Sunday 8 January 2012

தமிழ் உணர்வு!........

இன்று தொப்பையையும் நோயையும் குறைக்கத் தமிழர் படும்பாட்டைப் பார்த்தால் வேதனையாகவுள்ளது. தமிழர் வாழ்வில் வந்தவர்களும் ஆண்டவர்களும் பல மூடப்பழக்க வழக்கங்களை விதைத்துவிட்டார்கள். 




ஆன்மீகத்தில் மட்டுமன்று உணவுப் பழக்கவழக்கத்திலும் நாம் நம்முயர்வான பழக்கவழக்கங்களை கைவிட்டு விட்டோம் என்பதை நம்மவர் உணர்வதில்லை என்பது வேதனையானது. 

தமிழ் தனியே மொழிமட்டுமல்ல. அது கட்டற்ற அறிவுக்களஞ்சியம். இன்று எத்தனையோ இலட்சம் ஓலைச்சுவடிகள் அழிந்தவண்ணம் உள்ளன. பெருமைக்காகச் சொல்லவில்லை. எம்மிடம் எதுவில்லை?!




எமக்கான தனித்துவ மருத்துவமான பிணியனுகாச் சித்தமருத்துவம், ஆயகலைகள், துறைசார் அறிவியல்கள், மனிதம் வளர்க்கும் ஆன்மீகம் இன்னும் எண்ணிலடங்கா கட்டற்ற களஞ்சியமாகவுள்ளது தமிழ்.

ஆனால், நாமோ இவற்றையெல்லாம் தொலைத்து நாடுமிழந்து கலை, கலாச்சாரம், வீரம் இழந்து நட்டாற்றில் அடுத்தவர் நமக்குச் சொல்வதையே வேதவாக்காக நினைத்து நம்மை இழந்து வருகிறோம்.




இந்தப் பதிவுத் தொடரில் நம் பழந்தமிழர் உணவுப்பழக்கம் என்ன? அவற்றின் பயன்பாடு என்ன? போன்றவற்றை ஆராய்வோம். நீங்களும் தாங்கள் அறிந்ததைப் பகிரலாம்.





தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.