Sunday 29 April 2012

தமிழனின் வரலாறு அழிவுறும்................!

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியாவில் இருந்து தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் இராசராசசோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் என இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை. இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.


தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்..!


உலகில் தமிழனின் வரலாறு அழிவுறும் நிலையில் இருப்பதற்குக் காரணமே தமிழர்கள் இழைத்த தவறேயன்றி வேறொன்றுமில்லை, ஏனெறால் தமிழர்கள்தான் தன்குலப் பெருமையைக் கொண்டுள்ள அனைத்து வரலாற்றுச்சிறப்பு, வரலாற்றுச்சுவடுகளையும் பராமரியாதும், அதற்கான மதிப்புமளியாது தன்னலத்தொடு உலகில் வாழுகின்ற ஒரேயொரு இழிவான இனமாகக் காணப்படுகின்றனர்.


இந்நிலையை மாற்றியமைத்து தமிழின், தமிழரது வரலாற்றின் பெருமைகளை பேணிக்காப்பதுடன் தமிழை அழிவிலிருந்து மீட்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வருமாறு வேண்டுகின்றேன்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.