Tuesday 28 August 2012

உளவாளி இயந்திர மனிதன்..............!

பார்ப்தற்கு நுளம்பைப் போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்..! 


பார்ப்பதற்கு அப்படியே நுளம்பு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து தொலை கட்டுப்படுத்தல் கருவி (Remote Control Device) மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய நிழற்படக்கருவியும் (Camera) ஒலிவாங்கியையும் 
(Microphone) தன்னகத்தே கொண்டுள்ளது. 

இந்த நுளம்பு போன்ற பறக்கும் இயந்திர மனிதனை  தொலை கட்டுப்படுத்தல் கருவி மூலமாக மனிதர்கள் மீது நுளம்பைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து சென்று கண்காணிக்க  (Tracking) உதவிவருகின்ற RFID  நானோ தொழில்நுட்பத்தினை (Nanotechnology) இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த இயந்திர மனிதனால் (Robot) முடியும். சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ய(ஜ)ன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.

அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை இயந்திர மனிதன் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.