Sunday, 8 April 2012

3,000 ஆண்டுகள் வாழும் பிரபாகரன் நாமம் !

பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்! அதனை எவராலும் அழிக்கமுடியாது!- விக்கிரமபாகு.



தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் சனாதிபதி
மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இவ்வாறு தெகிவளை-கல்சிசை மாநகர சபை உறுப்பினர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். உதயன் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய்க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒழியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.

அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம்.

அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் சனாதிபதி
மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.

மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும்.

பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மகிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் பார்க்கலாம் என்றார் அவர்.

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday, 7 April 2012

இனத்திற்கு வந்த ஆபத்தை.........!



























10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப்பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான். தலைவர் பிரபாகரனைக் கொன்றுவிட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதி கட்டவேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்.

இதற்கு ஆழமான காரணங்கள் பலவற்றை அது வைத்திருந்தது. ‘திராவிட எழுச்சி’ என்ற சொற் பிரயோகத்தால் அழைக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்ற விடயம், காலாதிகாலமாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக்கொண்டே வந்தது. இந்த நிலையில், தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தைப் பார்த்து அகமகிழ்ந்தபடியிருந்த இந்திய ஆளும்வர்க்கம், அது தமிழீழத்தில் தலைவர் பிரபாகரனின் தலைமையில் புது வடிவம் எடுத்து வீறுடன் வளர்ந்து வந்ததைத் சரியாகவே இனங்கண்டு, அஞ்சத் தொடங்கியது.

எனவே, தலைவர் பிரபாகரனைத் தனது முக்கிய எதிரியாக இந்திய ஆளும் வர்க்கம் கருதத் தொடங்கியது. தமிழீழத்தில் சகோதரச் சண்டை ஒன்றை உருவாக்கி, ஆழவேரூன்ற முயன்ற தமிழீழ தேசியத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொலை செய்ய, இந்திய ஆளும் வர்க்கம் முடிவெடுத்தது. முதலில் அரசியல் வழிமுறைகள் மூலம் முயன்றுபார்க்க விரும்பியது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்ற அரசியல் சதுரங்க விளையாட்டின் மூலம், நயவஞ்சகமாகத் தமிழீழத் தேசியத்திற்குக் குழிபறிக்க முயன்றது.

ஆனால், அந்த அரசியல் சதுரங்க அரங்கை புலிகள் இயக்கம் திறமையாகக் கையாண்டதுடன், இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மைச் சொரூபத்தையும் தமிழீழ மக்களுக்குத் தோலுரித்துக் காட்டத் தொடங்கியது. மெது மெதுவாக தமிழீழ மக்களும் இந்தியாவின் கபடத்தனத்தை உணரத்தொடங்கினர். இதை வளரவிட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. எனவே, ஏற்கனவே முடிவு செய்துவைத்திருந்த அடுத்த கட்டமாகிய போருக்குச் செல்ல, அது முடிவெடுத்தது.

புலிகள் மீது நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யுமுன், வெளி உலகிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலிருந்த செய்தித் தொடர்பைத் துண்டிக்க விரும்பி ஈழமுரசு, முரசொலி பத்திரிகை நிறுவனங்களையும், நிதர்சனம் ஒளிபரப்புக் கோபுரத்தையும் குண்டு வைத்துக் தகர்த்து, போர் முரசு கொட்டியது. இந்தியப் படைகளின் பிரதான இராணுவ இலக்காக தலைவர் பிரபாகரனே இருந்தார். படைப்பலத்தை பயன்படுத்தி தலைவர் பிரபாகரனை அழித்து, புலிகள் இயக்கத்தின் பற்களையும்,நகங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டுத் தமிழீழ தேசியத்தைத் தூக்கி விடுவது என்று, இந்தியா முடிவு செய்தது.

ஆனால், இந்திய இராஜதந்திரிகள் கணித்த கால எல்லைக்கும் அப்பால் போர் நீண்டு சென்றது. அழிவுகளும் இழப்புகளும் பெருமளவில் அதிகரித்தன. இந்தியப் படைப்பலத்திற்கு அஞ்சி, தனது உயிரைப் பாதுகாப்பதற்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்த இந்திய ஆளும்வர்க்கத்திற்கு, அது நடைபெறாமல் போனது ஆச்சரியத்தையும், அதேவேளை ஆத்திரத்தையும் கொடுத்தது.

எனவே படைப் பலத்துடன் சேர்த்து ஒரு அரசியல் பேரத்திலும் இந்தியா இறங்கியது. போரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைக்கத் தலைவர் முன்வருவாரானால், பெருந்தொகைப் பணமும் மற்றும் சலுகைகளும் அவருக்கு வழங்கப்படும் என, இந்திய அரசு கூறியது. நிபந்தனைகளை ஏற்றால் புலிகள் இயக்கத்திற்கு தருவதாக வாக்களிக்கப்பட்ட தொகை கொஞ்சநஞ்சமல்ல. மக்களின் புனர்வாழ்வுக்கென்று 500 கோடி ரூபாவும், இயக்கத்திற்கென்று 200 கோடி ரூபாவும் வழங்கத் தயாராக இருப்பதாக, இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு உறுதியளித்துக் கூறியது.

இந்திய அரசின் சார்பில், அதன் உளவுத்துறையான ‘றோ’வின் பிரதம அதிகாரி கேணல் வர்மா அவர்கள் பேரத்தில் ஈடுபட்டார். இந்தப் பெருந்தொகைப் பணத்தை வைத்துக்கொண்டு தொழிற்சாலை போடலாம், மற்றும் முதலீடுகளைச் செய்து வருமானம் சம்பாதிக்கலாம், அத்துடன் இந்தப் பணத்தை வீசியெறிந்து தேர்தலையும் வென்று பதவியிலும் அமரலாம், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சுகங்களையும் அதிகரிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதியான கேணல் வர்மா தலைவருக்கு ஆசை காட்டினார்.

அதுமட்டுமல்ல, ஆயுதங்களை ஒப்படைத்தாலும் தலைவரின் மெய்ப்பாதுகாப்பிற் கென்றும் மற்றும் தளபதிகளினது பாதுகாப்பிற்கென்றும் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்றும், சலுகைகளை அள்ளி வீசினார். சலுகைகளையும் பணத்தையும் அள்ளி வீசுவதாகக் கூறிவிட்டு இந்தியா சும்மா இருக்கவில்லை. அந்தச் சலுகை வலைக்குள் தலைவரை விரைவாக வீழ்த்துவதற்காக, அவருக்கெதிரான இராணுவ அழுத்தத்தையும் இந்திய அரசு அதிகரித்தது.

மணலாற்றுப் பகுதியை முற்றுகையிட்டு, இராணுவ நடவடிக்கையை இந்தியப்படைகள் தீவிரப்படுத்தின. தலைவரின் இருப்பிடம் என்று கருதிய பகுதிகளெங்கும் இந்திய வான்படை 200 கி.கி. குண்டுகளை வீசத் தொடங்கியது. அடர்ந்த காடுகள், திறந்த வயல்வெளிகளைப் போல மாறும் அளவுக்கு - பாரிய விருட்சங்களைத் தகர்த்தெறிந்து அங்கிருந்தோரை அஞ்சச் செய்யுமளவுக்கு - அப்போது பாரிய குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இப்பாரிய குண்டுகளைத் தலைவரின் இருப்பிடப்பகுதிகள் மீது வீசிக்கொண்டு, இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் 200 கி.கி.குண்டுகளின் தன்மைகளை விளக்கியபடி, ‘விரைவில் தலைவர் சாகப்போகின்றார்.

அதற்கிடையில் கோரிக்கைகளை ஏற்கச் சொல்லித் தகவல் அனுப்புங்கள்’ என்று, இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். என்ன செய்தாவது தலைவரைப் பாதுகாத்துவிட வேண்டும் என்பதில் அக்கறைகொண்ட எமது மூத்த உறுப்பினர்களான அந்தப் பிரதிநிதிகள், கோரிக்கைகளை ஏற்கும்படி தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவரிடம் மன்றாடினர். அக்கோரிக்கைகளை ஏற்பதால் இயக்கத்திற்கு நட்டமேற்பட்டுவிடப் போவதில்லை என்று எடுத்து விளக்கினர்.

இயக்கத்திற்கென்று இந்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட 200 கோடி ரூபா என்பது, அந்த நேரம் எமது இயக்கத்திடம் இருந்த ஆயுதங்களின் மொத்தப் பெறுமதியைவிடப் பல மடங்கு அதிகமானது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி, ‘ஆயுதங்களை ஒப்படைத்தால் நட்டமேற்படப் போவதில்லை, தேவை ஏற்பட்டால் அப்பணத்தைப் பயன்படுத்தியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்யலாம்’ என்று வாதிட்டனர்.

இதேவேளை, தலைவரோடு தோளோடு தோள் நின்றபடி களமாடிக்கொண்டிருந்த தளபதிகளும் சண்டைக்களத்தின் கடுமையை நன்றாகவே உணர்ந்திருந்தனர். இந்திய வான்படை குண்டுகளை அள்ளிக்கொட்ட, இந்திய இராணுவம் முற்றுகையை இறுக்கி புலிகளின் அசைவியக்கத்தைத் தடுத்து புலிவீரர்களை மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்தது. இதனால், மணலாற்றுக் காட்டுக்குள் பட்டினியும் - நோயும் - சாவும் போட்டி போட்டுக்கொண்டு, தலைவர் உட்பட புலிவீரர்களை வதைத்தன.

இந்த நிலையில் தலைவரைப் பாதுகாக்க முயன்ற தளபதிகள் மணலாற்றுக் காட்டைவிட்டு வேறிடம் செல்லும்படி தலைவரிடம் வேண்டினர். வேறிடம் செல்வதால் மட்டும் உயிர்ப்பாதுகாப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், தளபதிகளின் வேண்டுகோள்களை ஏற்க மறுத்தார். அந்தக் காடு அடங்கிலும் பரந்து கிடந்த பழைய கால நினைவுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி விட்டுத் தலைவர் சொன்னார், “இது பண்டாரவன்னியன் உலாவித் திரிந்த காடு. இந்தக் காட்டில் இருந்தபடியே நான் போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன்” என்று வைராக்கியமாகக் கூறிவிட்டு, சண்டையை வழிநடாத்துவதிலேயே முழுக்கவனம் செலுத்தினார்.

இவ்விதம் இந்தியாவில் இருந்த எமது மூத்த உறுப்பினர்களும், களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த தளபதிகளும் தலைவரைப் பாதுகாக்கப் பிரயத்தனப்பட்டனர். ஆனால், தலைவரது எண்ணமெல்லாம் தனது சொந்தப் பாதுகாப்பின் மீதோ அல்லது தருவதாக வாக்களிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பணத்தின் மீதோ இருக்கவில்லை, அவரது முழுக்கவனமும் எமது இனத்தின் அரசியல் உரிமைகள் மீதே இருந்தது.

புனர்வாழ்வுக்கான பணத்துடன் மட்டும் நின்று விடாது, அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் எழுத்துமூல உறுதி தரவேண்டும் என்று இந்திய அரசைக்கோரும்படி, பேச்சுவார்த்தை பிரதிநிதிகளிடம் தலைவர் பணித்தார். இந்திய அரசின் சார்பில் அரசியல் பேரத்தை நடாத்திக் கொண்டிருந்த கேணல் வர்மா இதற்கு உடன்பட மறுத்தார். ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள், தமிழ்மக்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்கும் விடயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனப் பதில் கூறினார்.

ஒடுக்கப்படும் இனத்தின் தலைவர்களுக்கு வசதிகளையும் சலுகைகளையும் வாரி வழங்கி அவர்களை வளர்ப்பு நாய் நிலைக்கு ஆளாக்கிவிட்டு அந்த இனத்தின் எழுச்சியை நசுக்குவது அல்லது இதற்கு உடன்பட மறுத்தால் அந்தத் தலைவர்களுக்கு எதிரான அழுத்தங்களைப் பிரயோகித்து அவர்களை அடிபணியச் செய்து, அவர்கள் மூலமாக அந்த இனத்தின் அடிமைச் சாசனத்தை எழுதுவிப்பது அல்லது அழிப்பு வேலைகளைச் செய்து அந்த இனத்தைப் பலவீனப்படுத்திவிட்டு, அதன்மேல் அரைகுறைத் தீர்வுகளைத் திணிப்பது... இவைதான் காலாதி காலமாக ஏகாதிபத்தியவாதிகளும் ஆக்கிரமிப்புச் சக்திகளும் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்த-வருகின்ற சித்தாந்தங்கள் ஆகும்.

ஆனால், இந்த ஏகாதிபத்திய சித்தாந்தங்கள் எதுவுமே, தலைவரிடம் எடுபடவில்லை. சலுகைகளைக் கண்டு வாய்பிளக்கும் தலைவர்களிடமும், தனதும் தனது குடும்பத்தினதும் உயிர்களுக்கு அஞ்சி ஒரு தேசியத்தின் உயிரை அழியவிட விரும்பும் தலைவர்களிடமும்தான், அந்தச் சித்தாந்தம் எடுபடும். படைப்பலத்திற்கு அடிபணிந்து - உயிருக்கு அஞ்சி -தமிழினத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்தார் என்ற வரலாற்று அவச்சொல்லை ஏற்க, தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை.

அதற்குப் பதிலாகச் சாவையும், பட்டினியையும், அழிவையும் ஏற்கவே அவர் தயாராக இருந்தார். தமிழ் இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே தலைவரின் இலட்சியம். அது முடியாவிட்டாலும், ‘எவர்க்கும் அடிபணியாது விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடு’ என்ற செய்தியையே அடுத்த சந்ததிக்குக் கொடுக்க அவர் விரும்பினார். எனவேதான் இந்திய அரசு கொடுத்த அனைத்து நிர்ப்பந்தங்கள், ஆபத்துக்கள் மத்தியிலும் தப்பிப்பிழைப்பதற்கு வழி ஒன்று இருந்த நிலையிலும், தலைவர் அவர்கள் ஆபத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தார் என்பது, எமது இன வரலாற்றில் முதற் தடவையாக நடந்துள்ளது.

இதுவரை நாளும் தமிழினத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் விட்ட தவறு யாதெனில், தங்களுக்கும் தமது குடும்பத்தவர்களுக்கும் வரும் கஷ்டங்களை - ஆபத்துக்களை -நீக்குவதற்கா, இலட்சியத்தை - இனத்தை - எதிரிக்கு விற்றுவிட்டு அதன் பின்னர், அதற்கு நியாயங்கள் கற்பிப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தனர். இந்தப் பழைய அரசியல் மரபுக்கு முரணாக தலைவர் பிரபாகரனின் செயற்பாடு அமைந்திருந்தது. எமது இனத்திற்கு வரும் எந்த ஆபத்துக்குமெதிராகப் போராடி வெல்வது அல்லது அப்போராட்டத்தில் வீரச்சாவடைவதே சிறந்தது என்ற விடயமே இந்தச் சம்பவத்தின் வாயிலாக எதிர்காலச் சந்ததிக்குத் தலைவர் பிரபாகரன் கொடுத்த செய்தியாகும்.

சலுகைகள், பணம் என்பவற்றைக் கொடுத்து இந்தியா எதை வாங்க முயற்சித்தது என்ற உண்மையையும், அதன் அபாயத் தன்மையையும், இந்திய மண்ணில் இருந்தபடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட எமது பிரதிநிதிகளுக்குச் சூசகமாகத் தெரிவிப்பதற்காக, தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவர் இப்படிச் செய்தியனுப்பினார்.

“நான் செத்த பிறகு, யாரென்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ, இயக்கத்தையும் இனத்தையும் யாரிற்கும் விற்கலாம்”.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


விசயனின் வாரிசுகளே இன்றைய .....................!


மகாவம்சமே இது போன்ற சுவாரசியமான நாவல் தான்:> இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள். இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர்.

யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- "இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராசனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார்.

இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள் "இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான்.

இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான். இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான்.

அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள் அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது.

பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள். தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள். வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.

இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள். ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.

குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள்.

மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன. சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?

''இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான். "போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.

இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.

இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.

சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.

இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள். காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.

"சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர். தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, "சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.

படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான்.

பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர். அரசனோ, "சிங்கத்தைக் கொன்றால் என் ராச்சியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான். சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது.

சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது. கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான்.

பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராச்சியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள்.

எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராச்சியத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான். தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான்.

அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விசயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விசயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.

விசயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, "உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.

சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள். வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விசயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான்.


விசயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள். அனைவரும் கரையேறியதும் விசயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள். குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள்.

தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள். ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தை உருவாக்கிக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள்.

விசயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான். குவேனியின் புத்திமதிப்படியே விசயன் இயக்கராசனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான். ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிசியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான்.

அதனால் விசயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள். பாண்டிய மன்னனும் தனது மகளை விசயனுக்குத் தரச் சம்மதித்து, விசயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விசயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விசயன்.


இந்த விசயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்! [பாவை சந்திரன் தினமணியில் எழுதும் ஈழத்தமிழர் போராட்ட வரலாறு- தொடரில் இருந்து...]

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


கோடரிக்காம்புகள் .............!

இலங்கை அரசின் தேயிலை ஏற்றுமதி தொடக்கம், ஆடை ஏற்றுமதிவரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கை எவ்வாறு லாபம் ஈட்டிவருகிறது என்று பலரும் எண்ணலாம். இலங்கைக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தேசிய விமானசேவையைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு கொண்டுசென்று செலவுசெய்யும் பணம், இலங்கையின் அன்னியச்செலாவணியை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்களும் இலங்கைக்குச் சென்றுவருவதை அதிகரித்துள்ளனர்.

இதனால் இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக போர் நடத்த வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைக்க, புலம்பெயர் தமிழ் மக்களே பணத்தைக் கொடுத்து உதவும் நிலை தோன்றியுள்ளது எனலாம்.

இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தல், இலங்கைக்குச் செல்வதை தவிர்த்தல் என்பது போன்ற போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மெல்லமெல்ல கைவிடும் நிலைதான் தற்போது தோன்றியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மானங்கெட்ட தமிழினம் தமக்குள்ள தாமே அடித்துக்கொண்டு இலங்கை அரசின் கடனை அடைப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கிறது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Friday, 6 April 2012

தமிழர்களுக்கே சொந்தம் ............இலங்கை !



தமிழர்களுக்கே சொந்தம் - இலங்கை - சரித்திர உண்மைகள்!

அந்த காலத்து விடுதலையில்......
இலங்கையின் பூர்வீக குடிமக்கள்
தமிழர்களே! சிங்களர்களல்லர்!!

சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன. டாக்டர் ஜி.ஸி.மெண்டிஸ் என்பவர் தாம் வரைந்துள்ள இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலில் இலங்கையின் பூர்வீக மக்கள் வேடர்களேயென்றும், கி.மு. 543 ஆம் ஆண்டில் வந்த சிங்களர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்களென்றும் திட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

அதே புத்தகத்தின் 14 ஆம் பக்கத்தில் சிங்களர்களின் வருகைக்குச் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஆரியத் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுபோல் திரு. கீஜர் என்னும் பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் தம் முடைய மகா வம்சத்தில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் பூர்வீகக் குடிகள் நாகர்களும் இயக்கர்களுமே, சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இவ்விரு வகுப்பைச் சேர்ந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களுள் மணியக்கிகா, மகேதரன், குலோதரன் ஆகிய நாகவம்சத்து மன்னர்களும், குவினி, மகாகல சேனன் ஆகிய யசவம்சத்து மன்னர்களும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.மு.543 ஆம் வருடத்திற்கு முன்பு வரை சிங்களவர்கள் இலங்கைக்கு அந்நியர்களாகவே இருந்தார்கள்.

நாகர்களும் இயக்கர்களும் யார்?

நாகர்கள் என்ற பதத்திற்கும், இயக்கர்கள் என்ற பதத்திற்கும் முறையே சர்ப்பங்களை பூசிப்பவர்கள் பிசாசங்களைப் பூசிப்பவர்கள் என்று பொருள். இலங்கையிலிருந்த புராதனத் தமிழர்கள் சர்ப்பங்களையும் பிசாசங்களையும் பூசை செய்பவர்களாக இருந்து அது காரணமாக இப் பெயர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும். தவிர பண்டைக் காலத்து திராவிடர்களிற் பொரும்பாலோர் வேட்டையாடுவதையே சீவன மாகக் கொண்டிருந்தார்கள்.

சிங்களர் சரிதை என்ன கூறுகிறது?

ஆகையால், வேடர்களென்ற பெயரும் அவர்களுக்கு உண்டாயிற்று. இந்த அபிப்பிராயத்தை திரு.ஜான் எம்.செனிவிரத்னா என்ற பிரபல சரித்திர நூலாசிரியர் தம்முடைய சிங்களர் சரிதை என்ற புத்தகத்தில் ஆதரிக்கிறார்.

அவரும் வித்யானுகூல லங்கா இதிகாசபா என்ற நூலின் ஆசிரியரான திரு.டப்ளியூ.எம்.பெரேராவும் இலங்கை புராதனக் குடிகளாகிய நாகர், இயக்கர், வேடர் ஆகியோர்களைப் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கின்றார்.

நாகர், இயக்கர்,வேடர்ஆகியோர் திராவிட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மணிக்கீகா, மஹோ தரன், குலோதரன், குவினி, ராவணன், மஹாகல சேனன் முதலான திராவிட மன்னர்கள் சிங்களவர்களின் வருகைக்கு முன்னால் இலங்கையை ஆண்டு வந்தவர்கள் ஐரோப்பியர்கள் அபிப்பிராயம்

மேற்படி ஆதாரங்களைத் தவிர டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப்முதலான ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இவ்வாறே கூறியிருக்கின்றார்கள். தமிழர் என்ற தமிழ்ப் பதத்திற்கு திராவிடர் என்பது சமசுக்கிருத மொழிபெயர்ப்பென்றும் ஆகையால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள் தென்னிந்தியத் தமிழர்களே என்றும் அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

இலங்கையைத் திராவிடர்களே ஆண்டார்கள்

சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (இரண்டாம் பாகம்)பேராசிரியர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளையின் இலங்கைச் சக்கரவர்த்தி இராவணன், திரு.வி.பி சுப்பிரமண்ய முதலியாரின் இராமாயண உள்ளுரை திரு.என்.எஸ். கந்தையா பிள்ளையின் தமிழகம் சிறீஜத் சிவானந்த சரசுவதியின் மத விசாரணை அகத்திய மகா முனிவரின் அகத்தியர் இலங்கை சுவாமி வேதாசலத்தின் மாணிக்கவாசர் சரிதை மாணிக்கநாயனாரின் நாவணாசனம் தேவாரம், திருவாசகம் முதலான நூல்களிலும் இதே அபிப்பிராயம் உறுதியாகச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

திராவிட நாகரிகம் பரவியிருந்தது

சிங்களவர்களின் வருகைக்கு முன் இலங்கையிலிருந்த திராவிடர்களின் நாகரிகம் உச்சநிலையை அடைந்திருந்தாதாயும் மேற்படி நூல்கள் சாற்றுகின்றன. இதை திரு.ஜான். எம்.செனிவிரத்னாவும் தமது சிங்களர் சரிதை என்ற புத்கத்தில் ஆதரித்து எழுதியிருக்கிறார்.

இலங்கையை ஆண்ட முதல் சிங்கள மன்னனால் விஜயன் மகாகல சேனன் என்ற திராவிட மன்ன னிடமிருந்து தான் சிங்காதனத்தைப் பெற்றா   னென்பது மேற்படி சரித்திர ஆசிரியர்களின் திட்டமான அபிப்பிராயம். அதோடு இலங்கையை ஆண்ட கடைசி மன்னரும் (கண்டி மன்னர் சிறீ விக்கிரம ராஜசிங்கா) தமிழர்தானென்பதை திரு. பிளேஸ் ஊர்சிதம் செய்கிறார்.

புராதனத் தமிழர்கள் கால்நடையாகவே வந்தார்கள்

இலங்கையின் புராதனக் குடிகள் தமிழர்களே என்பதற்கு இது வரையில் அநேக சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அதே சரித்திர நூல்களில் இந்தியத் தமிழர்கள் முதன் முதலாக இலங்கைக்கு எப்படி வந்தார்களென்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

திரு.அய்.ஸி. மெண்டிஸ் என்பவர் தமது இலங்கை சரிதமும், உலக சரிதமும் என்ற நூலின் மூன்றாவது பக்கத்தில் இது விசயமாக எழுதியிருப்பதாவது:

இலங்கையின் புராதனக் குடிகளான தென்னிந்தியத் தமிழர்கள் கப்பல்களின் மூலமாகவோ அல்லது படகுகளின் மூலமாகவோ இலங்கைக்கு வரவில்லை.

அவர்கள் கால்நடையாகவே இலங்கையை வந்தடைந்தார்கள்.
அவர்கள் வந்த காலத்தில் இலங்கை தேசம் ஒரு தனித்தீவாக இல்லாமல் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இந்தியாவின் ஒரு நாடாக இருந்தது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கு மிடையிலுள்ள கடலில் இப்பொழுது சிதறிக்கிடக்கும் ஆதாம்பாலம் (தற்போது ராமர்பாலம் என்று கதைக்கப்படும் பகுதி) என்பது அக்காலத்தில் உண்மையான நிலப் பாதையாகவே இருந்தது. அதன் மூலமாகத்தான் தென்னிந்தியாவிலிருந்தே வேடர்கள் இலங்கைக்கு நடந்து வந்தார்கள்

முன்னர் இலங்கை கடலினால் பிரிக்கப்படவில்லை.

மேற்படி அபிப்பிராயம் திரு.பி.குணசேகரா வின் ராஜாவளி வித்யானாகூல இலங்கா இதிகாசயா மாணிக்க வாசகர் சரிதைசர் ஸ்காட் எலியட்டின் மறைந்து போன தீவுகள் முதலான மற்றும் பல நூல்களிலும் ஆதரிக்கப்பட்டி ருக்கின்றது.

தவிர, ஈழநாடு எனப்படும் இலங்கை யும் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு (மலையாளம்) முதலான பிரதேசங்களும் கடலினால் இடையில் பிரிக்கப்படாதிருந்தன வென்பதை அநேக ஐரோப்பிய ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

எனவே, மேற்படி ஆதாரங்களிலிருந்தும்

(1) இலங்கையின் பூர்வீகக் குடிகள் இந்தியத் தமிழர்கள் தான்.

(2) அவர்கள் வசித்து வந்த நாட்டில் சிங்களர்களே குடியேறினார்கள்.

(3).சிங்களர்களின் வருகைக்கு முன்னால் இலங்கை தேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலேயே இருந்தது.

(4).அக் காலத்தில் இலங்கை வாசிகளின் (இந்தியத் தமிழர்களின்) நாகரிகம் உச்சநிலையை அடைந்தி ருந்தது.

(5).கி.மு 543 ஆம் வருடத்திற்கு முன்வரை தமிழர்கள் வாழ்ந்து வந்த இலங்கைக்கு சிங்களவர்கள் அந்நியர்களாகவே இருந்தார்கள் என்னும் விசயங்கள் மறுக்க முடியாத சரித்திர உண்மை களாகப் புலப்படுகின்றன. (செட்டி நாடு).

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


Wednesday, 4 April 2012

பிரபாகரனை சூரியனின் ................!



இவர் பிரபாகரனை சூரியனின் அவதாரமாக சித்திரிக்கின்றார்.

இந்த அந்தாதிக்கு பிரபாகரன் அந்தாதி என்று பெயர்.

பத்து பாகங்கள் கொண்டது.

முதல் பாகத்தை படித்து பாருங்கள்.
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டித்துறை* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


தலைவர் பிரபாகரன் தொடர் .................4!


வல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து சதத்திற்கு பிரயோசனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல்கள்). கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு இயந்திர வல்லுநர் (மெக்கானிக்கை) நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து திருத்தம் (ரிப்பேர்) செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த இயந்திர வல்லுநரின் உதவியாளராக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
துருப்பிடித்த கைத்துப்பாக்கிகளைக் கழற்றிப் போட்டு திருத்தம் செய்யும் இயந்திர வல்லுநரின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு இயந்திர வல்லுநர் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, இயந்திர வல்லுநர் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. தேநீர்க்கடைகளின் பின்புறம். புகையிரத பாதை (ரயில்வே லைன்) ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கடினமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விடயம். காவல்துறை (போலீஸ்) தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிறதமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. சாலைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் காவல்துறை தேடிக் கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார். எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கடினம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது விரும்பிய உணவாகி இருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

காவல்துறை தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துர்பாக்கியமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே காவல்துறைக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.
தொடரும்

Tuesday, 3 April 2012

தொல்காப்பியம்


தொல்காப்பியம் அருண்மொழித்தேவர் (தொல்காப்பியர்) பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2.இடைக்காலத்தமிழ்
3.தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
 Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்.

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்.

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Friday, 30 March 2012

தலைவர் பிரபாகரன் தொடர் ..............3!



பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜெகதீஸ்வரியிடம் கேட்டார். ம்கூம். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா? 

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.


திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.


அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விசயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் சுவரொட்டி ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ சுவரொட்டிதானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?


தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோசம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள். 

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

(தொடரும்)

Saturday, 24 March 2012

நோர்வே இழைத்த துரோகத்திற்கு ............!


தமிழ்ஈழத்திற்கும்,தமிழ்ஈழ மக்களிற்கும் நோர்வே இழைத்த துரோகத்திற்காக எரிக்சூல்கைம்மின் அமைச்சர் பதவியைப் பறித்தால் அவருடைய அமைச்சர் பதவி ஒன்றே போனது,

அவரிற்கு எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் அவரிற்கு வேறொரு பதவியையோ அல்லது சிறப்பான உயர்பதவி கூடக் கொடுக்கக்கூடும். அப்படி எவ்வித உயர்பதவிகள் கிடைக்காவிடினும் இதுவரை காலமும் பணியாற்றியதன் ஒய்வுவூதியமாவது மாதாமாதம் பெற்று உல்லாசமாக வாழ்க்கையின் மீதியை இன்பமாகக் கடக்கக் கூடியதாக அமையும்.

ஆனால் அழிக்கப்பட்ட தாயகமும், தமிழிஈழமக்களின் வாழ்வின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கற்பனை செய்து பாருங்கள் ஏதாவது தோன்றுகிறதா?

சமாதானத்திற்கு நடுநிலை வகுக்க முடியாதவர்களிற்கு ஏன் இந்தத் துரோகத்தனம்? எமது தாயகத்திற்கும், தாயமக்களிற்கும் இழைத்த அநீதிக்கு எரிக்சூல்கைமின் பதவியைப் பறித்ததனால் தமிழர் தாயகம், தமிழ்மக்களிற்கு ஏதாவது விடிவோ? இல்லையேல் நிரந்தரத் தீர்வோ கிட்டுமா?

உலகத் தமிழ் உறவுகளே நன்றாகச் சிந்தியுங்கள் இனப்படுகொலையை நடத்தியவனுக்கு எது உலக நீதியாக எந்தத் தண்டனை வழங்கப் படுகிறதோ அதே தண்டனை இனப்படுகொலையை நடத்துவதற்குத் துணைபோன சமாதானத் தூதுவரிற்கும் உண்டு. சமாதானத்தை மேற்கொண்ட நாடான நோர்வேக்கும் உண்டு.

அதைத் தவிர்ப்பதற்கான கண்துடைப்பே எரிக்சூல்கைமின் பதவிப் பறிப்பு நாடகமாகும், இது உலகையும், புலம்பெயர் தமிழர்களிற்கும் ஒரு கண்துடைப்பு வேடம், அனைவரையும் ஏமாற்றுவதன் ஊடே தங்கள் பக்கம் அனுதாப அலையை ஏற்படுத்துவதற்கான பெரிய கபட நாடகமேயாகும்.

சமாதான விரும்பிகள் என உலகை ஏமாற்றி சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கும் நோர்வே இப்படியான துரோகங்களைச் செய்து கொண்டு எப்படி நடுநிலையோ இல்லையேல் சமாதானத்திற்கான பரிசை சமாதானத்திற்காக உழைத்தவரிற்கு நேர்மையாகக் கொடுக்க முடியும்?

என்பதை மனதிற்கொண்டு தமிழ்ஈழத்தாயகம் , தமிழ்ஈழ மக்களின் விடிவு, நிரந்திரத்தீர்விற்கான முயற்சியில் உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

குமரிக்கண்டமுLம் அதன் எல்லைகளும் 


பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,

இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 2.
மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 3.
வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 4.
தொலை கிழக்கில் – சீன நாடு 5.
கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 6.
தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.

இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!



குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்.

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது 2.
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது 3.
3.மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது 4.
4.நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Thursday, 22 March 2012

ஈழம் எனும் பெயர் முழு தீவையும்...........!



இலங்கை அல்லது ஈழம் எனும் பெயர்கள் இரண்டுமே முழுத் தீவையும் குறிக்கும் பெயர்களாகும்.தமிழீழம் என்பது தீவின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகளை மட்டுமே குறிக்கும்.

இலங்கையின் ஆரம்ப காலப் பெயர்களும் தமிழ்ப்பெயர்களே தாமிரபரணி(தப்ரபேன்).ஆரம்பகாலத்தில் அங்குள்ள மக்கள் "எல்"(சிறந்தது)(எலு-திரிபு ) பேசிய மொழி பிரிவுர்றன "சிங்க-எல(சிங்கல>சிங்கள)" & "தமிழ்".ஆங்கிலேயர் ஆட்சியின் பின் தீவின் (*சிலோன்)பெயரினை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது தமிழர்கள் "எல்(எல>எழு>ஏழு>ஈழு>ஈழம்)" இன் திரிபான "ஈழம்" அல்லது "எல்"("எல்"என்றால் சிறந்தது,புகழுக்குரியது,வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.) ஐ ஒத்த இலங்கு (விளங்குதல்/இன்னொரு பழைய பெயரான இலங்காபுரி இலங்கு=ஒளிரும்,புரி, புரம்=வசிக்கும் இடம் நகரம்/நாடு)+கை=இலங்கை எனும் பெயர்களை முன்மொழிந்தனர்.

அதேநேரம் சிங்களவர் இலங்கையை ஒத்த(இ)லங்கா(தமிழ் பெயரான இலங்கு என்பதன் திரிபான)என்றனர். பின்னர் ஆங்கிலப் பெயராக லங்கா என்பது ஏற்கப்பட்டு அதனுடன் "திரு" ஒத்த வடமொழி முன்னோட்டான சிறீ ஐ சேர்த்து "சிறீலங்கா"=Sri Lanka"எனப்பட்டது.


வரலாற்று அறிஞர் திரு ந.சி.கந்தையாபிள்ளையும் தென்புலோலியூர் திரு மு.கணபதிப்பிள்ளை,பழந்தமிழர்.(பக்கம் 18-19)

இன்றைய இலங்கையின் தேசிய கீதத்தில் கூட ஈழமணி திருநாடு என்றே குறிப்பிட்டுள்ளது.

சிறீலங்கா தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் போலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறிதுணிவருளே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமொதோர் ஒளி வளமே
நறியமலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

(1950ஆண்டு இதை தமிழ்ப் புலவர் பண்டிதர் திரு மு.நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயத்தார்.)

ஆனால் அறிஞர்கள் கி.மு 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும்,இயக்கர்களும் வாழ்ந்தார்கள்.இயக்கர்களால் பேசப்பட்ட "எலு" மொழி கொடுந்தமிழாக இருந்தது.

அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விசயனின் "லாலா" நாட்டு மொழியுடன் இயக்கர்களின் "எலு" மொழியும் சேர்ந்து "சீகளம்" என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கின்றார்கள்.

எல்:-(பெயர்ச்சொல்)= ன்
ஒளி, சூரியன், வெயில், பகல், நாள், இரவு, பெருமை, இகழ்மொழி இடைச்சொல் 
எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
எற்படக்கண்போன் மலர்ந்த (திருமுரு.74)
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170) எல்வளியலைக்கும் (அகநா.77)
எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி.8)

(இலக்கணப் பயன்பாடு)பார்க்க> http://dsal.uchicago.edu/cgbin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D&matchtype=exact&display=utf8)

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.



Tuesday, 20 March 2012

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோக........!


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கியபிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது. சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது. மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர். மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது வொரு கண்ணீர் அத்தியாயம். சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன. குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுரையில் கவனித்தனர். சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனா. இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழ்ஈழ தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday, 17 March 2012

சிதைக்கப்படும் என்று தெரிந்தும்.......!



சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
கனவில் தினம் தினம் ஒரு மாளிகை
கட்டி முடிக்கிறது மனம்.

கண்கள் மூடிய உறக்கத்திலும்
காட்சிப்பிழைகள்.

கருவில் சுமப்பது வெறும் கல்
என்பது தெரியாமல்
கற்பனை திரை எதற்கு ?

அழும் மேகம் அறியுமா ?,,
விரிசல் விழுந்து வீனைய்ப் போன
கரிசல் காட்டு பூமியை மட்டுமே சிலிர்க்க
வைக்கும் சத்தியம் ?

தூரத்தில் தூறல் என்று
நாவரண்டு ஓடுகிறாய்
அந்த கானல் நீருக்காக !

விதை விருட்சமாக அது காலக் கணிதத்திடம்
பதில் சொல்லியே ஆகா வேண்டும்,
ஆனால் காத்திருக்காத நீரோடைகள் சங்கமித்து
காட்டாறாக மாறி காலத்திற்கு கட்டளையிடலாம் !


மழைத்துளி கூட முத்தாகும்,
விடம் கூட மாணிக்கமாகும்,
கற்கள் கூட அதிசயப் பொருளாகும்.
அது செல்லும் பாதை சொல்லும் முடிவுரை.

போராடு தோழமையே !
சரியான பாதையில் !
சரியான நேரத்தில் !

உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.