Friday 21 June 2013

உலகை நடுநடுங்க வைத்த தமிழ்........!

ஆயிரத்தில் உலகை நடுநடுங்க வைத்த தமிழ் சோழ மன்னன்.

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராசேந்திர சோழன்.


இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராசேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, யா(ஜா)வா , போர்னியோ , பிலிப்பைன்சு, பார்மோசா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 கிலோமீட்டர்(KM) க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .யூலியசு(ஸ்) சீசர் , அலெக்சாண்டர் , தாமூர் , செங்கிசு(ஸ்)கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராசேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேசியாவின் தெற்கு முனை வரை இராசேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராசேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.