Wednesday, 26 June 2013

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன்.............!

துப்பாக்கி,பீரங்கி இல்லாமல் வெறும் வாளும்,வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும்,திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்றபட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்?


இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.

இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.

இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான். 

டையிலும், செருப்பு (shoe) நீங்கள் ஆரம்பித்து வைக்கும் கலாசாரம் இறுதியில் ஒருவகை இசை நடனங்களிலும் (disco) குடித்து களிப்பாட்ட விடுதிகளிலும் (bar) முடிகிறது.தமிழின் கழுத்தில் கயிரை சுற்றி,சுருக்கு போட்டு,தூக்கு மேடையில் ஏற்றி, எங்களிடம் கயிற்றை கொடுத்து இழுக்க சொல்லிவிட்டு நங்கள் இழுக்கும் நேரத்தில் கொல்கிறானே, கொல்கிறானே என வாயில் அடித்து கொள்வதில் என்ன பயன்.

ஒரு வகையில் ஆங்கிலமும் முழுதும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பல பேரை அரை வேக்காடுகளாக இரண்டும் கெட்டான்களாக அலையை விட்ட உங்களை அல்லவா நங்கள் குறை சொல்ல வேண்டும்.பம்பாய் கதாநாயகிகள் போல் தமிழ் பேசும் சுத்த தமிழ் பெண்கள் எத்தனை பேர்.

இலண்டனிலிருந்து இப்பொழுது தான் இறங்கியவர்கள் போல் தமிழே வாயில் நுழையாத இளைஞர்கள் எத்தனை பேர்.வள்ளுவனும்,ஒளவையும் நல்லவேளை இன்று இல்லை இருந்திருந்தால் அவர்களையும் இவர்கள் கெடுத்திருப்பார்கள்.

மொழி,நாடு,சமுதாயம் என்று உயிரை விட்ட பாரதியையே நாம் அவன் இறந்த 10,20 ஆண்டகளுக்கு பிறகு தானே புரிந்து கொண்டோம்.காக்கையும், குருவியையுமே தன் இனம், தன் உறவு என்று முழங்கியவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவுகளே மொத்தம் 10 - 15 தானே.

இந்த பதிவை இதோடு நிறுத்தலாம் இனி சொல்ல என்ன இருக்கிறது?. ஆனால் அப்படி செய்தால் நானும் வெட்டியாக குறைகூறுவோர்களில் ஒருவனாகி விடுவேன்.அதற்கு பதில் எனக்கு தெரிந்த வரை நாம் இதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறேன்.

முதலில் தமிழை பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற எண்ணத்தை விடுத்து தமிழில் எழுதவும், படிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அப்படி நாம் தொட்டிலான பள்ளி முதலே தமிழை கற்று கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு 5 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் படமாக இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இயற்றப் பட்டது. நமது மெத்த படித்த மேதாவிகள் அன்று அதை எதிர்த்து ரத்து செய்தனர்.அந்த சட்டம் மீண்டும் வர வேண்டும்.தனியாக பிராத்மிக், மத்யமா என இந்தியும், தனியார் கல்வி நிறுவங்களில் பிரெஞ்சும், யேர்மனும் பயிலும் நீங்கள் தமிழ் படிக்க முடியாதா?.

முன் சொன்னது போல் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடிகளாய் எப்படி வாழ்ந்தனர் என்றும், மேற்க்கை விட தமிழும் தமிழ் கலாச்சாரமும் எவ்வளவு பழமையானது, உயர்ந்தது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.

சேக்சுப்(ஸ்)பியருக்கு நூறு மடங்கான வள்ளுவனும், கம்பனும்.... அலக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் எந்த விதத்திலும் குறையாத ராசா ராசனும்,நரசிம்மனும் வாழ்ந்த பூமி இது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

தான் எங்கிருந்து வருகிறோம், தனது பூர்வீகம் என்ன என்று தெரியாததால் தான் இளைஞர்கள் இப்படி இருக்கின்றனர்."பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு இது போதும்" என்று என் நண்பன் அடிக்கடி சொல்லுவான். அப்படி குழந்தைகளை பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனாக வளர்க்காமல், சேக்சுப்பியர் பேரனாக விளைந்த கொடுமையே இது, இதை மாற்றி இனிமேலாவது சேக்சுப்பியர் பேரன்களாக குழந்தைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

ஒரு மரத்தின் ஆயுளும், வலிமையும் அதன் கிளைகளிலே இல்லை அதன் வேரிலேயே இருக்கிறது.அப்படிப்பட்ட வேரான பூர்விகதையும், பண்பாட்டையும் புகட்ட பெற்றோர்களும், சமுதாயமும், பள்ளிகளும் முன் வர வேண்டும்.ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்து தமிழ் வழி கல்வியை நாட சொல்லவில்லை,குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழி பாடமாகவாவது கற்றுகொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இப்படி இறந்து கொண்டிருக்கும் தமிழை பேசி படித்து வாழ வைக்க நினைப்பது மரணபடுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் தண்ணீரை ஊற்றி பிழைக்க வைக்க முயற்சிப்பதை போன்றதாகும். எனக்கு தெரிந்து தமிழை பிழைக்க வைப்பதை விட எப்படி நாம் அதை செழித்து வாழ வைக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும்.அதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

மாறாக,தார் பூசுவதிலும்,வள்ளுவனின் சிலை வைப்பதிலும்,செம்மொழி மாநாடுகள் நடத்துவதிலும் பயன் இல்லை.பாரதி கூறிய "போலி சுதேசிகள்" போன்று "போலி மொழி பற்றாளர்களாக" மேடைகளிலே மட்டும் தமிழ்,தமிழ் என பேசுவதற்காக சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மற்றவரை குறை சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

அந்த பாரதியே ஆங்கில கவிஞன் செ(ஷெ)ல்லியின் பரம விசிறி என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.கண்மூடித்தனமாக சமுதாய கட்டாயங்களை மனதில் கொள்ளாமல் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

முடிவில், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடியும் அணிய வேண்டி இருக்கிறது.அதற்காக கண்ணாடியையே கண்ணாக என்னும் மூடமையும் அனுமதிக்காமல் இருப்போம்.

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Friday, 21 June 2013

உலகை நடுநடுங்க வைத்த தமிழ்........!

ஆயிரத்தில் உலகை நடுநடுங்க வைத்த தமிழ் சோழ மன்னன்.

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராசேந்திர சோழன்.


இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராசேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, யா(ஜா)வா , போர்னியோ , பிலிப்பைன்சு, பார்மோசா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 கிலோமீட்டர்(KM) க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .யூலியசு(ஸ்) சீசர் , அலெக்சாண்டர் , தாமூர் , செங்கிசு(ஸ்)கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராசேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேசியாவின் தெற்கு முனை வரை இராசேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராசேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday, 15 June 2013

தமிழ் உணர்வாளர் மணிவண்ணனிற்கு ..............!


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.


Thursday, 13 June 2013

ஒரு செயலின் விளைவு நிகழ்ச்சியில் இலங்கை.....!

அதிர்வு இணையத்தில் வெளியான செய்தி............

பிபிசி (BBC) ஒரு செயலின் விளைவு (IMPACT) நிகழ்ச்சியில் இலங்கை குறித்து கடும் விவாதம் !


சர்வதேச தொலைக்காட்சியான BBC ல் , ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் பிரபல்யமானவை, புரிந்துக் கொள்ள முடியாத விவாதம் செய்(HARD TALK), மற்றும் ஒரு செயலின் விளைவு (IMPACT) நிகழ்சிகளே ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் BBC இம்பக்ட் நிகழ்சியை மிஷைல் ஹுசைன் நடத்தியிருந்தார்.

இதில் கனேடிய அதிகாரி, "இறந்தவர்கள் இன்னும் கணக்கெடுக்கப்படுகிறார்கள்" என்ற புத்தகத்தை எழுதிய முன் நாள் BBC ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன், மற்றும் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் ஆகியோர் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடத்தப்படவேண்டுமா என்ற கருப்பொருளில் இன் நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலாவதாகப் பேசிய கொல்லப்பட்ட லசந்தவின் சகோதரர், மாநாடு இலங்கையில் நடப்பது நல்லது என்ற பொருட்படப் பேசியிருந்தார்.

இருப்பினும் கனேடிய அதிகாரி அதனை மறுத்து, இலங்கையில் மாநாடு நடக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன் அவர்கள், தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 30 தமிழர்களை பிரித்தானியாவில் சந்தித்தாகத் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் பல கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் பேசும்போது, இலங்கையில் இம் மாநாடு நடைபெற்றால் அதனூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இக் கருத்தை மறுத்த பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இம் மாநாடு இலங்கையில் நடந்தால் அது இலங்கைக்கு ஒரு அங்கிகாரத்தையே கொடுக்கும். மற்றும் அவர்கள் புரிந்த மனித உரிமை மீறல்களை அது நியாயப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Monday, 10 June 2013

கொதிக்கும் எண்ணையில் போடுவது, தோலை உரிப்பது............!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை பயண அனுபவங்கள்.சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள். துடுக்கும் துட்டத்தனமும் மிக்க விசயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு,தன்னைப்போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான்சென்று சேர்ந்தது இலங்கை தீவில்.

பெடூயின்சு(ஸ்) என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.


அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான். பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து, திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை சார்ந்தவர்களையும் கொன்று இலங்கையை கைப்பற்றி, மன்னனாக பட்டம் சூட்டிக்கொண்டான்.

அவனது கொடுமை அத்துடன் நிற்கவில்லை,காலம் செல்லச்செல்ல வங்காளத்திலிருந்து பல ஆண்களையும் பெண்களையும் வரவழைத்தான். 

ஆதிவாசிபெண்ணை புறக்கணித்துவிட்டு அனுராதா என்ற பெண்ணைதிருமணம் செய்துகொண்டான். பிறகு ஆதிவாசி இனத்தையே அழிக்கமுற்பட்டான், அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள்.

தப்பிப்பிழைத்த ஒருசில சந்ததியினரை இன்னும் காடுகளில் காணலாம். இவ்வாறு இலங்கை சிங்களம் ஆகியது, வங்காள குண்டர்களின் இருப்பிடம் ஆகியது.

காலம் செல்லச்செல்ல அசோகப்பேரரசின் காலத்தில் அவரது மகன் மகேந்திரனும் சங்கமித்திராவும் துறவு மேற்க்கொண்டு, மதபிரச்சாரத்திற்காக இலங்கைக்கு வந்தனர்.

இங்கே மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைக் கண்டார்கள். அவர்களை நாகரீகம் உடையவர்களாக மாற்றி அவர்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தார்கள்.

அவர்களை புத்தமதத்திற்கு மாற்றினர்.இலங்கையின் நடுவில் ஒரு நகரத்தை உருவாக்கி அதை அனுராதபுரம் என்று பெயரிட்டனர்.இன்று பாழ்பட்டு கிடக்கும் அந்த நகரத்தை காண்பவர்கள் திகைத்து நிற்பர்.

 வேலைப்பாடுகள் கொண்ட உயரமான தூண்கள் பாழ்பட்டுகிடக்கும் இடிந்த கருங்கல் கட்டிடங்களும் பல மைல்துரம் இன்றும் காணப்படுகிறது. மழித்த தலையுடன் மஞ்சள்நிற ஆடையுடன் ஆண்பெண் துறவிகள் பிச்சைப் பாத்திரத்துடன் இலங்கைமுழுவதும் காணப்பட்டனர்.

மாபெரும் கோவில்கள் எழுந்தன.உள்ளே புத்தரின் தியானநிலை,நீதிநெறியைபோதிப்பது போன்ற நிலை மற்றும் மகாநிர்வாணநிலை என பல்வேறு விக்கிரகங்கள் உ்ள்ளன.

இலங்கைவாசிகளும் தங்கள் கைவண்ணத்தை காட்டியுள்ளார்கள்.தீங்குசெய்பவர்களுக்கு தண்டனைகொடுப்பது,வாளால் அறுப்பது,சாட்டையால் அடிப்பது,கொதிக்கும் எண்ணையில் போடுவது,தோலை உரிப்பது போன்ற சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

அகிம்சையை போதிக்கும் மதத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு இடம் இருக்கும் என்றால் யாராவது நம்பமுடியுமா? சீனாவிலும், யப்பானிலும்கூட இதேபோல் தான் அவர்கள் பேசுவதோ அகிம்சை ஆனால் அவர்கள் கொடுக்கும் தண்டனைகளைப்பார்த்தால் ரத்தம் உறைந்துபோகும்.

பௌத்தர்கள் மிகவும் சாதுவானவர்கள், எல்லா மதங்களையும் மதிப்பவர்கள் என நாம் கேள்விப்படுகிறோம்.ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை, அவர்கள் நம்மைகண்டால் பழிக்கிறார்கள்

நான் ஒருமுறை தமிழர்களிடையே அனுராதபுரத்தில் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தேன்.நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு திறந்த மைதானத்தில்.யாருடைய சொந்த இடத்திலும் இல்லை.

நான் பேச ஆரம்பித்தது தான் தாமதம் புத்தமதத்தின் பிட்சுக்களும் மற்றவர்களும் ஆண்களும் பெண்களும் அங்கே தம்பட்டங்களையும் தாளங்களையும் தட்டி பெருத்த ஆரவாரம் செய்தனர்.

அதில் என்னால் பேசமுடியவில்லை. ரத்தக்களறி ஏற்படுகின்ற சூழ்நிலை. நாமாவது அகிம்சையை கடைபிடித்து அமைதியாக போவோம். என்று கூறி தமிழர்களை சமாதானப்படுத்தினேன். பிறகு எப்படியோ எல்லாம் அமைதியானது.

நாளடைவில் தமிழர்கள் மெல்லமெல்ல வடக்கிலிருந்து இலங்கையின் மற்றபகுதிகளில் குடியேறினர். பாதகமான சூழ்நிலை ஏற்படுவதைக்கண்ட பௌத்தர்கள் தலைநகரை (அனுராதபுரத்தை) விட்டுவெளியேறி கண்டி என்றும் மலைப்பகுதியில் குடியேறினர்.

சிறிது காலத்தில் தமிழர்கள் அந்த இடத்தை கைப்பற்றி, அங்கே ஓர் இந்து மன்னனுக்கு பட்டம் சூட்டினர்.அதன் பிறகு ஸ்பானியர்,போர்ச்சுக்கீசியர்,டச்சுக்கார்கள் என ஐரோப்பிய கூட்டம் வரத்தொடங்கியது.

இறுதியாக ஆங்கிலேயர்கள் வந்து அரசை கைப்பற்றினர். கண்டியிலிருந்த அரச பரம்பரையினர் தஞ்சாவுருக்கு நாடு கடத்தப்ட்டார்கள். அங்கு அவர்கள் ஓய்வுதியம் பெற்றுவருகிறார்கள்.

வட இலங்கையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகிறார்கள். தென்பகுதியில் பௌத்தர்களும் பல்வேறு வகைப்பட்ட ஐரோப்பிர்களும் வசித்துவருகின்றனர். பௌத்தர்களுடைய தற்போதைய தலைநகரம் கொழுப்பு,

இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம். குலக்கட்டுப்பாடுகள் (ஜாதி) இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து குலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரே குலமாகிவிட்டது. இவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஐரோப்பிய பெண்களை திருமணம் செய்யவும் தடையில்லை.அவர்களின் பிள்ளைகள் கோவிலுக்கு சென்று நெற்றியில் விபூதி அணிந்து சிவசிவ என்று சொல்கிறார்கள். இந்துவை மணக்கும் ஜரோப்பியர்களும் சிவசிவா என்று கூறி இந்துக்களாகி விடுகிறார்கள்.

இதனால் கிறித்தவ பாதிரிகள் இந்துக்கள்மேல் கோபத்தில் உள்ளார்கள்.இலங்கைக்கு வந்த பல ஐரோப்பியர்கள் இவ்வாறு இந்துக்களாகி விட்டார்கள்.

இங்குள்ள மக்கள் அத்வைதம்,வீர சைவம் ஆகிய நெறிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்து என்று சொல்வதற்கு பதிலாக சைவம் என்று சொல்லவேண்டும்.இலங்கைத்தமிழ் துாயதமிழ்.இலங்கை மதம் துாயதமிழ் மதம்.

இலங்கையில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பக்திமேலிட குழுப்பாடல் (பஜனை) செய்வதும்,சிவபெருமானைப்பற்றி பக்தி பாடல்களைப்பாடுவதும், ஆயிரக்கணக்கான மிருதங்களின் ஓசையும்,பெரிய பெரிய தாளங்கள் எழுப்பும் ஒலியும், சிவந்த கண்களுடன் நல்ல உடற்கட்டுடன் காட்சியளிக்கும் தமிழர்கள் மகாபக்தனான அனுமனைப்போல கழுத்தில் உருத்திராட்சை மாலை அணிந்து விபூதி பூசிக்கொண்டு மெய்மறந்து நடனம் ஆடுவதும், காணக்கண் கொள்ளாக்காட்சி.

அதனை கற்பனை செய்துபார்க்க முடியாது. அவ்வளவு அழகு.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Saturday, 8 June 2013

நகரும் இலக்கை தாக்க வல்ல................

தமது நாட்டு போர்கப்பலை தாமே ஏவுகணை கொண்டு தாக்கிப் பார்த்திருக்கிறார்கள் நோர்வேப் படையினர். தாம் புதிதாகத் தயாரித்துள்ள ஏவுகணை ஒன்றை நோர்வே நாடு இன்று பரீட்சித்துப் பார்த்துள்ளது. 


வழமையாக இவ்வாறு ஏவுகணைகளை நாடுகள் பரீட்சித்து பார்க்கும்போது காலியான கட்டிடங்கள் இல்லை என்றால் பாலைவனங்களில் சோதித்துப் பார்ப்பார்கள்.

ஆனால் நோர்வே நாடு தனது போர்க்கப்பல் ஒன்றின் மீது இதனை நடத்திப் பார்த்துள்ளது. அதி தூரம் சென்று, நகர்ந்துகொண்டு இருக்கும் ஒரு இலக்கை (target) தாக்க வல்ல இந்த ஏவுகணையை பரிசோதிக்க விரும்பியது.

நோர்வே , தனது நாட்டின் பழைய போர் கப்பல் ஒன்றை கடலில் செலுத்தி பின்னர் அதனை குறிவைத்து இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணைத் தயாரிப்பில் நோர்வே வெற்றியடைந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாது இத் தாக்குதல் நடவடிக்கையை வீடியோவில் கூட பதிவுசெய்துள்ளார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

உளவுபார்க்கும் அமெரிக்க உளவுத்துறை..............!

உலகின் முன்னணி இணையதள சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்க்கும் அமெரிக்க உளவுத்துறை!


அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்கு வைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும்ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.
  
PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.6 ஆண்டுகளாக இந்த உளவுவேலை நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த செய்திகளில் பல தவறுகள் காணப்படுவதாகவும், இப்படியான செய்திகள் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உளவுத்துறை நிறுவனங்களின் பணிகளை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.

Thursday, 6 June 2013

புரட்சி செய்த வாஞ்சிநாதனை ...............!

புரட்சி என்றவுடன் நாம் பகத்சிங் என்கிறோம். நம் மன ஒட்டம் பலஆயிரம் கிமீ ஒடுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த ஒரு விரனை நம் மனது அறிவதில்லை பகத்சிங்கை விட பெரும் புரட்சி செய்த வாஞ்சிநாதனை அறிந்துகொள்ளுங்கள்! வாஞ்சியின் தனிமனித போரட்டம் யெனரல் (General) டயரை சுட்டு கொன்ற உத்தமன் உத்தம்சிங்கின வீரத்திற்கு இணையானது.


1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.
தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.

ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.

புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.

இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை மாவட்ட அதிகாரி(collector) ராபர்ட் வில்லியம் டி.எசு(ஸ்)கார்ட் ஆசு(ஷ் )துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆசு (ஷ்) துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 யூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாரி ஆசு(ஷ்) துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.

வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் அதிகாரி ஆசு(ஷ்). யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி அதிகாரி ஆசை(ஷை) வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார்.

வாஞ்சி தன் சட்டையில் வைத்திருந்த சாசனத்தில் உள்ளது இது தான்.

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ச(ஸ)னாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாசி(ஜி), கிருசு(ஷ்)ணன், குரு கோவிந்தர், அர்சு(ஜு)னன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய யோட்சு,(George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது.

அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துசு(ஸ்)தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்று சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.



Thursday, 30 May 2013

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில்................!.

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்.


தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். 

தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். 

எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள்.

அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை.

தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 22 May 2013

எதிரி நாட்டு ஏவுகணைகளை....!

எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.


அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.

இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது.


அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதி நவீன இரசாயன கிளர்கதிர் (laser) வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.


திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 13 May 2013

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்...........!

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு வானூர்தி ஒன்றை போயிங் (Boing) நிறுவனம் தயார் செய்துள்ளது.


சூரிய சக்தியில் இயங்கும் இந்த உளவு வானூர்தியை தயாரிக்க அமெரிக்க இராணுவம் போயிங் நிறுவனத்திடம் அனுமதி வழங்கியது.

சூரிய கழுகு (Solar Eagle) ன்ற பெயரில் உளவு வானூர்தியைத் தயாரித்துள்ள போயிங் நிறுவனம் அதைப் பரிசோதித்து வருகிறது. இந்த வானூர்தி நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம். 

இந்த வானூர்தியின் இறக்கையில் உள்ள சூரியத் தகடுகள் (Solar Impulse) பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் வானூர்தியின் மின்னியல் இயந்திரங்கள் (Electric Motors) மற்றும் உந்துகணைகள் (Propellers) இயங்கும்.

வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த வானூர்தி அனுப்பிக் கொண்டிருக்கும். 

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் வானூர்தி 30 நாள் தொடர்ந்து பறக்கவுள்ளது.இந்த சூரிய கழுகு வானூர்தி 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday, 7 May 2013

ஆதித் தமிழன் எந்த ஒரு.................!



ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.

ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, 

வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி, தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.

இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும், கோவிலுக்கு செல்ல கூடாது, சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.

அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால், பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித "நேர்மறை ஆற்றல்" (Positive Energy) நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு, நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது.

அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாடசாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "அறுவை சிகிச்சை......." (Surgery) வரை நடைபெற்றுள்ளது.

இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது. அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது, கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது, அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராச ராசன் " என்று நிலைவட்டு (hard disk), பென்ட்ரைவிலோ (Pen Drive) பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும் போதும் என்பவர்கள், மரங்கள் வேண்டாம் பிராணவாயு மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ?

மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்ல இருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.  

வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம். அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம்! தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 20 April 2013

ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவிற்கு............!


மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் விமானத்தை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1915ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி, இந்த விமானத்தை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.












இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், யேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாசு(ஸ்) சந்திரபோசு(ஸ்) அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார். இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார்.

இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர். ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை. இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 10 April 2013

ஆறுமுக நாவலர் ..............!



“தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்”, என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சிறீ(ஸ்ரீ)லசிறீ(ஸ்ரீ) சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.

தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?”

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூச(ஷ)ண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்.

கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிசு(ஸ்)த்தவர்களது வேகமான பிரச்சாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை.

மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

“யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராசதாரணம், பஞ்சாசரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!

உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.

தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ச(ஸ்)தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்.

ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வசுத்(ஸ்)திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாத்(ஸ்)திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”

மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும்.

இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.

எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 28 March 2013

காட்சிக்கும் அப்பால் சென்று ............!

தமிழர் சிற்பக்கலை


சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.

" மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 11 March 2013

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட ..!

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்( பூநகரி)


கதிர்காமம் -நாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி கல்யாணி தீகவாவி மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள்.

நாகர்கள் என்னும் இரு இனமக்களின் வசிவிடமாக இருந்தது.இம்மக்கள் கி.மு1000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள். 

இவற்றுக்கான சான்றுகள் இராவண காவியம் இராமாயணம் மகாபாரதம் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. அதேபோன்று கல்வெட்டுக்கள் தொல்லியல் சான்றுகள் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்ற சான்றுகளும் உள்ளன.


பெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா கலியாணியிலும் வளவகங்கை மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில்தீகவாவியிலும் நிரந்தரமாக வாழந்து அரசுகளும் அமைத்தனர்.

பிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். இப்பிரதேசங்களிற் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது.

கலாநி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நுாலை வாசியுங்கள். அதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார்.

பூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ் மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும்.

யாழ்பாடி யாழ்வாசித்து பரிசுபெற்றபின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக...

கி.பி10 ஆம் நுாற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பற்கு ஆதாரங் களுள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு.

பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதெசமே தமிழர் அரசின் புராதன நல்லுார் ஆகும்.

தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லுார் எனப்பெயருள்ளது. ஆகவெ அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்கழால் இடப்பட்டிருந்தது.

முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழநாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லுாரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன.

குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது.பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லுார் என்ற ஊரும்(இடமும்) காணப்படுகிறது.

பதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்திட்டு இலங்கை முழுதும் முதலாம் வியயபாகு(1055-1110) வரையும் அரசனானான். 

அவன் ஆட்சிக்காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகைளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது.

விசயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான்.

அப்படைக்கு தலைமைதாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான் அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டைமானாற்றை துறைமுகமாக்குவித்தான்.

தொன்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான்.

தன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது...

இதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழர் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர். 

இதன் தாக்கம் இன்று ஐரோப்பி ஆசியநாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனிவரலாற்றை மீண்டும் வாசிக்கவும்.....

படஆதாரங்களுடன் நாம்விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது.

அதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியு முள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித் துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது.

அத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை புளியம்பொக்கணை நாதம்பிரன் கோவில் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.

நாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா நாகம்மா நாகமுத்து நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்று தமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும்.

அதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையம் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மொட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர்.

அதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களி அணிவது தவறல்ல தமிழ் உடையெ எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.அதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும் கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள்.

இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிப்பண்பாட்டுக் கேடுகளாகும். மணவறைகள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைசுணவ முறைகளை மணவறை சோடனைகாறர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள்.

தமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பம் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.



Tuesday, 5 March 2013

ஆதிபூர்வீக இலங்கையில்தமிழர் மாத்திரமே !

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் ஆதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது.

இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம்.

இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும்.

புத்தூரில் பிரசித்த நொத்தாரிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும்.

இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக...

எழுச்சியடைவோமாகுக.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.



புதிய தலைநகரத்தை உருவாக்கி......!


பாலி (Bali) என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், யா (ஜா)வாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும்.

இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான்.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிறீ விசயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்.

அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான்.

அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 13 February 2013

பெரு நிலத்தை தமிழர்கள் தமது............!


இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் , இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.

இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள்.

இன்று அப்கானிசுத்தான் பாகிசுத்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது.

இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது . இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது.

எனவே இந்த இரு தொகுதி நாகரீகங்களை இணைத்து தமிழர்கள் இந்திய துணைக்கண்டம் என்று இன்று விளங்கும் பல நாடுகளை மாநிலங்களை உள்ளடக்கிய பெரு நிலத்தை தமிழர்கள் தமது ஒற்றை தாயகமாக வளமாக்கி வாழ்ந்துள்ளார்கள் என்பதை தர்க்க ரீதியாகவும் தடயங்கள் ரீதியாகவும் நாம் முன்வைக்க முடியும்.

இந்த நிலப்பகுதியில் தமிழர்கள் இன்று பத்து சத வீதத்துக்கும் குறைவான பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டிருந்தாலும் அதனையும் இழக்கும் ஒரு அபாய சூழலில் வாழ்கின்றார்கள் என்பது உண்மை .

நாம் வாழும் காலப்பகுதியில் 1947 ஆண்டின் பின் தங்கள் தாய் நிலத்தில் பல பகுதிகள் இழந்துள்ளார்கள். ஈழத்தின் மொத்த நிலபரப்பாக1947 இக்கு முன் 25000 சதுர மைல்கள் இருந்தன.

அவை 1950 காலபகுதியில் படிப்படியாக சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று 7500 சதுர மைல்களாக குறுகி விட்டது . ஈழத்தமிழர்கள் தமது வளமான பூமிகளை பறி கொடுத்து ஏதிலிகளாக உலகெங்கும் அலையும் நிலையில் இருக்கின்றார்கள்.

1900 ஆண்டுகளின் பின் தமிழகம் ஏறக்குறைய 15000 சதுர நிலப்பரப்பை புதிய கேரளத்துக்கும் கிழக்கே நெல்லூர் தொடக்கி மேற்க்கே மங்களூர் வரையிலுமான 30000 சதுர மைல்களை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று பரதேசியாக அவர்களிடம் நீர் பிச்சை கேட்டு நிற்கின்ற துர்பாக்கிய நிலை தோன்றி வளமான காடுகள் மலைகள் நதிகள் இல்லாம் பறிபோனது.

இது போதாது என்று, அண்மைய காலங்களில் கச்சதீவு திருப்பதி, பெங்களூர் முல்லை பெரியார் , கல்குகை என்று சகல பகுதிகளையும் கபளீகரம் செய்துவிட்டார்கள் தமிழரிடம் இருத்து. தன் தாய் மண்ணை இழந்து இழந்து இன்று ஒரு மூளைக்குள் முடங்கி கிடக்கின்றது தமிழினம்,

கி முன் தமிழன் உலகில் மிக பெரிய நாகரீகத்தின் வாரிசாக அகண்ட குமரி மண்டாலம், கடல் கொண்ட வங்கம் கலிங்கம், சங்கம் , என்று வாழ்ந்த தன் நிலங்களை இயற்க்கை அழிவிடம் பறி கொடுத்து.

கடல் கொண்ட பின்னும் கூட கி பி 100 களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மைல்களை சொந்தமாக வைத்திருந்து வந்தவரை எல்லாம் வரவேற்று இந்த பூமி எல்லோருக்கும் பொது என்று நன் நெறி சொன்ன ஒளவை வள்ளுவன் காலத்தில் தன் நிலங்களை கொடுத்து இன்னமும் கொடுத்து இன்று இழந்து கையறு நிலையல் கரைந்து, தன் நிலத்தை இழந்து கரைந்து கொண்டு இருக்கின்றது தமிழன் இருப்பு.

தமிழகம் இன்று 50200 சதுர மைல்களுக்குள் சுருங்கி உள்ளது . ஈழம் இன்று 7500 சதுர மைலக்ளாகி உலகில் தமிழன் தனக்கென வாழும் நிலம் குறுகி பெரும் அபாய சூழலில் உள்ளது.

தமிழன் இன்று வாழும் பகுதியும் இன்னும் சில காலங்களை இல்லாது போய் தமிழன் என்ற இனமே அழிந்து வரலாற்றில் அழிந்து போன இனம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவான்.

உலகில் வாழும் இனங்களுக்கெல்லாம் மூத்த குடி தமிழ்குடி , இந்த மகிமை தமிழனுக்கு மட்டுமே உரியது, இத்தனை வரலாற்று சிறப்பு உலகில் இன்று வாழும் எந்த இனத்துக்கும் இல்லை. எமது மூதாதையர் இந்த பெருமையை மிகுந்த இன்னலுக்குள் பாதுகாத்து தந்துள்ளார்கள் , இன்று வரை உறக்கத்தில் இருந்த வேங்கையின் வாரிசே.

இன்று நீ விழித்து எழுந்து பார்த்தாலே போதும் . உன்ன பார்வை ஒன்றுதான் வேண்டும் . உன் பெருமை உனக்கே உரியது . இயற்கையாக நீ தமிழனாக இத்தைய பெருமையுடன் பிறந்து விட்டாய். பல் ஆய்வாளர்கள் தாங்கள் தமிழர்களின் வாரிசுகள் என்றும் தமிழனாக பிறப்பதே பெருமை என்று சொல்லும் அளவில் இன்று உலகம் வியக்கின்றது.

உன் பெருமைகளை இந்த உலகு அறிந்த அளவில் நீ அறியாமல் இருப்பது தவறு. தமிழா இந்த உலகு உள்ளவரையும் இந்த உரிமையை நீ விட்டுக்கொடுத்து வாழலாமா?.

இடையில் வந்த ஏனைய இனங்களைப்போல நாடு காத்து , எம் மூத்த தமிழ் காத்து வாழவேண்டும் . உலகில் தமிழன் என்றும் அழியாது வாழும் நிலை உன்கையில்தான் இன்று உள்ளது.

எதோ ஒரு மனிதனாக வாழ்வது பெருமை அல்ல. உன் பாரம்பரிய வரலாற்றை இழப்பது நியாயமல்ல. அதை உன்ன வருங்கால சந்ததிக்கும் எடுத்துசெல்ல எழுந்து வா வேங்கையின் வாரிசே.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 11 February 2013

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள்

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது !

 இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? 

ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

ஆனால் இதுவரை தமிழகத் தலைவர்கள் செய்யாத ஒரு விடையத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்துள்ளார். வெளியாகியுள்ள இந்த அறிக்கையை அப்படியே மொழிபெயர்த்து இலங்கை அரசின் திட்டத்தை ஒரு கடிதமாக எழுதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார். 


இலங்கையில் உள்ள தமிழர் நகரங்கள் சிங்களமயமாக்கப்படவுள்ளதை அவர் தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் போக, இனியாவது மிஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவுங்கள் என்று அவர் பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். பாரம்பரியமாக வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் அனாதைகள் ஆக்கபடும் நிலை வந்துகொண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு , இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் !


என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில், மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி, சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

இனியும் ஒன்றுபடாவிட்டால், சொந்த ஊரைத் தொலைத்த ஈழத் தமிழினமாக நாம் அலைய நேரிடும். மானங்கெட்ட தமிழனுக்கு இதுதேவையா என்று வேற்றின மக்கள் எம்மீது காறித்துப்பும் நிலை தான் மிஞ்சும் !

பின் குறிப்பு: இதில் பல நகரங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களால் குடும்பி மலை என்று அழைக்கப்படும் இடம் தற்போது தொப்பிக்கல என்று மாற்றம் பெற்றுள்ளது. மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இச் சிங்களப் பெயரையே பாவிக்கின்றது. அதுமட்டுமல்லாது பல கோவில்களின் பெயர்களும் மாற்றப்படவுள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல் தான் !

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.