Saturday 28 July 2012

தொல்காப்பியம்........!


தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், பலரின் முயற்சியால் வெவ்வேறு காலகட்டங்களில் இந்நூல் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ் மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப் பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. 

வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம் வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது. 

தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

எழுத்ததிகாரம்

தொல்காப்பி எழுத்து நடை - ஒரு பகுதி

நூல் மரபு
மொழி மரபு
பிறப்பியல்
புணரியல்
தொகை மரபு
உருபியல்
உயிர் மயங்கியல்
புள்ளி மயங்கியல்
குற்றியலுகரப் புணரியல்

சொல்லதிகாரம்
கிளவியாக்கம்
வேற்றுமை இயல்
வேற்றுமை மயங்கியல்
விளி மரபு
பெயரியல்
வினை இயல்
இடை இயல்
உரி இயல்
எச்சவியல்

பொருளதிகாரம்
அகத்திணையியல்
புறத்திணையியல்
களவியல்
கற்பியல்
பொருளியல்
மெய்ப்பாட்டியல்
உவமவியல்
செய்யுளியல்
மரபியல்

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

ஆறு பண்டை உரையாசிரியர்கள்
இளம்பூரணர்
பேராசிரியர்
சேனாவரையர்
நச்சினார்க்கினியர்
தெய்வச்சிலையார் கல்லாடர்


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.


நன்றிகள் பல.