Thursday, 6 September 2012

திடுக்கிட வைக்கும் மர்மம்.............!

திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார் !

மேதகு தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்கள்!

தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராச(ஜ)பக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு செலுத்தியதாகவும். அதன், விளைவாகவே, அவர் மரணிக்க நேர்ந்ததாகவும் சிங்களத் தரப்புகளிடம் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த படுகொலைத் திட்டமிடலில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சரத் பொன்சேகாவிற்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவருகிறது.

அதன் அடிப்படையிலேயே, சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம், இவ்வாறான முறையில் கொல்லப்படலாம் என்ற அச்சம் நிலவியதாகவும். அதனால், சரத் பொன்சேகா இரட்டிப்பு விழிப்பு நிலையில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

ஆனால், காலம்சென்ற வேலுப்பிள்ளை அவர்களது படுகொலையில் சரத் பொன்சேகாவும் தொடர்புபட்டிருந்தமையால் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர்.

ஆனால், அண்மையில் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவரும், புலிகளுக்கு எதிரான சமர்களில் தீவிர பங்காற்றியவருமான இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான படைத் தலைவர் வழக்கமான (Major General)சமந்த சூரியபண்டார மாரடைப்பால் அவுசுத்திரேலியாவில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிங்கள அரச பயங்கரவாதத்தின் படுகொலை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.

ஏனெனில், குறிப்பிட்ட காலத்தின் பின்னர், இயற்கையான மரணம் போன்று சம்பவிக்கக் கூடிய வகையில் திட்டமிட்ட முறையில் விசம் ஏற்றப்பட்டதாலேயே சூரியபண்டார மரணமடைந்திருப்பதாக சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் அளவையும் தாண்டி, குறிப்பிட்டவர்களுக்கு நெருக்கமானவர்களையும் படுகொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளதே சூரியபண்டாரவின் மரணம் எனவும் தெரியவருகிறது.

இதேபோன்றதொரு முறையிலேயே, ரசியா உளவுப் பிரிவில் பணியாற்றிய முன்னால் இளநிலை அதிகாரியான அலெக்ஸ்சான்டர் லிற்வினேகோ, 2006 நவம்பரில் இலண்டனில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பலசுத்(ஸ்)தீன முன்னால் அதிபர் யசீர் அரபாத் அவர்களும் இவ்வாறே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளிவந்ததையடுத்து விசேட அவதானம் அவரது மரணம் தொடர்பாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday, 4 September 2012

மலேசியத் தமிழர் வரலாறு..............!


இன்றைய மலேசியத் தமிழர்களின் முன்னோர்களும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இங்கு வந்தவர்கள். இரப்பர் தோட்டங்கள் மலேசியத் தமிழரின் தொட்டில்கள் என்று சொல்லலாம்.

1786 தொடங்கி 1938 வரையில் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் மிகப்பெரும் தொகையினர் ஆவர். இவர்களுள் 85% பகுதி தமிழர்கள். காடுகளும் மலைகளும் நிறைந்து கிடந்த இந்த நாட்டை வளமாக்குவதற்கு வந்த எந்தமிழர் பெருமக்கள், துன்பங்கள் – துயரங்கள் நிறைந்த இரப்பர் தோட்டத்து வாழ்க்கையை நாட்டுப்புற பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் பாடல்களிலிருந்து எமது முன்னோர்களின் வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இந்தப் பதிவில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மலாயாவில் அப்போது இரப்பர் தோட்டங்களை உருவாக்குவதற்கும் அங்கு மாடாய் உழைப்பதற்கும் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்குப் பொருத்தமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள்தான் என்று வெள்ளையர்களுக்குத் தெரிந்தது. உடனே, தென்னிந்தியாவில் ஆட்களைச் சேர்ந்து மலாயாவுக்குக் கொண்டுவந்தனர். எப்படி தெரியுமா?

பகடியான வார்த்தையிலே
பால்மரத்தில் பணம் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிர்ஷ்டமும் தானேவரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க
பொய்சொல்லிக் கப்பலேத்திப்
பொழப்பெல்லாம் போச்சுங்க
கருங்கடல் தாண்டிவந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டின்னு
கையேந்தி ஊமையானோம்.

தென்னிந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தமிழ் மக்களை ஏற்றிவந்து, மலாயாவில் தரை இறக்குகிறார்கள் வெள்ளையர்கள். கடலில் வரும்போது நோயாலும் இன்னபிற காரணங்களாலும் பலர் மாண்டு போயுள்ளனர். அதில் பிழைத்து இங்கு வந்து சேர்ந்த எமது முப்பாட்டன் ஒருவன் தாம் பட்ட துயரத்தை இப்படி பதிவு செய்து வைத்துள்ளான்.

காடுமலை மேடுபள்ளம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
மாடுபோல உழைக்கணும்
மலையேறிப் பாடுபட்டு
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
ஓடிவர்றார் பூட்சுகாலால் உதைக்க
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
அப்பப்பா பசிக்கொடுமை...

அன்று இரப்பர் தோட்டங்கள் எப்படி இருந்தன என்று எங்கள் நாட்டுக் கவிஞர் வீரமான் இப்படி பாடிவைத்துள்ளார்.

வாய்பிளந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேய் உலவும் வெளிக்காடு
பீதியன்று முடிந்ததுண்டோ?
புதர் அடர்ந்த மேடுபள்ளம்
புலி உலவக் கூடுபயம்
உதற வைக்கு பனியிருட்டு...

இரப்பர் தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளையும் செய்த வேலைகளையும் கீழே வரும் பாடல் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். தாயகத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து போதாதென்று, வாழ்வுதேடி வந்த இடத்தில் எமது மக்கள் பட்ட பாடுகளைப் பாருங்கள்.

*காண்டா வாளி தூக்கணும் கடுமையான (நா)நூறு மரத்தை நாங்க வெட்டனும் உழைபாளியா நாங்க இருந்து ஓடாத் தேயணும் உழைக்கும் மக்கள் நாங்க வறுமையால வாடணும் இட்ட வேலையை நாங்களே எடுத்துக் கூறிச் செய்யணும் செய்யாவிட்டால் பின்முதுகில் பிடரி பிடித்துத் தள்ளுவார் ஏனென்று கேட்க நாதியில்லே எடுத்துரைக்கக் கதியும் இல்லே..

*காண்டா வாளி:- மேலே படத்தில் பெண் தொழிலாளி தோளில் தூக்கிச் செல்லும் கருவி. இரப்பர் பாலை வாளியில் நிரப்பி 'காண்டாவில்' மாட்டி தோளில் சுமந்து செல்வர். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தோட்டத்து மக்களை

‘சாமக்காரன்’ விடுவீடாகச் சென்று மணியடித்து, கூவி எழுப்பி விடுவான். வீட்டில் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து, குழந்தைகளைப் பாதுகாக்க

*‘ஆயக்கொட்டகை’யில் விட்டுவிட்டு ஆறு மணிக்கெல்லாம்

‘பெரட்டுக்குப்’ போக வேண்டும். அங்கு

*‘கங்காணி’யிடம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திவிட்டு, இன்று எந்தக் 

*காட்டில் வேலை என தெரிந்துகொண்டு கல்லிலும் முள்ளிலும் காலால் நடந்து வேலைக்காட்டுச் சென்று மாலைவரை மாடாய் உழைத்துவிட்டு வீடு திரும்பும் அந்தப் பால்மரகாட்டுக் கொடுமை சொல்லி மாளாது.

தோட்டத்து நிருவாகிகளாக இருந்த துரைமார்கள் (வெள்ளையர்கள்) எமது மக்களை அடிமாடுகள் போல மதித்து வேலை வாங்கினர். துரைமார்கள் பண்ணிய கொடுமைகள் தாங்காமல் ஊருக்குத் திரும்பும் வழியும் அறியாமல் தவியாய் தவித்த மக்களின் இன்னல்கள் ஏராளம் உள்ளன. துரைமார்கள் ஒருப்பக்கம் என்றால், தோட்டத்தில் வெள்ளிக்காரர்களின் ஏவலாளிகளாய் இருந்து தொழிலாளர்களைக் கவனிக்கும்

*‘கங்காணி’கள் பண்ணிய எகத்தாளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

*சாமக்காரன் – அதிகாலையில் தொழிலாளர்களின் வீடு வீடாகச் அவர்களை எழுப்பும் வேலையாள்.

*ஆயக்கொட்டகை – தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் இடம். அங்கு வேலை செய்யும் பெண்கள் ‘ஆயா’ என்று அழைக்கப்பட்டனர்.

*பெரட்டு – தொழிலாளர்கள் வருகையைப் பதிவுசெய்த்து அவர்களுக்கான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு

*கங்காணி – தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்ளவும் வேலை வாங்கவும் வெள்ளைக்கார துரைகளால் நியமிக்கப்பட்ட பணியளர்கள்

*காடு – இரப்பர் மரங்கள் பயிரப்பட்டுள்ள காடுகள். அவை 1, 2, 35, 48 என்று எண்களால் பெயரிடப்பட்டிருக்கும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 3 September 2012

ஏன் ஈழத்துக்கு எதிராக மலையாள அதிகார...?

மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்? 

பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.தமிழர்களை ‘பாண்டி’ என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.மலையாள மொழி என்பதே தமிழுடன் சமசு(ஸ்)கிரதம் சேர்ந்து உருவான மொழி.

அவர்கள் அதை சமசு(ஸ்)கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்லமாட்டார்கள்.தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.

இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக் கொண்டது குறைவு. தமிழர்கள் மலையாளிகளுக்கு போட்டியாக இருந்ததும் கிடையாது. கேரளாவுக்குத் தேவையான இறைச்சி முதல் கொண்டு மரக்கறி அரசி வரையிலான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. 

ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் சிங்கள அதிகார வர்க்கத்தின் பங்கை விட மலையாள அதிகார வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானது. வட இந்திய அதிகார வர்க்கத்துக்கு எப்படி சோழர்களையும் அவர்களது புலிச்சின்னத்தையும் பிடிப்பதில்லையே அது போல இந்த மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழம் என்ற சொல் எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கிறது.

அதற்குக் காரணம் மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயாகும்!

ஈழவர்கள் என்பது கேரளாவில் வாழும் ஒரு பிரிவு மக்களாகும்.இவர்கள் மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும்(73 இலட்சம் பேர் ) ஒரு 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேளர ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள் வீதியில் வரும் போது இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாயர்கள் விதியில் வந்தால் இவர்கள் அவர்களுக்கு 15 அடி தள்ளியே ஓரமாக நடந்து செல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள்.ஒரு நம்பூதிரி அல்லது நாயரை ஈழவன் தொட்டுவிட்டால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்ற அளவு கொடிய ஒடுக்குமுறை இருந்தது.

இந்த ஈழவர்கள் சேரர் பரம்பரையை சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் ஈழத்தை சேர்ந்த ஈழவா அல்லது திய்யா என்ற மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களது குடி மக்களும் என்றும் இவர்களின் பூர்வீகம்பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.

கேரள அதிகார வர்க்த்தைச் சோந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயண குரு. அவர் அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார்.

இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்றும் எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் நேர்வழியில் பயன்படுத்தி அறிவைக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஆலங்களுக்குள் ஈழவர்கள் செல்லக் கூடாது என்று என்று அதிகார வர்க்கம் சொன்னபோது அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார். 1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அவர் சிவன், விசு(ஷ்)ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில் இறைவன் ஒயிமயமானவன் என்பதை விளக்குவதற்காக விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிட்(ஷ்)டை செய்து கோவில்களை அமைத்தார்;, பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிட்டை செய்தும் கோவில்களை அமைத்தார்.

அதன் பின்னர் மனிதனது மனச்சாட்சிதான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிட்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.

அத்துடன் இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும் இடங்களையும் அவர் அமைத்தார்.

ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர் வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர் வேத மருத்துவமனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.

இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தது.அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது. நாராயண குரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர்.

திருவனந்தபுரத்தில் அப்போதைய பிரித்தானிய அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யா என்ற தமிழரே அவராகும். சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்த அவரிடம் நாராயண குரு தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார்.

திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார். தைக்காடு அய்யாவை தான் சந்தித்ததும் திருமூலரின் திருமந்திரமும் தான் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.

இது காலாகாலமாக கேரளத்தில் வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்த நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை உள்ளடக்கிய மலையாள அதிகார வர்க்கத்துக்கு கோபத்தை எற்படுத்தியதுடன் தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது.

1980 களின் ஆரம்பத்தில் நான் கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம்,நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை,காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

இந்த கிராமங்களின் அமைப்பு முறை குறிப்பாக ஒழுங்கைகள் வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை தோட்டம் கிணற்றடி அமைப்பு முறை மா பலா தென்னை கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி(மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.

உணவு முறையும் கூட புட்டு அப்பம் கழி சொதி குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது.

தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!!எவட போற! உறைப்பு கூட! இப்ப பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.

எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் குடத்தனை மாமுனை குடாரப்பு முதலான ஊர்களில் ‘பார் அவரை’ என்பதை ‘பேப்பார்’ என்றுற சொல்வார்கள்.இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை. ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.

அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள்.தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை.பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது (தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது) தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேற்காயை குத்தி உரிப்பது தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னவது.

பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான். இந்த ஒற்றுமைகள் நாயர்கள் நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் ஆனால் இதேவேளை மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை தங்காலை கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன.

அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தாhhர்கள். தென்னம் பொச்சை நிர்நிலைகளில் ஊறவைப்பது.பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது.அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றது.

இது இந்த மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை எனக்கு எற்படுத்தியது. எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள் முன்வந்தனர்.

அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும். நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலிருந்த நாராணாய குரு மன்றம் திருவிதாங்கூர் சம(ஸ்)தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர் கோடு வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி கள ஆய்வு செய்ததில் ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது.

முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும் படைதளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.

கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள் வரலாற்று நூல்களிலும் உள்ளது தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக்கொண்ட ஈழத்து மன்னர்கள் ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது இவர்களையே படைத்தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமியத்திருக்கிறார்கள்.

ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். 

ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்;கரருடைய எழுச்சி தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமசு(ஸ்)கிரத கலப்புக்குள்ளாக்கி லிங்ங வழிபாடு பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகிவழிபாடு) முதலான தமிழ் வழிபாட்டு மரபுகளை அழித்து அறுவகை சமையம் என்ற வைதீக கட்டுக்குள் கொண்டுவந்தது.

சேரநாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு விசு(ஷ்)ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.

சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகார முடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமசுகிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள் அதேநேரம் தமிழகத்தில் சைவ நாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம் சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண பௌத்த மதத்தினரை கழுவேற்றிக் கொலை செய்யும் அளவுக்கு வெறி கொண்டதாக மாறுகிறது.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும் கூட) துடைத்தழிக்கபடுகிறது.அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த பிக்குகள் கழுவேற்றிக் கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர் ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர் அந்த காலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப் பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூhர்) சென்று தஞ்சமடைகின்றனர். ஈழத்திலும் இந்த மதப் போர் சைவ பௌத்தப் போராகவும் மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது.அந்த நகரத்தின் கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லி (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலை கட்டியவள்)யை மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான்.

தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேர வாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது.

தேரவாத பௌத்தமானது தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டு எதிர்ப்பு ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக்கொள்கிறது.

தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.

இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள்.அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்க சாதியனரான (ஆரிய வம்சாவழி) நம்பூதிரிகளும் நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர்.

இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது. இதிலே முக்கியமான விடயம் ஈந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அது எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை. 

திய்யா என்று அழைக்ப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன் குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா?அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரச வம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது அராயப்பட வேண்டும்.

நாங்கள் இந்த வரலாற்று கள ஆய்வை மேற்கொண்ட காலத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளோ இணைய வசதிகளே ,உரிய போக்குவரத்து வசதிகளோ எமக்கு இருக்கவில்லை.கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல கிராமங்களுக்கு நாங்கள் கால்நடையாகவே சென்றிருக்கிறோம்.

இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளும் இணயத்தின் வருகை உலகை கணனியின் விசைப்பலகைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்ட நிலையில் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் இந்த ஈழவர்களின் வரலாறு பற்றிய ஆய்வை துறைசார் ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.

1983ல் நாங்கள் இந்த கள ஆய்வை முடித்த போது தோழர் எமிலியாசு(ஸ்) சொன்னார் ‘தோழர் ஈழவிடுதலைக்காக போராடும் உங்களுக்கு சிங்கள அதிகார வாக்கம் மட்டும் எதிரியல்ல,இன்னொரு 10 வருடம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மலையாள அதிகார வர்க்கமும் உங்களை எதிர்க்கும்,அவர்களுக்கு ஈழவர்களை பிடிக்காது.

அதனால் ஈழத்தையும் பிடிக்காமல் போகும் கவனமாய் இருங்கள்’என்று. அவர் சொன்னது இன்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகி இருக்கிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 2 September 2012

எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? எழுத்து...!

தமிழ்மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது என கடந்த இதழில் எழுதியிருந்தேன். அதற்கு, தமிழ் 2400 ஆண்டுகளுக்கு முன்பே வரியெழுத்து நிலையை அடைந்திருந்தது என்று எப்படி உங்களால் எழுதமுடியும்? படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்பன என்ன? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். ஆதலால் தொல்காப்பியத்தின் காலத்தை சற்று ஆராய்வோம்.

1. இன்று இருக்கும் தமிழ் நூல்களிலே காலத்தால் பழமையானது தொல்காப்பியம். இது உலக மொழிகளில் கிடைக்கக்கூடிய இலக்கணநூல்களிலே பழமையானதுமாகும். தொல்காப்பியர் இடைச்சங்ககாலப் புலவர். இவருடன் படித்த பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தைப் (முகவுரையை) பாடியுள்ளார். அதில் தமிழ்மொழி பேசப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறித்துள்ளார். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்” இதில் பனம்பாரனார் தமிழ்மொழி பேசப்படும் நாடு என்று கூறாமல் தமிழ்மொழி பேசப்படும் உலகம் என்றும் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு நாடு உலகம் ஆகாது. பல நாடுகள் சேர்ந்ததே உலகம். எனவே பனம்பாரனார் சொல்லிய நில எல்லைக்குள் தமிழ்மொழி பேசப்பட்ட பல நாடுகள் இருந்திருக்கின்றன. அவரின் கருத்திற்கு துணைசேர்ப்பது போல் தொல்காப்பியரும் “இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” அதாவது இயற்சொல் செந்தமிழ் பேசப்படும் நிலத்தில் வழங்கும் சொல்லாய் இருப்பதே ஆகும். இதில் செந்தமிழ் நிலத்து என்று சொன்னவர் திசைச்சொல்லை கூறுமிடத்தில் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனப் பிரித்துக் காட்டுகின்றார்.

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச்சொற் கிளவி” அதாவது தமிழ்கூறும் உலகைச் சூழ்ந்துள்ள செந்தமிழ் கலந்த வேற்றுமொழிகள் பேசப்படும் நாட்டுச்சொற்கள் தமிழிலே வந்து வழங்கும் போது அவை திசைச்சொற்கள் எனப்படும். இதனால் தொல்காப்பியர் காலத்தில் செந்தமிழ் நிலமும் அதைச்சூழ செந்தமிழ் சேர்ந்த பன்னிரெண்டு நிலமும் இருந்தது தெரியவருகின்றது. ஒர் இடத்திற்கு எல்லை கூறும்போது நான்கு திசைகளில் எல்லை கூறுவார்கள்.

ஆனால் பனம்பாரனாரோ தமிழ்கூறும் நல்லுலகிற்கு வடவேங்கடம் தென்குமரி என இரண்டு எல்லைகளையே கூறியுள்ளார். அது ஏன்? தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் “கடல் கொள்வதன் முன்பு பிறநாடு உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின என இதற்கு விளக்கம் தந்துள்ளார்”. 

வட வேங்கடத்திற்கு வடக்கே பிறநாடு இருப்பது போல கடல் கோளின் முன்னர் குமரிக்குத் தெற்கேயும் பிறநாடு இருந்ததால் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் கடலாதலால் எல்லை கூறவில்லை. இவர் கருத்தின்படி பனம்பாரனாரும் தொல்காப்பியரும் குமரி கடல்கோளால் அழியுமுன் வாழ்ந்தவர்கள் ஆகின்றனர்.

2. தொல்காப்பியத்தின் இன்னொரு உரையாசிரியரான பேராசிரியரும் தமது தொல்காப்பிய உரையில் “பனம்பாரனார்”, “வடவேங்கடம்”, தென்குமாரி எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறி பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது” எனக் கூறியுள்ளார். 

பனம்பாரனார் தென்குமரி என்றதை பேராசிரியர் குமரியாறு என தெளிவுபடுத்தியுள்ளார். அந்நாளில் குமரியாறு இருந்த உண்மையை Òகுமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்று புறநானூற்றில் பிசிராந்தையார் சொல்லி இருப்பதால் நாமறியலாம்.

அயிரை என்பது ஒருவகை மீன். இந்த அயிரை மீன் ஆற்றுநீரிலே வாழும். கடல் நீரில் வாழாது. எனவே இப்பாடலில் பிசிராந்தையார் சொன்ன குமரியம் பெருந்துறை இன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அல்ல. இன்றைய குமரிமுனை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. ஆதலால் குமரியம் பெருந்துறை குமாரியாற்றங் கரையில் இருந்திருக்கின்றது. பெருந்துறை என்பதால் அது ஒரு துறைமுகமாகும். தமிழரின் போக்குவரத்து குமரியாற்றில் நடந்தது என்ற உண்மையை இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த குமரிப்பெருந்துறையை பின்னாளில் வந்த பௌத்த பாளி நூல்கள் மகாதித்த என்கின்றன. அதனை நாம் மாதோட்டம் என்கிறோம். மனித நாகரீகமே ஆற்றங்கரைகளிலே தான் வளர்ந்தது. பழந்தமிழர் நாகரீகமும் குமரியாற்றங்கரையில் உருவானது என்பதை இது காட்டுகின்றது.

தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாரே குறுந்தொகையில் “ஆரவாரித்து எழுந்த கடல், ஏறி மிதித்ததால் நீரினிடையே மலையின் உச்சி அசைந்ததை”, “ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பில் கூரசைந் தனையை” எனக் கூறியுள்ளார். ஆதலால் அவர் காலத்தில் கடல்கோள் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதைப் பார்த்த பின் அந்த உண்மையை இவ்வரிகளில் அவர் பதிவு செய்திருக்கலாம்.

தெற்கே குமரி கடல்கோளால் அழிந்ததை மார்க்கண்டேயர் புராணமும் கூறுகின்றது. “அயம்பது நவமஸ் தேஷாம் த்விப சாகர ஸம்வ்ருத குமாராக்யா பாரிக்யாதோ த்வீபோயம் தஷிணோத்ர” பல நாடுகளை அழித்த மாபெரும் கடல்கோள் சொலமன் அரசனின் காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன் நடந்தது. The Anchor Bible Dictionary அது நடந்த காலத்தை கி.மு 1250 இந்த கடல்கோள் நடந்த காலத்திற்கு தொல்காப்பியர் காலம் சாரிவருமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

5. தொல்காப்பியரை பனம்பாரனார் தொல்காப்பிய பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் புகழ்ந்துள்ளார். ஐந்திரம் என்பது தொல்காப்பியர் படித்த பழந்தமிழ் இலக்கண நூல். அந்த ஐந்திரத்தை மயன் எழுதினான். ஐந்திரம் பாணினீயம் எனும் வடமொழி இலக்கணத்திற்கு முந்தியது. பாணினீயத்தை எழுதிய பாணினியின் காலம் கி.மு 4ம் நூற்றாண்டாகும். சிலர் இந்திரனால் எழுதப்பட்டது ஐந்திரம் என்பர். அது பிழையான கருத்தாகும். இந்திரன் எழுதிய வடமொழி இலக்கண நூல் இந்திரம்.

6. சமணம், பௌத்தம் எனும் இரு மதக் கொள்கைகளும் தமிழ் நிலத்தில் பரவியதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்களும் நூல்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியத்தில் சமண, பௌத்த மதக்கொள்கைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே இவ்விரு சமயமும் தமிழ்நிலத்தில் பரவ முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டது எனக்கொள்ளலே பெருந்தும். மேற்கூறிய ஆதாரங்கள் யாவும் தொல்காப்பியர் 
காலத்தை கி.மு 4ம் நூற்றாண்டிற்கு முன்பே கொண்டு செல்கின்றன.

அடுத்து படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களை படமாகக் கீறினான். அதனை உருவ எழுத்து என்றும் படஎழுத்தென்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைச் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லின் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது “புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது (No Smoking)” என்பதற்கு நாம் பாவிக்கும் அடையாளத்தை போன்றதே கருத்தெழுத்து. இந்த எழுத்துக்களுக்கு ஒலி இல்லை.

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்கள் கூட்டாகச் சேர்ந்து க எனும் எழுத்தை உருவாக்கும். அதுபோன்றதே அசையெழுத்து. தமிழிலிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும். எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? எழுத்தை நாம் உச்சரிக்கும் போது எழுப்பப்படுவதாகவும் அதை எழுதும் பொழுது எழுதப்படுவதாகவும் அமைந்துள்ளது. எழுத்தின் ஓசை எழுப்பப்படும் பொழுது ஒலிவடிவத்தையும் அது எழுதப்படும் பொழுது வரிவடிவத்தையும் எழுத்து பெறுகின்றது. எனவே ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவதே எழுத்தாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தை பெற்றுவிட்டன. அவரது காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்புலவர்கள் எழுத்தின் ஒலிக்கு கால வரையறையும் செய்திருந்தனர். தொல்காப்பியர் அதனை “அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்குங் குற்றெழுத்து என்ப “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” எனக்கூறுவதால் அறியலாம்.

அ இ உ எ ஒ என்ற ஐந்தையும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குற்றெழுத்துக்கள் என்று சொல்வர் எனவும் (இசைக்கும் – ஒலிக்கும்) நீண்டஒலி வேண்டும் மானால் அந்த அளவுக்கு எழுத்துக்களை கூட்டி அவ்வொலியை உண்டாக்குக என்று புலவர் கூறுவரெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வரிவடிவத்தையும் பெற்றுவிட்டதால் ஒரு சில எழுத்துகளுக்கு மட்டுமே வரிவடிவு கூறியுள்ளார். அதனாலேயே போன இதழில் வரியெழுத்து வடிவாக இருந்த தமிழ்மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் என எழுதினேன்.

தமிழ் எழுத்துப்பற்றிக் கூறும் இந்நிலையில் “எலு” மொழி பற்றி தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றேன். இதனை எமது வருங்கால தலைமுறையினர்க்காகவே கூறுகின்றேன்.

அறிஞர்கள் சிலர் கி.மு 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும் வாழ்ந்தார்கள். “எலு” மொழி இயக்கர்களால் பேசப்பட்டது, நாகர்களால் தமிழ் மொழி பேசப்பட்டது என்கின்றார்கள். மிகச் சிலரோ இயக்கர்களால் பேசப்பட்ட “எலு” மொழி கொடுந்தமிழாக இருந்தது. அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விஜயனின் “லாலா” நாட்டு மொழியுடன் இயக்கர்களின் “எலு” மொழியும் சேர்ந்து “சீகளம்” என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கின்றார்கள்.

இதில் யார் சொல்வது சரி? எதனைக்கொண்டு இந்த முடிவுகளுக்கு வந்தார்கள்என்பதற்கு சாரியான ஆதாரம் யாரும்கொடுப்பதில்லை. அத்துடன் இன்றைய வரலாற்றாளிணிவாளர்களில்சிலர் “எலு” மொழியை “எழு மொழி” எனஎழுதிவருகின்றார்கள். அவர்கள் ஆங்கிலநூல்களை வாசித்து “எலு”(Elu) மொழியை“எழு”(Elu) மொழி என எழுதுகின்றார்கள்போலும். அது அவர்களின் தவறல்ல என்பதுபுரிகின்றது.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் “வலு” என்பதை “வழு” என எழுதலாமா? (வலு – வலிமை, வழு – தவறு). அதுவேவழுவாகிவிடாதா? மொழியியலாளர்களால் “ழ” “ள” “ற” “ன” என்ற நான்கு தமிழ் எழுத்துக்களும் தமிழ்மொழியின் சிறப்பெழுத்துக்களாக கொள்ளப்படுகின்றன. அவற்றுள்ளும் தமிழ்மொழிக்கே உரிய தனிச் சிறப்பெழுத்தான “ழகரத்தை” இன்னொரு மொழிக்குச் சேர்த்துச்சொல்வதும் சாரியா? “எலு” மொழியை “எழு” மொழியென பிழையாக எழுதுவதோடுமட்டுமல்லாமல் தமிழில் உள்ள “எழுத்து” என்றசொல்லை “எழு” தந்தது என்று சொல்வது மாபெரும் தவறு அல்லவா? “எலு” மொழி எப்போது? எங்கே? “எழு” எனஅழைக்கப்பட்டது. “எலு” மொழி பேசியவர்கள் “ழகரத்தை” உபயோகித்தார்களா? இவை பற்றி அறிந்தவர்கள் இவற்றுக்கு விளக்கம் தாருங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 1 September 2012

இலங்கை காடுகளில் வேடுவர் ............!

வேடுவர் என்போர் இலங்கை காடுகளின் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.

இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அண்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன.

தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர்.

இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது.

குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விசயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விசயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது.

விசயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விசயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் மகாவம்ச கட்டுக்கதைகள் கூறிவருகின்றனர்.

இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.

ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன.

20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது.

அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன.

இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம்.

இன்றும் வவுனியா செட்டிக்குள பகுதியிலும் சிறு தொகை வேட்டுவ சமூகத்தினர் வாழ்கின்றனர் இவர்களின் தொழில் வேட்டையாடுதல் விவசாயம் மற்றும் வேறு சிறு சிறு தொழில்களை செய்கின்றனர் இவர்களில் இளைய சமூகத்தினர் வேலைதேடி ஏனைய வவுனியா வாழ் சமுதாயத்தினரைப் போன்று நகரத்துக்கு சென்று நகர்புற மக்களோடு கலந்து வாழும் நிலைக்கு மாறி வந்துவிட்டனர்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 31 August 2012

பழந்தமிழகப் பின்னணி......................!


விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதியான அன்றைய திராவிட தேசம், இன்றைய பொதுவழக்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மாநிலங்களைக் குறித்தாலும் கூட மொழி, கலாச்சார, தொல்லியற் பின்னணியில் நோக்கும்போது இக்குறிப்பானது தமிழகத்திற்குப் பெரும்பாலும் பொருந்தும் எனலாம்.

தமிழகம் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகக் காணப்பட்டாலும் கூட, இதன் மொழி, கலாச்சாரம் ஆகியவை தொல்லியல் பாரம்பரியம் கொண்டவை ஆகும்.

தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 

சான்று:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
(புறநானூறு, 168 :18)

இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க
(பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய
( சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
(மணிமேகலை, 17: 62)

சங்க இலக்கியங்களில் இச்சொல் மொழியையும், நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் நாட்டகம், தமிழ் கூறு நல்லுலகம் எனப் பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

சான்று:

தமிழ் கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்: 3)

‘தமிழகம்’ என்ற சொல் கிரேக்கரால் தமரிகெ என்றும், உரோமரால் தமிரிக்கா, தமரிகே எனவும் வழங்கப்பட்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரிய காரவேலனின் காதி கும்பாக் கல்வெட்டில் தமிழகம் திரமிள தேசம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வடிவம் ஒரு பரந்த அடிப்படையில் தென் இந்திய மொழிகள் பேசப்படும் நாடுகளைக் குறிக்கும் ஒரு வடிவமாகவே பயன்படுத்தப்படுகிறது, எனினும் தொடக்கத்தில் இன்றைய கேரள மாநிலத்தை உள்ளடக்கிய பண்டைய தமிழகத்தையே இது குறித்து நின்றது. இதனையே வடமொழியாளர் திராவிட என அழைத்தனர்.

தனித்த பண்டைய தமிழகம்

திராவிட மொழிகளுள் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலிருந்து தமிழகத்தை ஒரு தனித்துவமான கூறாக ஆக்கி விடலாம். திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் மிகப்பழைய இலக்கியப் பாரம்பரியமுடைய மாநிலம் தமிழகம்தான்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் மீது வடமொழி ஏற்படுத்திய தாக்கத்தினைப் போன்று தமிழ் மொழியின் மீது அது மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சங்க இலக்கியங்களில் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.

ஆரிய சமூக அமைப்பில் தமிழகம் இணைந்து கரைந்து போகாமல் தனித்துவத்தைக் காத்துக் கொண்டு நின்றது எனலாம். சுருங்கக் கூறின் தென் இந்தியாவில் ஆரியமயமாக்கும் திட்டம் தோல்வி கண்ட இடமாகவே தமிழகம் விளங்குகிறது.

இலெமூரியாக் கண்டம்

இந்தியாவின் மிகப் பழைய பாறை அமைப்பைக் கொண்டுள்ள தென்னிந்தியா, புவியியல் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த ஒரு நிலப்பரப்பாகும். இந்தத் தென் இந்தியா முன்பு ஒருபுறம் தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றுடனும், மறுபுறம் மலேயாத்தீப கற்பத்தினூடாக ஆஸ்திரேலியாவுடனும் இணைந்திருந்தது.

இப்பெரிய பரப்பு இலெமூரியாக் கண்டம் எனப்பட்டது.. பின்னர் இக்கண்டம் கடற்கோள்கள் போன்ற பேரழிவுகளால் சிதைவுற்றுத் தற்போதைய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகின எனப் புவியியலார் கூறுகின்றனர்.

இவ்வாறேதான் தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள பாண்டி நாட்டைச் சேர்ந்த பகுதிகள் குமரிக் கண்டம் எனப்பட்ட இலெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கின என்றும் கூறப்படுகிறது. ஆனால் இலெமூரியாக் கண்டம் இருந்ததைப் பற்றிய கருத்துகளில் இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.

இருப்பினும், குமரிக் கண்டம் பற்றிய சான்றுகள் ஓரளவு நம்பகமானவை எனக் கொள்ளப்படுகின்றன. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்கநாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும் மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய கடற்கோள்களினால் தமிழகத்தின் எல்லை சுருங்க, வேங்கடம் இதன் வட எல்லையாகவும், குமரி இதன் தென் எல்லையாகவும் ஆயின. இதனையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்,

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்
(தொல். சிறப்புப் பாயிரம்: 1-3)

என்றும், சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாடு

(சிலப்பதிகாரம், வேனிற்காதை, 1-2)
என்றும் குறிக்கின்றன.

அக்காலத் தமிழகம் செந்தமிழ் நாடு எனவும், கொடுந்தமிழ் நாடு எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டுடன் அதனைச் சூழ்ந்த வைகை ஆற்றின் வடக்கும், மருத ஆற்றின் தெற்கும், மருவூரின் மேற்கும், கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் செந்தமிழ் நாடு எனப்பட்டது.

கொடுந்தமிழ் நாடு என்பது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்திருந்த தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீத நாடு, மலாடு, புனல் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகள் ஆகும்.

பழந்தமிழகத்தின் பிரிவுகள்

தென்னிந்தியாவின் புவியியல் கூறுகளை ஆராய்ந்தவர்கள் இந்நிலப்பரப்பை மூன்று தலையாய கூறுகளாகப் பிரித்தனர்.

அவையாவன:

1. ஈர்ப்புப் பகுதிகள்

2. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

3. ஓரளவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகம் இவ்வட்டவணையில் ஈர்ப்புப் பகுதியாக விளங்குகிறது. இதில் காணப்படும் பல்வேறு தனித்துவம் வாய்ந்த புவியியல் கூறுகளையும் புவியியலார் இனங்காணத் தவறவில்லை.

இதனால் இதன் கலாச்சார வளர்ச்சியில் பல்வேறு வகையான தரங்கள் இருப்பதையும் கண்டனர். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த புவியியல் கூறுகளை இனங்கண்டு அவற்றைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்.

பழந்தமிழரும் நிலங்களைப் பிரித்து ஆராய்ந்து இருந்தனர். இதற்கான சான்றுகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற இலக்கிய, இலக்கண நூல்களில் உள்ளன. ஒவ்வோர் இடத்திலும் காணப்பட்ட தரையின் தோற்றம், கால நிலை, தாவரங்கள், மிருகங்கள், நீர்நிலை வசதிகள், மண்வகை, மனிதச் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்திருந்தனர். இவை ஒவ்வொன்றும் பழந்தமிழரைப் பொறுத்தவரையில் தனித்தனியான உலகங்களாகவே காட்சியளிக்கின்றன. 

இதனையே தொல்காப்பியர்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்,
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

(தொல். பொருள்,5)

எனச் சுட்டிக்காட்டுகின்றார். மேற்கூறிய பகுப்பில் பாலைநிலம் அடங்காததற்குக் காரணம் தமிழகத்தில் வனாந்தரம் அல்லது மிகமிக வறண்ட நிலப்பரப்பு காணப்படாமையே ஆகும். காடும் மலையுமாகிய நிலங்கள் வறட்சி எய்தும்போது பாலை நிலப்பண்பைப் பெற்றதால் இதனை ஒரு தனிப் புவியியல் கூறாகத் தொல்காப்பியர் காணவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 30 August 2012

உலகின் மிகப் பழமையான தமிழ்மொழிதான்.!













































தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.




Tuesday, 28 August 2012

திரும்பிப் பார்க்கவும் திரும்பி வரவும் ஆசை..!

ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? 

இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே அலுப்பு  (“Bore”) என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்?
























நிறைய இடம்  திட்டம் (plan) பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி  பட்டியலை (list) ஐ எடு..
ஓ… பிறந்த இடம்…..
தவழ்ந்த இடம்….
அப்பா படித்த பள்ளிக்கூடம்…
அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்….
கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்….

கழுவிக்கொள்ள ஒரு கடற்கரை…..
இன்னும்…
இன்னும்….
அதற்கேன் கடதாசி…
பனியில் குளித்தாலும் புழுதி மணம் மறந்து போகுமோ??

மறந்து போனாலும் என்டு எல்லாம் எழுதியே வைத்திருக்கிறம்…. ம்ம்ம்..போகும் போல்தான் உள்ளது… நமக்கென்ன அனுபவமா?

அப்பா (Dad) அங்க கட்டாயம் கூட்டிக்கொண்டு போவீங்கதானே…?

உரக்க வினவியது பிள்ளை…
அப்பா சொன்னா சொன்னது தான்!
கட்டாயம் கூட்டிக்கொண்டு போவன்…
முதல் பயணம் (Trip) அங்கதான்!
ஒரு கோடி பிரகாசம் பிள்ளை முகத்தில்…. எங்க???
மெல்லக் கேட்டேன்…

அப்பா “சொன்னார்”. வலித்தது…
ஒவ்வொரு அணுவும்… பயணமா (Trip) ஆ?
என் புனித பூமியே…
அவர்கள் உன்னை “சுத்திப் பார்க்க” வருகிறார்களாம்…
எந்த மனதுடன்..?
எந்த உணர்வுடன்?
மூன்று வருசத்துக்கு முந்தியே தொலைக்காட்சியை (TV) ய பாத்திட்டுச் சொல்லிட்டான்… எங்கள் தாயகத்திற்கு (சிலோனுக்கு) போகேக்க அங்க கூட்டிக் கொண்டு போகோணும் என்று… நானும் அப்பவே வாக்குக் கொடுத்திட்டன்..
மூன்று வருசத்துக்கு முந்தி!!
எப்போது? விளங்கியது…

அந்தக் கோரத்திற்கும் கொடுமைகளுக்கும் நடுவில் சுத்திப் பார்க்க இடம்  தெரிவு (Select ) பண்ணிய நீவீர் நீடுழி வாழ்க..!

நீதான் எங்களை கூட்டிக் கொண்டு போக வேணும்… நானா?? அங்கு…..
முடியுமா என்னால்???
இன்றுவரை எனது தலையணை ஈரம் காயவில்லை…
என் கண்ணீரின் ஊற்றுக்கண் நோக்கி….
எனது ஈடு செய்ய முடியா இழப்பின் இருப்பிடம் நோக்கி…..
நிச்சயம் முடியாது.

அது வந்து….
எனக்கு….
வேலை…..
அதெல்லாம் விடுமுறை  (Leave) எடுக்கலாம்..
அவள் வருவாள். இடையில் குறுக்கிட்டு உறுதிமொழி வழங்கினாள் அன்னை.

எப்பபார் வேலை…
வேலை…
மனிசர மதிக்கத்தெரியாம என்ன வேலை?
எவ்வளவு காலத்திற்குப் பிறகு வந்த சனம்…
குசினிக்குள் காதோரத்தில் கடுகடுப்பு வேறு.. ம்ம்ம்…
உன்னாலும் என்னை புரிந்து கொள்ள முடியாது அம்மா.

மனுசன், பிள்ளை, கோயில், அடுப்படி, அயலவர் தாண்டாத உன்னுலகம்! உன் பிள்ளைகள் உயிருக்கு உத்தாரவாதமின்றி இருந்த காலத்தில் ஒரு வார்த்தை கேட்காத உன் உறவுகள்…
ஒரு கவளம் கொள்ளாத உன் வயிற்றை உணராத உறவுகள்….
நீ காலனுடன் பயணப்பட்டு கடைசி நேரத்தில் மறுத்து திரும்பி வந்ததை சிரிப்புடன் பகிர்ந்த உன் உறவுகள்…..
ஒருநாள் தங்கவென வந்தவுடன் எப்படி உன்னால் மட்டும் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது??

அவர்களது முதல் பயணம் (Trip)… மாங்குளம் சந்தி திரும்பி தொடர்ந்தது…. மன்னித்துக்கொள்ளுங்கள் என் உறவுகளே….
உங்கள் ஓலங்களை …
உங்கள் உதிரப் பெருக்குகளை நிறுத்த முயலாதவள்.
உங்கள் கண்ணீர் துடைக்க ஒற்றை விரலையேனும் நீட்டாதவள்…
உங்கள் உடலங்கள் மீது ஒரு மலரேனும் தூவாதவள்…. வருகிறாள்! உறவுகளை உதிர்த்து மனதளவில் மரணித்துப் போனவள் உல்லாசப் பயணமொன்றில் ஓரங்கமாகி.

மறைக்கும் நோக்கமற்ற மேலாடைகளும்…
முழங்கால் தாண்டாத முக்கால் காற்சட்டைகளும்…
ஆளுக்கு ஒரு கமெராவும்…..
ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்களும்…
முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள்…

நீங்கள் போய்க்கொண்டிருப்பது மனிதாபிமானம் மரத்துப்போன ஒரு இடத்தை நோக்கி….
ஒரு தேசியம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தேசம் நோக்கி….
எங்கள் கற்புகள் கன்னமிடப்பட்ட களம் நோக்கி…
சுட்டிக் குழந்தைகளின் சுடலை நோக்கி…
துரோகம் வடித்த துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சி இடம்பெற்ற இடம் நோக்கி….
இறுதிவரை தாளாத இயல்பு நோக்கி…
ஒப்பற்ற ஓராயிரம் மரணங்கள் நோக்கி…

இன்னும்…
இன்னும்….
மயானத்தின் அமைதி சிலவேளை மனிதர்களுக்குப் புரியலாம்… இவர்களுக்கு?? நிச்சயமாக இல்லை.

உங்கள் வலிகளை அவர்கள் தெரிந்திருந்தார்கள்….. உணரவில்லை
உங்கள் மரணங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருந்தார்கள் 
உறுத்தவில்லை  உருக்குலைந்த வீடுகள்….
ஓட மறந்த வாகனங்கள்….

மரத்தோடு இரண்டறக்கலந்து விட்ட சேலைத் தொட்டில்… காலில்
தடக்கிய ஓட்டை விழுந்த பந்து…
மண்ணிலிருந்து முளைத்துப்பறந்த ஒரு துண்டு சீருடை… குண்டுச்
சிதறல் தாங்கிய பானைகள்… நடுவே
குண்டு துளைத்த அந்த சிறு சப்பாத்து…. சிதைந்த
கிடந்த யுனிசெப் கூரைகள்…. வாழ்வைத்
தொலைத்துவிட்ட வளமான குடும்பத்தின் எச்சங்களும் எலும்புக்கூடுகளும் கமெரா பிடித்துக் கொண்டது காட்சிகளை கண்குளிர…

உறுத்தலின்றி…
வலிகளின்றி..
கண்ணை மறைக்கும் கண்ணீர்த் திரையின்றி…
ஓவென்று அழச்சொல்லும் உணர்வின்றி…
எனக்கு மட்டும் எல்லாமே எதிர்மறையாய்……
முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத்தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்…
அவர்கள் கடைவாயில் கசியும் இளக்காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஓரமாய் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தையும் ஏன்தான் உங்களால் உணரமுடியவில்லை….

மாத்தயா…யாப்பனே த?
இல்லை...,இல்லை....,நாங்கள் ஐ ரோப்பாவிலிருந்து (No..No.. We are From Europe.)

கடவுளே இப்படி ஒரு நாள் என்வாழ்வில் மீண்டும் வராமல் போகட்டும்.. வருமெனில் என் வாழ்வே இல்லாமல் போகட்டும்.

மீண்டும் ஆன்சி மானேயின் அனல் பறக்கும் பாடல்கள்….. அட்டகாசமாய்! பயணம் இன்று எப்படி இருந்தது??(How was the trip today??)  மிகச்சிறந்தது அப்பா.(Supppppeeerrrrrrrrrrrrr dad.) மிகச்சிறந்த! உண்மையில் நல்ல....(Excellent! Really nice...)  நன்றிகள் அப்பா.(Thanks dad) 

ம்ம்ம்ம்…. எனக்கும் தானடா….
வலித்தது… வார்த்தைகள் தந்த ரணம்… உள்ளம்
உள்ளவர்களுக்கு மட்டும்… போய்
வருகிறேன் என் உறவுகளே… உங்கள்
ஏக்கப்பார்வை என்னைத் தொடருவதையும்
உங்கள் பாசப்பார்வை என் பிடரியை
வருடுவதையும் கடந்து போகும் உங்கள்
சூடான மூச்சையும் என்னால் உணரமுடிகிறது…
திரும்பிப் பார்க்கவும்
திரும்பி வரவும் ஆசைதான்….. ஆனால்
இப்போதல்ல…. இன்னொரு தடவை
மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

தமிழனின் இன்றைய நிலைக்குக் காரணம்.....!

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம்.

காம்போச(ஜ)ம்(கம்போடியா), சிறீ (ஸ்ரீ)விச(ஜ)யம்(சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. 

அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

வரலாறு சுட்டிக்காட்டிய அதே தவற்றை, மீண்டும் மீண்டும் இன்று வரை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருப்பதுதான் மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடப்பதன் காரணம்.

ஒற்றுமையின்மை…..!!!

இதைத்தவிர தமிழரைப்பிடித்த சனி வேறு எதுவுமே இல்லை. 

உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்ற சாதிவெறிக்கொடுமைகள்…
போதாததற்கு தமிழ்நாட்டுத்தமிழன், இலங்கைத்தமிழன்…..,
அவ்வளவு ஏன், பிரதேச வாதம் அப்பப்பா…

எத்தனை பாகுபாடுகள், எத்தனை வேறுபாடுகள்!!

இந்த வேறுபாடுகள், பாகுபாடுகள், முட்டாள்தனங்கள் என்றைக்கு நீங்கி தமிழன் ஒற்றுமையுடன் தன் எல்லா சகோதரர்களுடன் பேதமின்றி ஒன்றுபட்டு வாழத்தலைப்படுகிறானோ…

அன்றைக்குத்தான் தமிழனுக்கு விமோசனம்…
அன்றைக்குத்தான் தமிழனுக்கு விடிவுகாலம்…!!!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

உளவாளி இயந்திர மனிதன்..............!

பார்ப்தற்கு நுளம்பைப் போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்..! 


பார்ப்பதற்கு அப்படியே நுளம்பு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து தொலை கட்டுப்படுத்தல் கருவி (Remote Control Device) மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய நிழற்படக்கருவியும் (Camera) ஒலிவாங்கியையும் 
(Microphone) தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்த நுளம்பு போன்ற பறக்கும் இயந்திர மனிதனை  தொலை கட்டுப்படுத்தல் கருவி மூலமாக மனிதர்கள் மீது நுளம்பைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து சென்று கண்காணிக்க  (Tracking) உதவிவருகின்ற RFID  நானோ தொழில்நுட்பத்தினை (Nanotechnology) இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த இயந்திர மனிதனால் (Robot) முடியும். சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ய(ஜ)ன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.

அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை இயந்திர மனிதன் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 26 August 2012

தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள்..............!



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த இலங்கையை, டச்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கண்டி அரசனுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பிறகு அவனை ஏமாற்றி விட்டனர்.

டச்சுக்காரர்கள் வருகை

கி.பி. 1595-ம் ஆண்டு முதல், டச்சுக்காரர்கள் கீழ்த்திசை நாடுகளில் வணிகம் செய்யும் நோக்கத்தோடு கப்பல்களில் பயணம் செய்தனர். (இங்கிலாந்து நாட்டுக்கு கிழக்கே, ஜெர்மனிக்கு மேற்கே உள்ளது நெதர்லாந்து. இது, ஹாலந்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். டச்சு மொழி பேசுவதால், டச்சுக்காரர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் "ஒல்லாந்தர்'' என்று குறிப்பிடுகிறார்கள்).

1602-ம் ஆண்டு, டச்சுக் கப்பல் ஒன்று மட்டக்களப்புக்கு வந்தது. அதில் இருந்த டச்சு வியாபாரிகள், கண்டி அரசனை சந்தித்து அந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரினர்.

கண்டி அரசனுக்கு போர்ச்சுக்கீசியர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. டச்சுக்காரர்களின் உதவியைப் பெற்று, போர்ச்சுக்கீசியர்களை விரட்டலாம் என்று கண்டி மன்னன் எண்ணினான்.

ஒப்பந்தம்

டச்சுக்காரர்களின் கோரிக்கைக்கு கண்டி அரசன் இணங்கி, அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ஒப்பந்தம் கி.பி. 1638-ம் ஆண்டில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, இருவரும் சேர்ந்து போர்ச்சுக்கீசியரை எதிர்த்தனர். அவர்களிடம் இருந்த பல பகுதிகளை மீட்டனர். அப்படி மீட்ட பகுதிகளை டச்சுக்காரர்கள் கண்டி அரசனிடம் கொடுக்காமல் அவனை ஏமாற்றி, தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

போர்ச்சுக்கீசியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பல்வேறு இடங்களில் போர் நடந்தது. அதில் டச்சுக்காரர்கள் வெற்றி பெற்று, இலங்கை முழுவதையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீசியர் இலங்கையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.இலங்கையின் பொருளாதாரம் முழுவதும் டச்சுக்காரர்களின் கைக்கு வந்தது. காப்பித் தோட்டங்களை பெரும் அளவில் ஏற்படுத்தினர்.உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்

தொன்று தொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது, அந்த வியாபாரம் குறைந்து போயிற்று.இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய, முதன் முதலாக 10 ஆயிரம் இந்தியர்களை இலங்கைக்கு டச்சுக்காரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

தமிழர்களின் நாடு

டச்சுக்காரர்கள் அரசாண்டபோது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர். அவர் எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:- 

"இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூறவேண்டும்.இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்கள், சிங்களரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல.

டச்சுக்காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள். நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.'' இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார். 

டச்சு ஆட்சியின்போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில் கூறப்பட்டு இருப்பதாவது:- "மட்டக்களப்பு, காலி, திருகோண மலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.'' இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.


வெள்ளையர் வருகை

"வல்லவனுக்கு வல்லவன், வையகத்தில் உண்டு'' என்பது போல, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளைக்காரர்கள் (இங்கிலாந்து) இலங்கைக்கு 1795-ம் ஆண்டு மத்தியில் வந்து சேர்ந்தார்கள். 

"கிழக்கு இந்திய கம்பெனி'' என்ற பெயரில், வியாபாரம் செய்ய இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள், பற்பல சூழ்ச்சிகள் செய்து, ராஜதந்திரங்களைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்ததுபோல, இலங்கையிலும் வியாபாரம் செய்யவே முதலில் வந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் டச்சுக்காரர்கள் போதிய பலத்துடன் இல்லை.

வெள்ளையர்களிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருந்தது. எனவே, டச்சுக்காரர்களிடம் இருந்த பகுதிகளை அவர்கள் எளிதாக கைப்பற்றிக் கொண்டனர்.1798-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பு நகரை வெள்ளையர் கைப்பற்றியதுடன், இலங்கையில் டச்சுக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 25 August 2012

தமிழகத்தில் முத்திரைக் காசு................!


தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல். கி.பி 2ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப் பயன்படுகிறது.

முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது.

ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து வட இந்தியா வழி முத்திரைக்காசு என்ற கருதுகோள் மாறத்தொடங்கியது.

அதற்கு வழுச்சேர்க்குமாறு தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

படைபலத்தில் முக்கியனாள் ஓகஸ்ட்25



ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப்பண்டாரவன்னியன் வன்னிமையின் இறுதி மன்னன். 

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.

அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.




முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.(இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு).

அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.




ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள்.

அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து,

அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25. 

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான்.

இது நடந்தது 1996 ஜூலை 18.அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது.

ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தன.
தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள்.

முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார்.

அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.

புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.

யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.




ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள்.

புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே. 

அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.




விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக ‘சிறுத்தைகள்’ என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. 

ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார்.




யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.இயக்கத்தின் ஆட்லறிப்படைப் பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்.

ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் – சாவடைந்தார்.

நன்றிகள் பல.