"உலகம் தமிழ்மயம்" உலகத்தமிழ் இனத்தின், தமிழ் ஈழத்திற்கான குரலாக, "தன்மானத் தமிழராய் ஒன்றிணைவோம்!"
Friday, 18 May 2012
ஐநா தூதுவராக எரிக்சொல்கைம்..............!
நோர்வே நாட்டிற்கான ஐநா தூதுவராக எரிக்சொல்கைம் நியமிக்கப்பட இருப்பதாக நோர்வே அரச வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
சிறீலங்காவிற்கு எதிரான ஆப்புக்கள் கண்ணுக்கு தெரியாமல் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன.
01. பிராந்திய பூகோள நலன்கள் என்பதும் சர்வதேச உறவுகள் என்ற இராஜதந்திர உறவும் அரசுகளால் இராஜதந்திரிகளால் கையாளப்பட்டாலும் வேறு சில புறக்காரணிகளால் உருமாறும் வாய்ப்பு கொண்டவை. அதாவது "எங்கோ தேள் கொட்ட வேறு எங்கோ நெறி கட்டியதாம்"; என்ற பதத்திற்கு ஒப்பானது. எரிக்சொல்கைம் எமக்கு ஆதாரவான ஒருவர் அல்ல. ஒரு வகையில் பார்த்தால் எமது அழிவிற்கு காரணமான மேற்கின் தூதுவர் என்று கூட வர்ணிக்கலாம்.
ஆனால் மே 18 இற்கு பிறகு அவர் நடந்து முடிந்த போரின் ஒரு சாட்சியாக சிங்களத்திற்கு தலையிடியான ஒருவராக இருக்கிறார். அவர் அண்மையில் பதவி இழந்தது சிங்களத்திற்கு மகிழ்வை கொடுக்க அது ஐநா துதூவர் என்ற வேறு ஒரு விபரீத வடிவமாக மாறியிருக்கிறது. அவர் விரும்பியோ விரும்பாமலோ சிறீலங்கா தொடர்பான ஐநா விசாரணைகளில் முன்பைவிட கூடுதலாக பங்கெடுக்க வாய்ப்பிருக்கிறது.
02. சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் உள்ள ஒரு பேராசிரியர் என்னிடம் பேசும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அமெரிக்கா சொல்கைமிற்கு உள்ளுரில் கட்சி மட்டத்தில் உள்ள கருத்து வேறு பாடுகளை கணக்கில் கொண்டும், நோர்வே தூதுவர் பதவிக் காலம் முடிவதை கணக்கில் கொண்டும், தாம் தொடர இருக்கும் சிறீலங்கா விவகாரத்தை தொடர்ந்து கையாள பொருத்தமான நபர் வேண்டுமென்ற கணக்கிலும் சில காய்களை நகர்த்தி சொல்கைமை இந்த பதவிக்கு கொண்டுவர முற்படுவதாக குறிப்பிட்டார். பாருங்கள் இராஜதந்திர பகடையாட்டத்தை..
03. புலிகள் அழிக்கப்பட்டது கூட இலங்கை, இந்திய, மேற்கு நாடுகளின் இந்தவகையான கூட்டு பகடையாட்டங்களின் விளைவாகத்தான். ஆனால் தற்போது அது சிங்களத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. எப்படி காய் நகர்த்தியும் சிங்களத்தால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. மாறாக இன்னும் மேலதிக சிக்கல்களை பின்னியபடியே இருக்கிறது.
04. எதிர்பாரத சிறிய நிகழ்வுகள் பெரிய விளைவை தரும் என்பது சர்வதேச உறவுகள் சொல்லும் பால பாடம். எரிக்சொல்கைமின் ஐநா பதவி அப்படியான ஒன்று..
உதாரணத்திற்கு இன்னும் சில,
சிறீலங்காவிற்கு எதிரான ஐநா தீர்மானம், அதற்கு விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஆதரவளித்தமை, வெள்ளைவான் கடத்தல்களில் அரசுதான் ஈடுபடுகின்றது என்பதை குமார் குணரட்ணம் கடத்தலூடாக அம்பலமாகியமை, இந்துக்கோயில்களை இடித்த அரசு நேற்று பள்ளிவாசல்களையும் இடிப்பதாக ஐநா வரை செய்தி வந்துள்ளமை, மகிந்தர் ஈரானிய அணுஆய்வுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தமை, தமிழக ஆளும்கட்சியான அதிமுக இலங்கை விஜயத்தை புறக்கணிப்பதும் அது மட்டுமல்ல "இந்தியா எதிரி நாடு எம்மை ஒன்றும் புடுங்க முடியாது" என்று சொல்லும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, "ஊடகவியலாளர்களின் அடித்து நொருக்குவே"ன் என்று சொல்லும் அமைச்சர் மேர்வின் சில்வா, தனது சுயநல நோக்கில் தமிழின அழிப்புக்கு துணைநின்ற கருணாநிதி இன்று" தமிழீழம்தான் தீர்"வு என்று அறிக்கை போர் நடத்துவது கூட இந்த பகடையாட்டத்தின் ஒரு தொடர் வலைப்பின்னலே..
இது என்ன சொல்கிறது என்றால், அதாவது சில ஆப்புக்களை சிங்களமே தனக்கு எதிராக தயார் செய்கிறது. சில ஆப்புக்களின் மேல் தேடிப்போய் தானே உட்காருகிறது. எரிக் சொல்கைம் ஆப்பு பழசு என்றாலும் வடிவம் புதுசு. போதாததற்கு மேற்சொன்ன ஆப்புக்ளின் மேல் நம்பிக்கையில்லாமல் பிரபாகரனின் "பிள்ளைகள்" வேறு சில ஆப்புக்களை தயார் செய்து கொண்டிருக்கிறம். அது சிங்களத்திற்கு இறுதி ஆப்பு.
பிற்குறிப்பு; எரிக்சொல்கைம் யாரிற்கு ஆப்பு அடிக்க இறக்கிறார் என்பது காலத்தின் பதிலேயாகும்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..
Thursday, 17 May 2012
யார் யாரிற்குத் தண்டனை...............!
அகிம்சாவாதிகளும், ஆயுத உற்பத்தியாளர்களும், ஆதிக்க வேறியர்களும், சமாதான விரும்பிகளும், சமாதானத்திற்காக நோபல் பரிசு கொடுத்தோரும், உலகின் நலன்களிற்கு முன்னோடிகளும், தமக்ககுள் பிராந்திய போட்டியில் ஈடுபட்டோரும்,
ஆயுதக் கிளர்ச்சியினால் தங்கள் இன, நாட்டின் விடிவைக் கண்டவர்களும், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் பல அடைமொழிகளைத் தமது நாட்டின் பெயரிற்கு முன் வைத்திருந்த அனைத்து உலகமுமே!!!
நன்கு திட்டமிட்டு, காலக்கெடு கொடுத்து அரங்கேற்றியதே தமிழ் ஈழத்தாயகத்தின் அழிப்பும், தமிழ் இன ஒழிப்புமாகும்.
இவற்றை விமர்சிக்க வார்த்தைகளே இல்லையெனலாம், யார் யாரிற்கு விடிவைத்தேடித் தருவது அனைத்துமே கண் துடைப்பெயன்றி வேறோன்றுமில்லை.
யார் யாரிற்குத் தண்டனை கொடுப்பது, அப்படி தண்டனை கொடுப்பது "தற்கொலைக்கு" ஒப்பானதே! உலகில் சிதைக்க்க்கப்பட்ட இனத்திற்கு உதாரணம் "தமிழ் ஈழத்தாயகத் தமிழர்கள்"!. தமிழ் ஈழத்தாயகத்தில் சிதைக்கப்பட்ட பெண்களிற்கான வரலாற்றிற்கு உதாரணம் "இசைப்பிரியா".
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..
Wednesday, 16 May 2012
தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக்...................!
சிங்களவன் யார் - என்பதை விளக்குகிறார் நடராசன் ஆவேசமாக ! தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக் குடி மக்கள் !!
யார் அந்த சிங்கள அயோக்கியர்கள் ??
இன்றைய நம் தமிழகத்தில் ..ஈழத்திற்கு குரல் கொடுப்போர் பட்டியலில் " திரு வைகோ வில் தொடங்கி , நெடுமாறன் , சீமான் "அவர்ளின் வரிசையில் அரசியில் நிழல் மனிதர் என்று கூறப்படும் நடராசன் ஓர் முக்கியமானவர் என்று கூறினால் அது தவறல்ல
அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராசன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க வின். மூத்தவர்கள் பலருக்கே புரியாத புதிர்.
எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராசனின் கொள்கை. ஆனால் ஈழப்பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர்.
கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரசாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டித் தீர்த்தார்...
"ஈழப் பிரச்னைக்குள் போகும் முன்பு, முதலில் ஒரு வரலாற்று உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை என்பது லெமூரியா கண்டமாக தமிழகத்துடன் இணைந்திருந்த பகுதிதான். கடல்கோள் காரணமாகவே அது பிரிந்து, இடையில் நீர்ப்பரப்பு உருவாகி விட்டது. தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக் குடி.
அப்படியானால், சிங்களர்கள் யார் என்று கேட்கிறீர்களா? 7_ம் நூற்றாண்டில் ஒரிசா பகுதியிலிருந்து கிளம்பிய `களப்பிரர்கள்' என்று சொல்லப்படும் கடற்கொள்ளையர்கள்தான் அவர்கள்.
இன்றளவும் அவர்கள் மொழியில் சமசுக்கிருதம் கலந்திருப்பதை நீங்கள் காணலாம். நாளடைவில் அவர்கள் அங்கு பெருமளவில் குடியேறி, பூர்வீகக் குடியான தமிழ் மக்களை இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்களாக்கி விட்டனர்.
அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட கருப்பு இனத்தினர், இன்று அங்கு ஆட்சி பீடத்தையே பிடித்து விட்டனர். ஆனால் இலங்கையில், ஆண்ட தமிழினம், வீழ்ச்சியடைந்து கிடக்கிறது.
இதில் பெரிய சோகம், உரிமைக்காக அவர்கள் போராடுவதை இங்குள்ள சிலரே, `தீவிரவாதம்' என முத்திரை குத்துவதுதான்.
ஒரு இனவெறித் தாக்குதலில் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க தங்களை முன் நிறுத்துபவர்களை எப்படி தீவிரவாதிகளாகச் சொல்ல முடியும்?. அவர்கள் போராளிகள் அல்லவா?
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கறுப்பர் இனத்தவருக்குள்ளேயே இரு உட்பிரிவுகளுக்குள் மோதல்! அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. தனது படையைக் கொண்டுபோய் நிறுத்துகிறது.
ஏன் இலங்கையில் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?. காரணம், இந்தியா! இவர்கள் இன்னொரு நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டார்களாம்.
இலங்கை தமிழர்களின் நாடு ...அதன் மூத்த குடி மக்கள் தமிழர்களே என்ற உண்மையை இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டும் .
அந்த எழுச்சி ஒன்று மட்டும் இங்கு உள்ள அணைத்து தமிழர்களின் மனதில் இருந்தால் தமிழ் ஈழம் மிக எளிதாக பெற்றுவிடலாம் என்கிறார் திரு நடராசன்.
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..
20,000 வருடங்களின் முன்னைய ...............!
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது. ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கின்றது.
இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ்க் கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்
"குமரிக்கண்டம்".
ஏழு தெங்கநாடு,ஏழு மதுரைநாடு,ஏழுமுன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரை நாடு, ஏழு குரும்பனை நாடு என இங்கு நாற்பத்தியொன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரரின் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகத்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்.
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
வரலாற்றுத் தேடல் தொடரும்...
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
Monday, 14 May 2012
Sunday, 13 May 2012
Saturday, 12 May 2012
உலக சனநாயகத்திற்கே அடித்தளம் ..................!
உலக சனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !
சனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !
சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த ஞாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ?
தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம்!. கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.
சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர், திரு. வைத்திய கலாநிதி (டாக்டர்). நாகசுவாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும்.
இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால்
யார் தேர்தலில் நிற்க முடியும்?,
யார் நிற்க முடியாது?,
அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?
தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும்?
தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும்?
என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..
அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் "தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம்" !!!.
பல்லவ மன்னன் "நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது.. இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை "சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சம்புவர்யர்கள், விசய நகர அரசர்கள், நாயக்கர்கள்" என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
இந்த இடத்திற்கு "ராசேந்திர சோழனும்", "கிருசு(ஷ்)ணா தேவராயரும்" வந்துள்ளனர்! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள், ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!
இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி, இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு "அம்மா" வரை இந்த பட்டியல் நீள்கிறது!!.
இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
உ.ண்மையை உங்களது வருங்கால................!
தமிழ் மக்களே !.உ.ண்மையை உங்களது வருங்கால சங்கதிகளுக்கு சொல்லுங்கள் !
இராவணன் கொடியவன் அல்ல இராவணன் போல் தமிழ் அரசன் வையத்தில் எவரும் இலர் .. பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல ....
இந்த புகழ் அரசனை கொடியவன் என்ற கூறினால் அது இந்த அரசனுக்கு .,... நாம் செய்த, செய்கின்ற, செய்யபோகிற துரோகம் .....!!!! மக்களே
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
உலகெங்கும் தமிழ் மொழிபரவ ...................!
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக
ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
என அவை அமைந்துள்ளன.
இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.
இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20) என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.
"செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரி
வளியிடை வழங்கா
வழக்கறு நீத்தம்." (புறநா - 365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி.
புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?
"நிலமிசை வாழ்வர்
அலமரல் தீர தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு
கொட்கும் அவிர்சடை
முனிவரும் மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து,
"புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும்.
மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,
"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,
"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்" என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.
முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.
முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.
கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும் !.
"அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும்"!.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
Friday, 11 May 2012
இந்தியா முழுவதும் தமிழே..........................!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.
"1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.
"குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன.
தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.
அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.
அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக…
"தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.
அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.
ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.
தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை.
அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை. அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம் என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.
உலகச்செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட வைத்தால் அது தமிழுக்கு அளப்பரிய பெருமை சேர்க்குமே!
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
6000 ஆண்டுகளுக்கு............................!
தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள்.
இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது.
வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.
இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது.
இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..
கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது.
இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான்.
அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.
14 ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர்.
இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன.
இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது.
நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டு
1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர்.
தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், புலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
20 ஆம் நூற்றாண்டு
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, சென்னை மாகாணம் சென்னை மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் சென்னை மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.
1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
Thursday, 10 May 2012
அற்ப தமிழர்கள் எவரேனும் ...............!
நாம் யார் ?
எங்கே நம் மக்கள் தவறு செய்தனர் ??
எப்படி சொந்த நாட்டை இழந்தோம் ???
என்று அறியா அற்ப தமிழர்கள் எவரேனும்
ஒரு தமிழர் !
அறியா இருக்குமாயின் எந்த கடவளும்,
எந்த தலைவர்களும்
போராடினாலும் உயிர் நீத்தாலும்
பயனில்லை !
எங்கே நம் மக்கள் தவறு செய்தனர் ??
எப்படி சொந்த நாட்டை இழந்தோம் ???
என்று அறியா அற்ப தமிழர்கள் எவரேனும்
ஒரு தமிழர் !
அறியா இருக்குமாயின் எந்த கடவளும்,
எந்த தலைவர்களும்
போராடினாலும் உயிர் நீத்தாலும்
பயனில்லை !
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
இந்தியாவும் ஈழமும்....................!
இந்தியா,தமிழீழம் வரைபடம்
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
யாழ்ப்பாணத்தின் ஆண்ட சங்கிலி மன்னன்
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
சத்யாகிரக போராட்டத்தில் தந்தை செல்வா
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முதல் பகுதி
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார்.
மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
வங்க தேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சீனா இராணுவத்துடன் கொலைவெறியன் கோத்பாய
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது.
ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழீழ விடுதலை ஒன்றே வழி
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல
இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம்
தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
தனிநாயகம் அடிகள்..............!
தனிநாயகம் அடிகள்
யாழ்ப்பாணம்) உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.
ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
ஆசிரியப் பணி
தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்ப் பணி
கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. "தமிழ்க் கல்ச்சாரம்" (Tamil Culture) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.
தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்
மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மறைவு
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்றதனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
தனிநாயகம் அடிகள் பற்றி காரையூர் நா பொன்னையா
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் எமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்ப்னவ்ற்றை உலகிற்கு பறைசாற்றி வந்துள்ளார் என்பதை தமிழர்களாகிய நாமறிவோம்.
"தமிழ்க் கலாசாரம்" என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர்,
இசுலாமியர், கிறிசுத்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைசுணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும்.
ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அராய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். பிதா தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
Wednesday, 9 May 2012
அவனொரு தமிழன் என்றே .................!
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்! அவனொரு தமிழன் என்றே அடையாளம் காட்டுங்கள்!
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், வள்ளுவர் பிறந்த நாள் விழாவின் போது தூய தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு 1,500 வெள்ளி பரிசாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் கிடைக்கும் போது குடவோலை மூலம் பரிசாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இந்த ஆண்டு (தி.ஆ.2043) நடத்தப்பட்ட போட்டிக்கு 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் 28 பெயர்களே தனித்தமிழ் வரைவிலக்கணத்துக்கு அமைய இருந்தன. எஞ்சிய பெயர்கள் வட மொழிப் பெயர்களாகவோ அல்லது பெயரில் பொருளோ, இனிமையோ இல்லாமல் இருந்தன. அந்தப் பெயர்களில் சில பின்வருமாறு.
அரிணி, ஓவியா, தாமிரன், கவிநயா, ஆரன், தணிகா, சுஜேன், அவனி, மிதுசா, மாதினி, காவியா, காவியன், தாரகன், அகரன், கவிநயன், கார்த்திபன், கவின், சங்கவி, நிவேதினி, அகிலன், ஈசன், ஆரன், புகழாளன், மாதினி, காவியா, தாரகன், கார்த்திபன், சிறிலக்ஸ்மனா, மாதுனம, அஞ்சலி, ஒவியா, செல்வாகினி, ஒளிமயன், ஆரபி, நர்த்தகி, கார்த்திகன், கங்கா, தாமிரன், கவீஸ், அரினி.
இந்தக் காலத்தில் பெரும்பான்மைத் தமிழ்ப் பெற்றோர் கிரந்த எழுத்துக்களான ஷ், ஸ், ஜ, ஹ, ஸ்ரீ இடம்பெறும் பெயர்களை விரும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். காரணம் அதனைப் புதினம் அல்லது நாகரிகம் என நினைக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு வட மொழிப் பெயர் எது தமிழ் மொழிப் பெயர் எது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்கள் எனக் கருதி வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து விடுகிறார்கள்.
கஜன், டிலஷ்சனா, டிலக்க்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, சுரேஷ், சுரேஷி, வர்ஷன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.
வடமொழியாளர் (சமற்கிருதம்) உயிரை அச்சு, சுரம் எனவும் மெய்யை அல், வியஞ்சனம் எனவும் கூறுவர். ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும். அமலம், கமலம், காரணம், குங்குமம் பொது எழுத்தாலாகிய தற்சம மொழி.
ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகித் திரிதல் முதலிய விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்பவம் எனப்படும். சுகி, போகி, சுத்தி. இவை சிறப்பெழுத்தாலாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி.
அரன், செபம், ஞானம், அரி. இவை பொதுவும் சிறப்புமாகிய ஈரெழுத்தாலுமாகி விகாரம் பெற்றுத் தமிழில் வந்து வழங்கும் தற்பவ மொழி. ஹரன் அரன் ஆகவும் ஜெபம் செபம் ஆகவும் ஞான் ஞானம் ஆகவும் தமிழில் வரும். (நன்னூல் - நல்லூர் ஆறுமுகநாவலர் உரை)
ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் அறிவு, ஞானி என்றால் அறிவாளி, வடமொழி தேவபாடை என்று கற்பிக்கப் படுவதால் ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாகத் தமிழ்மக்கள் நினைக்கிறார்கள். ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று எழுதப்பட்டதை படிக்கும் போது அதில் மிகப் பெரிய தத்துவம், புனிதம் பொதிந்திருப்பதாக தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதையே அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள் என்று படித்தால் ஏதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான். ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்கள் குழந்தைகளுக்கு அறிவாளி என்றோ, பேரறிவாளன் என்றோ பெயர் வைக்கப் பின்நிற்கிறார்கள்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொருள் மயக்கம் காரணமாக கமலம், அரன், ஞானம், அரி எனப் பெயர் வைக்கிறார்கள். அவை வடமொழிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நடத்திய தூய தமிழ்ப் பெயர் போட்டியில் வெற்றி பெற்ற தூயதமிழ்ப் பெயர்கள் கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன் மற்றும் சேயோன். தூய தமிழ்ப் பெயர்களாக இருந்தும் பரிசு பெறத் தவறிய பெயர்கள் செங்கோன், தமிழ்ச்செல்வன், ஆரூரன், தாமரை, புகழாளன், ஈழன், தாயகன், இனியவன், போன்ற பெயர்கள்.
நாகரிகம் அடைந்த காலம் தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே எனத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ்ப் பெண்ணைப் போல இருக்கிறதே என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், இவையாவும் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும். முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள்.
தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர் வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன ஆரியமயப் படுத்தப் பட்டன.
கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், இராஜவர்மன், இராசராசன், குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கள் ஆகின. முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது. மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆனது.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவலரேறு புலவர் பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வடமொழிப் பெயர்களை நீக்கித் தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப் பெற்றது. குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப் பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி - அடிகள், வேதம் - மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன் - பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி - கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும் கிருஷ்ணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன் எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களைச் சங்க காலப் புலவர்கள் மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.
ஈராண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப் பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை இராமசாமியின் பெயரைத் தொல்காப்பியன் என மாற்றினார்.
அண்மைக் காலம்வரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி, கனிஷ்ட, சிரேஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ், ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள், உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என மாற்றப்பட்டு விட்டது.
தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது. தமிழ்நாட்டில் பிறப்பதால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக (Heritage) வருவதனால் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் மீது பற்றுதல் வேண்டும். தமிழ் மீது தாகம் வேண்டும். அவ்வாறு இருப்பவனே தமிழன்.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. தலைவர்கள், புகழ் பெற்றவர்கள், குடும்பத்தின் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அருகி வருகிறது. பேரன், பேத்தி என்று சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தானே!
தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு விழுக்காடுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவது காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.
(2) தூஷிகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷித்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷிகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்கள் வழியாகவே தூஷிகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக் கொள்ளலாம். பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிஷன், மகிஷா என்ற பெயர்கள் ஆகும். மகிஷம் என்பது எருமை எனப் பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். தன்மானத்தையும் இனமானத்தையும் இழப்பதாகும்.
தமிழர்கள் தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிகிறார்கள். அவர்களுக்குத் தமிழின் தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரிவதில்லை. தமிழ் எது வடமொழி எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தற்காலத் தமிழர்கள் பஞ்சாங்கம், சோதிடம், எண் சாத்திரம் பார்த்து பல்வேறு மொழிகளில் பொருள் இல்லாமலோ, தெரியாமலோ பெயரிட்டு விடுகின்றனர். இன்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்லும் சோதிடர்கள், எண் சோதிடர்கள் மேல் மக்களுக்கு கூடி வரும் நம்பிக்கைக்கு இதற்குக் காரணம் ஆகும். இன்னும் சிலருக்குத் தங்கள் பெயர்களில் கிரந்த ஒலிகள் வரவேண்டும் என்ற தீராத மயக்கம் இருக்கிறது.
தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட, ண, ற, ண, ன, ர, ல, ழ, ள என்ற வரிசை எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், கலைமகள், பூமகள், தமிழ்ச்செல்வி, கோதை, பூங்கோதை, மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன் போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.
தமிழ் இலக்கணப் படி ஆண்களின் பெயர்கள் "அன்" "அர்" விகுதியிலோ, �அம்� விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கம்பன், வள்ளுவன், இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன். பெண்களின் பெயர்கள் "இ" விகுதியிலோ, "ஐ" "அள்" விகுதியிலோ முடிய வேண்டும். எடுத்துக்காட்டு கண்ணகி, வாணி, குந்தவை, கோதை, கலைமகள், திருமகள், நாமகள். அப்படி முடிந்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அர்த்தம் புரியாத வேறு மொழிகளில் பெயர்களை வைக்காது, எமக்குப் புரிந்த தாய்மொழியாம் செந்தமிழில் அழகான அர்த்தமுள்ள பெயர்களை வைப்பதே எங்கள் சந்ததியினரையும் தமிழராக அடையாளப் படுத்தமுடியும் என்பது எனது தயவான வேண்டுகோள்.
தூயதமிழில் பெயர் தெரிவு செய்வதற்கான இணைய முகவரி இத்துடன் இணைக்கின்றோம் அனைவரும் பயன் பெறுக.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.
Subscribe to:
Posts (Atom)


















