற்காக உழைக்க வேண்டுமே அன்றி இனத்தின் அழிவில் தத்தமது தற்பெருமையை நிலைநிறுத்திக் கொள்வதை தவிர்க்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் ஈழத்தாயக விடிவினைக் காண உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.


நன்றிகள் பல