Thursday 14 June 2012

12 சுவிஸ் தமிழர்களை இலங்கைக்கு ....!

புலிகளுக்கு உதவிய 12 சுவிஸ் தமிழர்களை இலங்கை கொண்டுசெல்ல திட்டம் ?


சுவிஸ் நாட்டில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழர்களை இலங்கை கொண்டுசென்று விசாரிக்க, அந் நாட்டுக் காவல்துறையினர் (The Police) முடிவெடுத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரில் சிலரை நெதர்லாந்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திவிட்டு, பின்னர் அவர்களை இலங்கை கொண்டுசென்று விசாரணை நடத்தவுள்ளதாக சுவிஸ் குற்றத்தடுப்பு காவல்துறையினர்  மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள சிறையில் அடைபட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலர் முன் நிலையில் இவ்விசாரணை நடைபெறும் எனவும், இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது கைதாகியுள்ள 12 தமிழர்களும், போலியான பத்திரங்களை காண்பித்து வங்கிகளில் கடனைப் பெற்று, அப்பணத்தை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கை கொண்டுசென்று ஏன் விசாரிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட நபர்களை, இலங்கை அதிகாரிகள் பார்த்தால் அவர்களின் குடும்பங்களுக்கு கடும் அச்சுறுத்தல் நேரலாம், என்று சுவிஸ் காவல்துறையினருக்கு மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இலங்கை அதிகாரிகள் பிரசன்னமாகாமல் தாம் பார்த்துக் கொள்வதாக சுவிஸ் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும் சுவிஸ் காவல்துறையினரின் இந் நடவடிக்கை, மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் உள்ளது. விடுதலைப் புலிகள் யுத்தரீதியாக வெற்றி கொள்ளப்பட்ட பின்னர், அதன் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டும், மற்றும் காணாமல்போயும் உள்ளனர்.

இந் நிலையில் எஞ்சியுள்ள சில மூத்த உறுப்பினர்கள் முன்நிலையில் இவர்களை விசாரணை செய்வதன் மூலம், "சுவிஸ் காவல்துறையினர் எதனைச் சாதிக்க நினைக்கின்றனர்" என்ற கேள்வி இங்கே எழுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின், குற்றம் நிரூபனமாகும் வரை அவர்களுக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் தரும் விடையங்களை சுவிஸ் காவல்துறையினர் தவிர்ப்பது நல்லது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றது என்பது குறுப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.