Saturday, 20 April 2013

ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவிற்கு............!


மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் விமானத்தை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1915ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி, இந்த விமானத்தை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.












இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், யேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாசு(ஸ்) சந்திரபோசு(ஸ்) அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார். இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார்.

இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர். ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை. இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 10 April 2013

ஆறுமுக நாவலர் ..............!



“தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்”, என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சிறீ(ஸ்ரீ)லசிறீ(ஸ்ரீ) சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.

தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?”

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூச(ஷ)ண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்.

கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிசு(ஸ்)த்தவர்களது வேகமான பிரச்சாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை.

மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

“யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராசதாரணம், பஞ்சாசரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!

உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.

தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ச(ஸ்)தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்.

ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வசுத்(ஸ்)திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாத்(ஸ்)திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”

மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும்.

இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.

எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 28 March 2013

காட்சிக்கும் அப்பால் சென்று ............!

தமிழர் சிற்பக்கலை


சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.

" மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 11 March 2013

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட ..!

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்( பூநகரி)


கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள்.

நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள். 

இவற்றுக்கான சான்றுகள் இராவண காவியம் இராமாயணம் மகாபாரதம் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. அதேபோன்று கல்வெட்டுக்கள் தொல்லியல் சான்றுகள் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்ற சான்றுகளும் உள்ளன.


பெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா கலியாணியிலும் வளவகங்கை மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில்தீகவாவியிலும் நிரந்தரமாக வாழந்து அரசுகளும் அமைத்தனர்.

பிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். இப்பிரதேசங்களிற் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது.

கலாநி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நுாலை வாசியுங்கள். அதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார்.

பூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ் மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும்.

யாழ்பாடி யாழ்வாசித்து பரிசுபெற்றபின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக...

கி.பி10 ஆம் நுாற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பற்கு ஆதாரங் களுள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு.

பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதெசமே தமிழர் அரசின் புராதன நல்லுார் ஆகும்.

தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லுார் எனப்பெயருள்ளது. ஆகவெ அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்கழால் இடப்பட்டிருந்தது.

முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழநாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லுாரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன.

குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது.பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லுார் என்ற ஊரும்(இடமும்) காணப்படுகிறது.

பதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்திட்டு இலங்கை முழுதும் முதலாம் வியயபாகு(1055-1110) வரையும் அரசனானான். 

அவன் ஆட்சிக்காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகைளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது.

விசயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான்.

அப்படைக்கு தலைமைதாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான் அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டைமானாற்றை துறைமுகமாக்குவித்தான்.

தொன்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான்.

தன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது...

இதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழர் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர். 

இதன் தாக்கம் இன்று ஐரோப்பி ஆசியநாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனிவரலாற்றை மீண்டும் வாசிக்கவும்.....

படஆதாரங்களுடன் நாம்விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது.

அதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியு முள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித் துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது.

அத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை புளியம்பொக்கணை நாதம்பிரன் கோவில் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.

நாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா நாகம்மா நாகமுத்து நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்று தமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும்.

அதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையம் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மொட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர்.

அதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களி அணிவது தவறல்ல தமிழ் உடையெ எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.அதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும் கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள்.

இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிப்பண்பாட்டுக் கேடுகளாகும். மணவறைகள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைசுணவ முறைகளை மணவறை சோடனைகாறர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள்.

தமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பம் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.



Tuesday, 5 March 2013

ஆதிபூர்வீக இலங்கையில்தமிழர் மாத்திரமே !

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் ஆதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது.

இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம்.

இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும்.

புத்தூரில் பிரசித்த நொத்தாரிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும்.

இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக...

எழுச்சியடைவோமாகுக.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.



புதிய தலைநகரத்தை உருவாக்கி......!


பாலி (Bali) என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், யா (ஜா)வாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும்.

இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிறீ விசயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்.

அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான்.

அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 13 February 2013

பெரு நிலத்தை தமிழர்கள் தமது............!


இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் , இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.

இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள்.

இன்று அப்கானிசுத்தான் பாகிசுத்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது.

இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது . இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது.

எனவே இந்த இரு தொகுதி நாகரீகங்களை இணைத்து தமிழர்கள் இந்திய துணைக்கண்டம் என்று இன்று விளங்கும் பல நாடுகளை மாநிலங்களை உள்ளடக்கிய பெரு நிலத்தை தமிழர்கள் தமது ஒற்றை தாயகமாக வளமாக்கி வாழ்ந்துள்ளார்கள் என்பதை தர்க்க ரீதியாகவும் தடயங்கள் ரீதியாகவும் நாம் முன்வைக்க முடியும்.

இந்த நிலப்பகுதியில் தமிழர்கள் இன்று பத்து சத வீதத்துக்கும் குறைவான பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டிருந்தாலும் அதனையும் இழக்கும் ஒரு அபாய சூழலில் வாழ்கின்றார்கள் என்பது உண்மை .

நாம் வாழும் காலப்பகுதியில் 1947 ஆண்டின் பின் தங்கள் தாய் நிலத்தில் பல பகுதிகள் இழந்துள்ளார்கள். ஈழத்தின் மொத்த நிலபரப்பாக1947 இக்கு முன் 25000 சதுர மைல்கள் இருந்தன.

அவை 1950 காலபகுதியில் படிப்படியாக சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று 7500 சதுர மைல்களாக குறுகி விட்டது . ஈழத்தமிழர்கள் தமது வளமான பூமிகளை பறி கொடுத்து ஏதிலிகளாக உலகெங்கும் அலையும் நிலையில் இருக்கின்றார்கள்.

1900 ஆண்டுகளின் பின் தமிழகம் ஏறக்குறைய 15000 சதுர நிலப்பரப்பை புதிய கேரளத்துக்கும் கிழக்கே நெல்லூர் தொடக்கி மேற்க்கே மங்களூர் வரையிலுமான 30000 சதுர மைல்களை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று பரதேசியாக அவர்களிடம் நீர் பிச்சை கேட்டு நிற்கின்ற துர்பாக்கிய நிலை தோன்றி வளமான காடுகள் மலைகள் நதிகள் இல்லாம் பறிபோனது.

இது போதாது என்று, அண்மைய காலங்களில் கச்சதீவு திருப்பதி, பெங்களூர் முல்லை பெரியார் , கல்குகை என்று சகல பகுதிகளையும் கபளீகரம் செய்துவிட்டார்கள் தமிழரிடம் இருத்து. தன் தாய் மண்ணை இழந்து இழந்து இன்று ஒரு மூளைக்குள் முடங்கி கிடக்கின்றது தமிழினம்,

கி முன் தமிழன் உலகில் மிக பெரிய நாகரீகத்தின் வாரிசாக அகண்ட குமரி மண்டாலம், கடல் கொண்ட வங்கம் கலிங்கம், சங்கம் , என்று வாழ்ந்த தன் நிலங்களை இயற்க்கை அழிவிடம் பறி கொடுத்து.

கடல் கொண்ட பின்னும் கூட கி பி 100 களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மைல்களை சொந்தமாக வைத்திருந்து வந்தவரை எல்லாம் வரவேற்று இந்த பூமி எல்லோருக்கும் பொது என்று நன் நெறி சொன்ன ஒளவை வள்ளுவன் காலத்தில் தன் நிலங்களை கொடுத்து இன்னமும் கொடுத்து இன்று இழந்து கையறு நிலையல் கரைந்து, தன் நிலத்தை இழந்து கரைந்து கொண்டு இருக்கின்றது தமிழன் இருப்பு.

தமிழகம் இன்று 50200 சதுர மைல்களுக்குள் சுருங்கி உள்ளது . ஈழம் இன்று 7500 சதுர மைலக்ளாகி உலகில் தமிழன் தனக்கென வாழும் நிலம் குறுகி பெரும் அபாய சூழலில் உள்ளது.

தமிழன் இன்று வாழும் பகுதியும் இன்னும் சில காலங்களை இல்லாது போய் தமிழன் என்ற இனமே அழிந்து வரலாற்றில் அழிந்து போன இனம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவான்.

உலகில் வாழும் இனங்களுக்கெல்லாம் மூத்த குடி தமிழ்குடி , இந்த மகிமை தமிழனுக்கு மட்டுமே உரியது, இத்தனை வரலாற்று சிறப்பு உலகில் இன்று வாழும் எந்த இனத்துக்கும் இல்லை. எமது மூதாதையர் இந்த பெருமையை மிகுந்த இன்னலுக்குள் பாதுகாத்து தந்துள்ளார்கள் , இன்று வரை உறக்கத்தில் இருந்த வேங்கையின் வாரிசே.

இன்று நீ விழித்து எழுந்து பார்த்தாலே போதும் . உன்ன பார்வை ஒன்றுதான் வேண்டும் . உன் பெருமை உனக்கே உரியது . இயற்கையாக நீ தமிழனாக இத்தைய பெருமையுடன் பிறந்து விட்டாய். பல் ஆய்வாளர்கள் தாங்கள் தமிழர்களின் வாரிசுகள் என்றும் தமிழனாக பிறப்பதே பெருமை என்று சொல்லும் அளவில் இன்று உலகம் வியக்கின்றது.

உன் பெருமைகளை இந்த உலகு அறிந்த அளவில் நீ அறியாமல் இருப்பது தவறு. தமிழா இந்த உலகு உள்ளவரையும் இந்த உரிமையை நீ விட்டுக்கொடுத்து வாழலாமா?.

இடையில் வந்த ஏனைய இனங்களைப்போல நாடு காத்து , எம் மூத்த தமிழ் காத்து வாழவேண்டும் . உலகில் தமிழன் என்றும் அழியாது வாழும் நிலை உன்கையில்தான் இன்று உள்ளது.

எதோ ஒரு மனிதனாக வாழ்வது பெருமை அல்ல. உன் பாரம்பரிய வரலாற்றை இழப்பது நியாயமல்ல. அதை உன்ன வருங்கால சந்ததிக்கும் எடுத்துசெல்ல எழுந்து வா வேங்கையின் வாரிசே.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 11 February 2013

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள்

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது !

 இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? 

ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

ஆனால் இதுவரை தமிழகத் தலைவர்கள் செய்யாத ஒரு விடையத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்துள்ளார். வெளியாகியுள்ள இந்த அறிக்கையை அப்படியே மொழிபெயர்த்து இலங்கை அரசின் திட்டத்தை ஒரு கடிதமாக எழுதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார். 


இலங்கையில் உள்ள தமிழர் நகரங்கள் சிங்களமயமாக்கப்படவுள்ளதை அவர் தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் போக, இனியாவது மிஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவுங்கள் என்று அவர் பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். பாரம்பரியமாக வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் அனாதைகள் ஆக்கபடும் நிலை வந்துகொண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு , இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் !


என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில், மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி, சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

இனியும் ஒன்றுபடாவிட்டால், சொந்த ஊரைத் தொலைத்த ஈழத் தமிழினமாக நாம் அலைய நேரிடும். மானங்கெட்ட தமிழனுக்கு இதுதேவையா என்று வேற்றின மக்கள் எம்மீது காறித்துப்பும் நிலை தான் மிஞ்சும் !

பின் குறிப்பு: இதில் பல நகரங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களால் குடும்பி மலை என்று அழைக்கப்படும் இடம் தற்போது தொப்பிக்கல என்று மாற்றம் பெற்றுள்ளது. மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இச் சிங்களப் பெயரையே பாவிக்கின்றது. அதுமட்டுமல்லாது பல கோவில்களின் பெயர்களும் மாற்றப்படவுள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல் தான் !

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.










Wednesday, 6 February 2013

தென் கிழக்காசியாவில் .....!

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்!


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 31 January 2013

வீரபாண்டிய கட்டபொம்மன்........!


அக்டோபர் 16ஆம் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள், இந்நாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறை நினைவு கூறுவோம்... 1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிசு(ஷ்) கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். 

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.  

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். 

அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது . இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார். அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார். தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன்.

ஜாக்சன் மாற்றப்படுகிறார். கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூசி(ஷி)ங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது . 

பிரிட்டிசு ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூசிங்டன். 

முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார்.

ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது. நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன் இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது.

கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை.

ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது.

தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.  

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம். 'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா? என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 19 January 2013

எதனால் தமிழன் கெட்டான்............?


தமிழ் உறவுகளுக்காக !

தமிழன் பேசிப் பேசியே கெட்டான் !

பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான் !

தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !

தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான் !


இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில வினாக்களை வினவ விரும்புகிறேன்.

எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான் இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி, இனம், கலை, பண்பாடு, இலக்கியம், அறிவுநூல், வரலாறு, நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட தன் இனத்தைவிட தன் பண்பாட்டைவிட வேற்றாருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான்.

சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி, மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து, மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம் பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான், கெடுகின்றான் எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான்.

இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் அடிவருடியாய் வாழ்கின்றான். புதிய மாற்றமாக இனிக் கண்டிப்பாக

தமிழருடன் தமிழில் பேசுவோம் !

தமிழின் பெருமை பேசுவோம் !.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday, 15 January 2013

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...........!.


கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r (விட்டம் = 2r )
மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு
எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு
செப்பியடி = 20 ஆல் வகு

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r
= 2 ( 16/5) r = 2 π r

இங்கு π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே )
இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 13 January 2013

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அனைத்து முன்னும்பின்னும் நேயர்களிற்கும்!




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 12 January 2013

"ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்"............... !

இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.


2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது.

பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது.இந்தியாவில் இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில்தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள் அழியாமல் உள்ளன.

ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது..கி.பி.895 இல் ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by ..நீலகண்ட சாஸ்திரி)அனுராதபுரத்தை கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை சூடினான்.

சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை..ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே தரைமட்டமாக்கினான்.

ராசேந்திரச் சோழன்,இலங்கையின் தலைநகரம் என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான் ராசேந்திரச் சோழன்.

நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும். அதுமட்டுமன்றி.பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து வழிபட்டான் இப்பெரு மன்னன்.

இன்றும் அந்தச் சிவன் கோயில் அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின் இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.

ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும் யானைப்படை,குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள்மூலம் கொண்டுவந்து தரை இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன் என்பது ஆகும்.

எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப் பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப மக்கள் நிலத்தை தோண்டியபோது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன் சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன.

செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருமுறை பரப்புரைக்கு நான் அங்கே சென்றவேளை அப்படியான சோழர்களின் காசுகளில் சில என் கையிலும் கிடைத்தன. ராசேந்திரச் சோழன் கட்டைக்காட்டின் ஊடாக படைகளை நகர்த்தி சென்ற வழித்தடத்தின் சில சுவடுகள் கட்டைக் காட்டுக்கும் உடுத்துறைக்கும் இடையில் இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Sunday, 6 January 2013

தமிழன் உருப்படாததற்கு காரண‌ங்கள்........!


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் செ(ஜெ)ன்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல்.யே(ஜெ)ர்மனியில் கூட நியோ நாசி(ஜி)க்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்! 

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாகத்தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். 

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.


அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை 

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது 
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் 
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் , 
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை 
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் 
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக 
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் 
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் 
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாசின் குரல், தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முசுலிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முசுலிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லித்தாழ்ந்த சாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. அங்கும் இன உணர்வில்லை.

* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!

நீங்கள் அறிந்த விசயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!

* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் சனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரசு கட்சி அடுத்த சனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரசும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் செ(ஜெ)ன்ம விரோதக் கட்சியான காங்கிரசு ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணியோ எதிரணியோ என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு சனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.

ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழகக் காவல்துறை...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...

தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

இலங்கையின் பூர்வ குடிகள்.............!

இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர்.


பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம்.

ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. 

சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான சிங்களத்தின் சொற்கள் கலந்துள்ளன. ஆனால், அது சிங்களத்தின் கிளை மொழியன்று. தனித்துவமான, 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி.

ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்து அழிந்து போன இயக்கர் இனத்தவர் பேசிய மொழியாக இருக்கலாம். ஏனெனில், இவர்களது தெய்வங்களின் பெயர்கள் "யக்கா" என்று முடிகின்றன.

"நாகரீகமடைந்த" சிங்களவர்கள், இலங்கையின் பழங்குடி இனத்தை சிறுமைப் படுத்தும் நோக்கில், "யக்கா" என்ற சொல்லை பேய், பிசாசு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினார்கள். கதிர்காமக் கந்தன் வேடுவரின் குல தெய்வம் ஆகும்.

மேலும் மட்டக்களப்பு தான்தோன்றீசுவரர் ஆலயமும், முற்காலத்தில் வேடுவரின் வழிபாட்டுத்தலமாக இருந்தது. இன்றைய வேடுவரின் மதத்தில், புத்த மதத்தின், இந்து மதத்தின் கூறுகள் கலந்துள்ளன.

ஆனால், "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், வேடுவரின் புராதன மத நம்பிக்கையை "சிறு தெய்வ வழிபாடு" என்று சிறுமைப் படுத்தி வருகின்றனர். 

வேடுவர்களுக்கு தனியான கலாச்சாரம் உண்டு. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒழுங்கு படுத்தினால், நேரம் தவறாமல் கலந்து கொள்வது அதில் ஒன்று. ஒரு முறை, சிறீலங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக, வேடுவர் தலைவனை சந்திக்க சென்ற அரசு அதிகாரி, குறிப்பிட்ட இடத்திற்கு தாமதமாக சென்று அசடு வழிந்தார்.

நேரம் தவறாமை மட்டுமல்ல, சூழலியல் சமநிலை பேணுவதற்காக இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறித்தும், வேடுவர்கள் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுத்துக் கூறினார்கள். இருந்தாலும் நாங்கள் இன்னமும் வேடுவர்களை "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 4 January 2013

மூழ்கிய தமிழரின் வரலாறு....!

கடலுக்கடியில் பூம்புகார்... பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:

ஏசுநாதர் பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.

கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது.

ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்?
கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா?
அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா?
உறைந்து போய் விட்டதா?
புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா?
காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது?
பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக் காட்சிகளுமில்லை. தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா?
பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா?
சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது?
தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை?
நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?
அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?

கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது.

அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும்.

தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது.

உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல்

வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார்.

இதுபற்றி ஆய்வுகளும் தேவை. தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு.

நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள்.

வாயடைத்துப் போகும் ஆரியம்!
நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப்ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழியில் கலைக்களஞ்சியம் உள்ளது.

தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? 

தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? 

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை சுனாமி (Tsunami) என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

யப்பானிய தீவுக்கூட்டங்களிலும் அவுசுத்திரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப் படுகிறது. இதுபற்றி தேசிய புவியியல் அலைவரிசை (National Geographic Channel) பல செய்திகளை வெளிக்கொணர்கிறது.

தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா?

வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா? 

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் 
பாக்நீரிணைப் பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?  

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில்தேசிய கடலியல் நிறுவனம் (National Institute Of Oceano Graphy) மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.