Friday 9 August 2013

மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன்.....!

கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் தேசிய தலைவருடன் நின்ற அரிய புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு உள்ளே )


ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் ஆப்படிக்கப்பட்டவரும் ஆகிய மாவீரன்  ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய   படங்களை  தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண  பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம்.

தன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும் எடுத்த பதவி தான் கேணல் ..அதன் பின்பு ஆட்டை கடித்து மாட்டை கடித்து ராம்போ பிரசாத் ஐ கடித்து நீலனையும் கடித்து  இறுதியில் தலைவரையும் கடித்தது அந்த நரி ??அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி இன்று  அமைச்சராக உள்ளது.

பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி  இன்று கூறுகிறது மாற்றத்தை  ஏற்படுத்தினாராம்?அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் ??வாயை திறந்தாலே பொய் ?? 

ஒரு இனத்தின் துரோகிகள் அதன் எதிரி இனமான மற்றைய  இனத்தின் கதா  நாயகர்களாக பார்க்கப்படுவார்கள் அதுவே  இன்று இலங்கையில் நடைபெறுகிறது.
தமிழினத்தின் அந்த துரோகிக்கு ஆதரவளிப்பவன் தமிழன் இல்லை என்பதை விட அவன் மனிதனே இல்லை என்றே கூறவேண்டும் ..

ஆரையம்பதி மண்ணில் அணையாத ஒளி விளக்காய், மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் போராளி - ரம்போ பிரசாத் அல்லது வசந்தன் (கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார்). 

ரம்போ பிரசாத் அல்லது வசந்தன் 
தாயின் மடியில் : 24.05.1964     -     வீர சாவு : 16.09.1991 

தென் தமிழீழத்தில், வீரம் செறிந்த ஆரையூர் மண்ணில் திரு / திருமதி கிருஷ்ணபிள்ளை அவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாக 24.05.1964 அன்று பிறந்த பிரசாத், தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த ஊரில் அமைந்திருந்த ராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும், சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்று, பின்னர் மட்டுநகர் இந்து கல்லூரியில் உயர் கல்வியை  பயின்றார். 

தமிழ் ஈழத்தின் எழுச்சியில் விடுதலையை நோக்கிய பயணத்தில் 1983 இல், கோட்டை கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கப்டன்.பிரான்சிஸ் அண்ணனின் தொடர்பு மூலம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்தியாவில் ஐந்தாவது பயிற்சி பாசறையில் கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி, லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), மேஜர்.அகத்தியர் (கோட்டைக்கல்லாறு), மேஜர்.குலதீபன் (களுவாஞ்சிகுடி) ஆகியோருடன் லெப்.கேர்ணல்.ராதாவிடம் படைத்துறை பயிற்சி பெற்றுக்கொண்ட இவர், ராதா அண்ணனின் பல பாராட்டுக்களை பெற்று இருந்தார்.

இப் பயிற்சி பாசறையில் திறமையான பயிற்றுனராக ராதா அண்ணனால் இனம் காணப்பட்டதனால், ஈழ மண்ணில் இந்திய படைகள் வெளியேறிய பின்னர் நடந்த பாரிய பயிற்சி பாசறைக்கு பயிற்சி ஆசிரியனாக மட்டக்களப்பு மண்ணில் நியமிக்கப்பட்டார். 

ரம்போ பிரசாத் அவர்கள் 1986 - 88 காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் வாழைக்காலை முகாம் பொறுப்பாளராக இருந்தார். இக் காலப்பகுதில் கொக்கட்டிசோலையை அழித்தொழித்து, ஆக்கிரமிக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் போது, புளுக்குனாவை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை விசேட அதிரடி படையினரை தாந்தாமலை வீதியில் வழி மறித்து தாக்கி துவம்சம் செய்த பெருமை இம் மாவீரனுக்கும் அவனது படையணிக்குமே சாரும். 

ரம்போ அவர்களின் பெயர் சொல்லும் தாக்குதல்களின் ஆரம்பமே, மாங்கேணி இலங்கை இராணுவ முகாம் தாக்குதல். இத் தாக்குதல் லெப்.கேணல்.குமரப்பாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தது, மேலும் இவ்வணியில் வீரம் செறிந்த அருணா அண்ணன், கமல் அண்ணன், மற்றும் பல மூத்த உறுப்பினர்களுடன் ரம்போவும் பங்கு கொண்டு தனது வீரத்தை சிறப்பாக பறை சாற்றினான்.

இப்படி துணிவுடன் களமாடிய பிரசாத், வட தமிழ் ஈழத்தில் 1987 இல் JR ஜெயவர்த்தன, லலித் அத்துலத் முதலி ஆகியோரால் ஆரம்பிக்க பட்ட Liberation ஆபரேஷன் இன் பொழுது, தேசிய தலைவரின் கட்டளைக்கமைய தமிழீழத்தின் சகல பகுதிகளில் இருந்தும் படையணிகள் யாழ் மண்ணை மீட்க புறப்பட்டனர்.

அந்த கால கட்டத்தில், மட்/ அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த லெப்.கேணல்.குமரப்பா தனது படையணியோடு மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டார். அதில் ரம்போ பிரசாத், லெப்.கேணல்.ரீகன், கப்டன்.சபேசன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். இவர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளும் யாழ் மண்ணை சென்றடைந்தவேளை, தேசிய தலைவரின் நெறிப் படுத்தலின்கீழ் 05 ஜூலை 1987 அன்று தமிழீழ வரலாற்றில் முதல் முறையாக கரும்புலி தாக்குதல் சிங்கள இராணுவ படைகளுக்கு எதிராக வட தமிழ் ஈழத்தில் உள்ள நெல்லியடியில் அமைந்திருந்த பாரிய இராணுவ முகாமில் மேட்கொள்ளபட்டது.

இதை கப்டன்.மில்லர் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இத் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, தயாராக இருந்த விடுதலை புலிகளின் படை அணிகள் சிறப்பாக போராடி சிங்கள இராணுவத்தை அழித்தொழித்து, இந்த இராணுவ முகாமை தம்வசம் ஆக்கிகொண்டனர். இந்த இராணுவ முகாம் தாக்குதலின் பொது, இம் மாவீரன் பிரசாத் அவர்கள் கனரக ஆயுதங்களை இலகுவாக கையாண்டு இருந்ததினால், இவரை அன்று தொடக்கம் ரம்போ என்று அடையாள பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். 

உலகின் முதல் தற்கொலை படைகூட தமிழன்தான் என்பதில் சந்தேகமில்லை. - மாவீரன் சுந்தரலிங்கம் மற்றும் அவர் மனைவி வடிவு நாச்யாருமேயாகும். 

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழகத்திலிருந்து பல சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும் உடமையும் தியாகம் செய்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்போராட்டத்தில் தங்கள் உயிரை பற்றி சற்றும் எண்ணாமல் எதிரிகளின் ஆயுத கிடங்கை அழித்துள்ளனர் ஒரு வீர தம்பதியினர். ஆம் கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் தனது மனைவியுமான வடிவு நாச்சியாருடன் , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழித்துள்ளனர். இதுவே உலகம் அறிந்த முதல் தற்கொலை படை தாக்குதலாகும்... 

ரம்போ பிரசாத் அவர்கள் முன்னின்று பல கண்ணிவெடி தாக்குதல்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிரான அதிரடி வழி மறிப்பு தாக்குதல்கள் என இவரது வீரம் ஈழ மண்ணில் பறை சாற்றி நின்றது. மேலும் இந்திய ராணுவம், ஈழ மண்ணை விட்டு ஓட்டம் எடுத்த போது, ஒட்டுக்குழுக்களின் முகாம்களை மேஜர்.அண்டனியின் தலைமையில் தாக்கி அளித்ததில் பெரும் பங்காற்றிய தளபதி ரம்போ பிரசாத்தாகும்.

இவர் வருடம் தோரும், கண்ணகை அம்மன் கோவில் சடங்கு காலம் மட்டும் தான் பிறந்த மண்ணை மிதித்து, தனது சொந்தங்கள், பாடசாலை நண்பர்கள், தனது பாடசாலை ஆசிரியர்கள் என சகலரையும் சந்தித்து கொள்ளுவது வழக்கம். இதட்கேன்று, இவர் வருடத்தில் ஒதுக்கிகொள்வது இந்த இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே. 

மட்டக்களப்பில் விடுதலை பயணிப்பில் பணியாற்றிய வேளையில், இவருடன் சேர்ந்து இந்திய மண்ணில் பயிற்சி பெற்றவர்களான கேணல்.நீலன்(ஆரையம்பதி), மேஜர்.அன்டனி (கல்முனை), லெப்.கேணல்.ரீகன் (வெல்லாவெளி), ஆகியோர் மிக முக்கிய பொறுப்புகளை வகுத்தவர்கள் ஆகும். அன்றைய நிலையில் தேசிய தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்த மட்டக்களப்பு தளபதியால் ஒதுக்கப்பட்டார் இச் சிறந்த வீரம் மிக்க போராளி.

தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து விலகி குருநாகல் பிரதேசத்தில் ஒளிந்திருந்த போதும், தன்னுடன் இரண்டு சயனைடு வில்லைகளை ஒளித்து வைத்திருந்தான் பிரசாத், அவ் வேளையில்தான், சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு, தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அக் கைதுக்கு பின்னர், தான் விசாரணைக்காக நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட நேரும் என்னும் பட்சத்தில், தான் வளர்க்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட மரபுக்கமைய சயனைடு உட்கொண்டு தன் வீரத்தை பறை சாற்றி, தன் உயிரை எதிரியின் கைகளில் மாட்டாமல் தானே மாய்த்து கொண்டான். இவ் வீர மறவன். இவரது இளைய சகோதரர் வீரவேங்கை - முரளி (கிருஷ்ணபிள்ளை கிரிஷ்ணமுரளி) 16.06.1990 ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடி இலங்கை முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்தவர். 

தமிழீழ வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில், ஆரையூரில் அவதரித்த முதல் ஆண் மாவீரரான வீரவேங்கை - பிரதீஸ் (சின்னதுரை ரகு), வீரவேங்கை - பிரியன் (தம்பிப்பிள்ளை நவரெத்தினராஜா) ஆகிய இரு வேங்கைகளும் 09. 09 .1985 அன்று இலங்கை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தபோது தங்களுக்கு கொடுக்க பட்டிருந்த கைக்குண்டை வீசிவிட்டு சயனைடு அருந்தி தங்களின் விடுதலை அமைப்பையும், தனது ஊரின் வீரத்தையும் காப்பாற்றி தமிழீழ மண்ணை முத்தமிட்டனர். இவ் விரு மாவீரர்களும், தென் தமிழீழ மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பயிற்சி பாசறையில் தங்களின் படைத்துறை பயிற்சியை முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரதீஸ் (ரகு), இவர் LTTE Aunty என்று போராளிகளால் அன்பாக அழைக்கப்பட்ட பூரணம் அம்மாவின் ஒரே மகன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். பூரணம் அம்மா எமது இன விடுதலைக்காகவும், எம் அமைப்புக்காகவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் கையால் ஒரு பிடி உணவு உண்ணாத கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த போராளிகள் இருக்க முடியாது.

இதை மேல் மட்டங்கள் மறந்ததுதான் வேதனைக்கு உரிய விடையம். இத் தாயின் அன்பு, பாசம் அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காமல் செய்து விட்டனர் தேச துரோகிகள். டெலோ அமைப்பில் இருந்து, இந்திய சிப்பாய்களுக்கு ஏவல் வேலை செய்த கிழவி ரவி, அன்வர் ஆகியோரால் 1988 இல் இத் தாய் சுட்டு கொல்லப்பட்டார்.

இப் படுகொலைகள் அனைத்துக்கும் தலைமை தாங்கியவர் முன்னாள் கிழக்கு மாகான டெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் என்பது எம் மக்கள் மறக்க கூடாத விடயம். இதைப் போன்று, ஆரையம்பதி மண்ணில் உதித்த லெப்.கலா(கிருஷ்ணபிள்ளை சதானந்தரத்தினம்), கல்முனையை சேர்ந்த ரமணண்ணா, மற்றும் சில போராளிகள் இந்திய இராணுவத்தின் சதியில் 19.04.1988 அன்று விடுதலை செய்யப்பட்டவுடன், அவர்களை வெட்டி படுகொலை செய்த பங்கும் இந்த டெலோ தலைவன் ஜனாவையே சாரும். இதில் உயிர் தப்பிய நானும், இன்னும் ஒரு முன்னாள் போராளியும் இன்றும் உயிருடன்தான் உள்ளோம். 

இவர்களை தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள் ஈழ மண்ணை ஆக்கிரமித்து இருந்த போது, EPRLF அடி வருடிகளினால் அடையாளம் காணப்பட்ட வேளை, எதிரியின் கைகளில் உயிருடன் சிக்காமல் சயனைடு அருந்தி, 2வது லெப்.அனித்தா (இந்திராதேவி தம்பிராஜா) கிழக்கு மாகாணத்தின் முதல் பெண் மாவீரர் பட்டியலில் தன்னை 28.11.1988 அன்று இணைத்துக் கொண்டு தனது ஊருக்கு பெருமை சேர்த்தார். 

இப்படி எம் மண்ணுக்கு வீரத்தை விதைத்து விட்டு சென்ற வீரர்களே, நீங்கள் என்றும் எம் நெஞ்சில் தீயாக எரிந்திடுவீர். துரோகிகளை எங்கள் மூலம் எரித்திடுங்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.