Sunday 26 February 2012

இது உந்தன் நாடே........



ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

அன்று யுத்தத்தின் அடி
இன்று வறுமையின் பிடி
இதுதான் உந்தன் வாழ்வா
உந்தன் குருதியில் உறுதியை
ஊட்டிடடா தமிழா

வழி இன்று தெரிகின்ற போது
விழி மூடி தூங்குவதா நீ
எல்லோரும் மன்னர்கள் தானே
ஏன் இன்னும் சேவகம் உனக்கு

ஏரு பூட்டி மாற்றான் வாழ
சோறு கொடுத்த எம் தமிழா
தேர்தல் மட்டும் நமக்கோர் வழி
நினைவில் வையடா


 நிலத்தை நீ இழந்து விட்டாய்-நீர்
புலத்தை நீ இழந்து விட்டாய்
உயிரை நீ இழந்து விட்டாய்- சொந்த
உறவை நீ இழந்து விட்டாய்

சொந்த கடலில் மீன்பிடியை இழந்தோம்
நெடும் காடு வீடுகளை இழந்தோம்
பசு மாடுக் கூட்டங்களை இழந்து
பள்ளிக் கோயில் சுகங்களை இழந்து
வெல்லும் வீரம் இருந்தும் மானமும் இழந்தோம்


ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா

தூரம் தனைக் கடந்து விட்டோம்
பாரம் தனை சுமந்து விட்டோம்
பொய் சொல்லி எம்மினத்தை- முள்
புதரின் நடுவே தள்ளி விட்டார்

இனி வாழ வளி இல்லை எமக்கு
ஒரு வாக்கு பலமிருக்கு உனக்கு
உனை ஆள ஒருவனை தெரிந்து
உலகெங்கும் பறை சாற்ற தமிழை
எமக்கே உரிய உரிமை பெற்று வாழ

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா....!!!

நன்றிகள் பல .