Friday 8 June 2012

இன அழிப்பில் பலர் ..............!

நடந்த இன அழிப்பில் சிங்களத்தரப்பில் (இந்தியா, அனைத்துலக மட்டத்தில் என்று பலர் இருக்கிறார்கள்.. தற்போது இங்கு அது முக்கியமல்ல) சரிபாதி பங்குக்கு சொந்தக்காரர் சரத்பொன்சேகா..

ஆனால் மகிந்த குடும்பம் அந்த வெற்றியை அவருக்கு வழங்குவதற்கு மனமில்லாமல் அவரை உள்ளே தள்ளியிருந்தது. அவர் இப்போது சிறையிலிருந்து வெளியே வர இருக்கிறார்.

சிங்களத்தின் மனநிலையையும் உலக அரசுகளின் பகடையாட்டத்தையும் ஒரு சேர அறிய விரும்பினால் இந்த மனிதரை பின்தொடர்ந்தால் போதும்.

மே 18 இற்கு இன அழிப்பிற்கு துணைநின்றது மட்டுமல்ல பிறகு தமக்கு சார்பான ஒருத்தரை பதவியில் அமர்த்துவதற்காக சரத்பொன்சேகாவை பதவியில் அமர்த்த முயன்றது அமெரிக்கா. இது குழந்தைகளுக்கும் தெரியும்.

ஆனால் மகிந்த குடும்பம் மிகவும் நுட்பமாக காய்களை நகர்த்தி அவரை தோற்கடித்தது மட்டுமல்ல உள்ளேயும் தள்ளியது. ஆனால் நின்று கொல்லும் அமெரிக்கா போhக்குற்ற விசாரணை என்ற போர்வையில் மகிந்த குடும்பத்தை வெருட்டி இவரை வெளியில் விடுவிப்பதற்கான ஆட்டத்தில் இறங்கியது.

"LLRC ஐ நடைமுறைப்படுத்து அல்லது அவரை விடு" இதுதான் அடிப்படை கோரிக்கை. இப்போது மகிந்த குடும்பத்தால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை. ஆனால் இங்கேதான் நிற்கிறது சிங்கள இனவாதச் சிந்தனை..

LLRC என்ற ஒன்றுமேயில்லாத ஒரு வரைபை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கு சில சலுகைகளை கொடுப்பதைவிட அதைவிட தமக்கு பாதகமான - தமது இருப்புக்கு சவால் விடக்கூடிய ஒருத்தரை வெளியில் விட அனுமதித்திருக்கிறது மகிந்த குடும்பம்.

அதாவது தோற்றாலும் சிங்களவனிடம்தான் தோற்போம். தமிழர்களுக்கு எதாவது சலுகைகளை கொடுக்க மாட்டோம் என்ற சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் விளைவாக சரத் பொன்சேகாவை வெளியே விடத் தீர்மானித்திருக்கிறது மகிந்த அரசு.

தமது நலன்களை மையப்படுத்தி காய்களை நகாத்தும் வல்லரசுகளும் மறந்தும் தமிழர்களுக்கு எதையும் கொடுக்க மாட்டோம் என்கிற சிங்கள இனவாத அரசையும் மீறி எப்படி எமது விடுதலையை நாம் வென்றெடுக்கப்போகிறோம்?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.