Sunday, 30 September 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் மற்றும் புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்த நிலையில், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை அனைவரும் அறிவோம். 

இருப்பினும் இராணுவம் இதனை முற்றாக மறுத்து வருகிறது. இவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சென்று சரணடைய முற்பட்டவேளை, இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், எரிக் சொல்கைம், ஊடகவியலாளர் மரியா கொல்வின், மற்றும் விஜய் நம்பியார் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டனர்.

இந் நபர்களில் முக்கியமானவர் என்று கருதப்படும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள் வரும் அக்டோபர் மாதம் 5ம் திகதி லண்டனில் தமிழர்களைச் சந்திக்கவுள்ளார்.

உலகம் நாம் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு இருந்தது என்ற தொணியில் BBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹாரிசன் எழுதிய நூலும் இந் நாளில் வெளியிடப்படவும் உள்ளது.

ஐ.நாவின் அதிகாரியான ஜஸ்மின் சூக்காவும் கலந்து கொள்ளவுள்ளார். இதில் முக்கியமான விடையங்கள் சிலவும் உள்ளது. 2009ம் ஆண்டு போர் நடந்தவேளை, தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

குளிரிலும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால், இவ்வளவு இழப்பும் வந்திராது என்று சற்றும் நா கூசாமல் எரிக் சொல்கைம் சொல்லிவந்துள்ளார்.

அப்படி என்றால் எதற்காக இவர் சமாதானத்தில் ஈடுபட்டார் ?

புலிகளைச் சரணடையச் சொல்வதற்காகவா ?

என்ற கேள்விகளும் எழுகின்றன. இவர் சொல்வது போல சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு என்ன நிகழ்ந்தது ?

இலங்கை இராணுவம் அவர்களை உயிருடன் விட்டதா ? இல்லையே ! 

அப்படி என்றால் இவர் இக் கருத்தை ஏன் சர்வதேச மட்டத்தில் தெரிவிக்கவேண்டும். தற்போது வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதனை தாம் சொல்லவுள்ளதாக இவர் கூறுவதன் பிண்னணியில் என்ன உள்ளது ?

இது தொடர்பாக தமிழர்கள் இவரை கேள்வி கேட்க தயாரா ?

தமிழர்கள் தமது கருத்தை எடுத்துரைக்க இந் நிகழ்வு ஒரு களம் அமைத்து கொடுக்கிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

தனித்தமிழ் ஈழம் அமைவதை....................!




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 29 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-5)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

கை கொடுத்த இந்திய கடற்படை… இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை. இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. 

சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. 

இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது. உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. 

தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன. அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள்.

இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உசார்படுத்தும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. 

இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது.

2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ச(ஜ)லசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர்.

இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின. இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர்.

இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார். மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். 

அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. 

அத்தனையையும் தகர்த்து விட்டோம். ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம்.

இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.

இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம்.

அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது. இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். 

இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)

Friday, 28 September 2012

தமிழீழ தேசத்தின் விடுதலையை ஏன்..........?

கொஞ்சம் படிங்க !..

உங்களுக்குளே கேள்வி எழுப்பி விடை காணுங்கள் ..!

படிக்க மூன்று நிமிடம் ஆகும் ..இதனை நம்ம பிரச்சனையோடு ஒப்பிட்டால் நீ சிந்திக்க தொடங்கியதற்கான நிழல் தெரியும், கானல் நீர் புரியும், நம்மிடம் இருக்கும் வலியிலிருந்து ஓர் வழி பிறக்கும்...!

உன் விழி திறக்கும் ..

பிறகு நாடெங்கும் நம் கோடி பறக்கும்!..


இதன் பிறகும் நாம் சிந்திக்க தவறினால் இறைவனே வந்தாலும் நம்மை காப்பாற்ற இயலாது ..தமிழா!

சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான மக்கள் வாக்கெடுப்பில் 2008ம் ஆண்டு வெற்றிபெற்றிருந்த கொசோவா, அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து விடுதலை பெற்று பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்துள்ளது.

கொசோவோவின் மலர்வை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தொடக்கம் முக்கியமாக் இந்த திருட்டு இந்திய தேசம் மற்றும் உலகின் பல நாடுகளும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளன.

இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படக்கூடாது என்று குரல் கொடுக்கும் திருட்டு இந்தியாவும் கொசோவோவின் விடுதலையை வரவேற்றதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயம்.

‘கொசோவா தனிநாடாக மலர்ந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்’ என்று திருட்டு இந்திய தேசம் இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுபியுள்ளது. இலங்கை மூத்த குடிகளான தமிழ் மக்களுக்கும், சில ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் இன்று ஒன்றிணைந்து இருக்கும் இந்திய தேசத்தின் வடக்கே ஓர் பகுதியில் இருந்து இலங்கைக்கு குடியேறிய சிங்கள மக்களுக்கும் ஒன்றிணைய முடியாத வேறுபாடுகள் போன்றே, சேர்பியர்களுக்கும் அல்பேனியர்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. 

சேர்பியர்கள் சேர்பியன் மொழியைப் பேசும் தனித் தேசிய இனம். மதத்தால் கிறித்துவர்கள்.

கொசோவோவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முசு(ஸ்)லிம்கள்.

எனவே, சேர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

சேர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைந்த ஒரு மாநிலமாக கொசோவா விளங்கியபோதும், சேர்பிய அரசு அந்தத் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்து அந்த மக்களை அடக்கி ஒடுக்கியது.

தங்கள் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து கொசோவோ மக்கள் போராடினார்கள்.

சிறீலங்கா அரசைப் போன்றே சேர்பிய இராணுவம் கொசோவோ மக்களைத் திட்டமிட்ட இனப்படு கொலைக்கு உள்ளாக்கியது.

சிங்கள ஆட்சியாளர்களைப் போன்று அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்தார்கள். சுமார் 10 ஆயிரம் கோசோவோ அல்பேனிய மக்கள் சேர்பியப் படையினரால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1999ம் ஆண்டு இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் நேரில் தலையிட்டன. கெசோவா ஐ.நா.வின் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

கொசோவோ தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டு, சேர்பிய அரசுநிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

சேர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மிலோசேவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இராணுவத் தளபதிகள் சிலரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சேர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக ஐநாவின் உதவியுடன் அறிவித்துக் கொண்டது. 

கொசோவா விடுதலைக்காகப் போராடியது போலவே தமிழ் மக்களும் தங்கள் தேசிய இனம் என்று தன்னாட்சி உரிமையை பெற்றுவிடுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராட்டங்கள் மூலமாகவும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் மூலமாகவும் முயன்றுவந்திருக்கின்றார்கள்.

எனவே, கொசோவோவை அங்கீகரிக்கின்ற எந்தவொரு நாடும் தமிழீழத்தின் விடுதலையைப் புறக்கணிக்கவோ, மறுத்துவிடவோ முடியாது. 

கொசோவோ மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காக நேரடியாகத் தலையிட்ட ஐ.நா. தமிழ் மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டது.

சுமார் 10 ஆயிரம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு இனப்படுகொலைக்காகவே சேர்பியா என்ற தேசத்தில் இருந்து கொசோவோ என்ற தேசம் பிரிந்து செல்ல முடியுமென்றால், (1 .75 ) இலட்ச தமிழ் மக்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தீவில் இருந்து, தமிழீழம் என்ற தேசம் பிரிந்து செல்வதைத் தடுக்க தமிழர்களுக்கு தமிழ் தேசம் அடைவதை எந்த தேவ்டியதனம் செய்யும் நாடாளும் முடியாது.

முக்கியமாக இந்திய தேசம்!.

எங்களது செருப்படி கேள்விகள்!

செருப்படி கேள்வி - ( 1 )

மற்ற நாட்டின் இறையாண்மையில் தலையிடமாட்டோம் என்று சொன்ன திருட்டு இந்திய நாடு ..என்னத்தை புடுங்கிரதற்கு கொசோவ செர்பியா நாட்டு விடயத்தில் தலையை நுழைத்தது?

செருப்படி கேள்வி - ( 2 )

சுமார் 10 ,000 பேர்கொண்ட கொசோவா மக்கள் இறந்ததை உணர்ந்த உலக நாடுகள், இனப்படுகொலையை செய்த செர்பியா குடியரசு தலைவரை ( சுலோபோடான் மிலோசேவிக்) என்பவரையும் முக்கிய ராணுவ தளபதிகளையும் செய்தது ஐநா.

அனால் இங்கோ நம்மிடைய தமிழ் மக்கள் (1.75 lakhs) லட்ச மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உலக மனித நல்லிணக்க (World Human Reconciliation) புகார் சொல்கிறது நாம் கூறும் ஒன்றரை லட்சம் குறைவு என்கிறது.அதற்கும் மேலாக தமிழர்கள் இறந்திருகிரார்கள்.அதனையே உருதிபடுதிதிருகிறது செஞ்சிலுவை சங்கம்.

செருப்படி கேள்வி - ( 3 )...

செர்பியா - கொசோவ விடயத்தில் போர் முடிவதற்கு முன்னரே. ஐநா தலையிட்டு கொசோவா மக்களை காப்ற்றியது.. அனால் இங்கோ தமிழ் ஈழத்தில் போர் நடந்து ஆண்டுகளாகியும், பிள்ளையார் சதுர்த்தியில் வைக்கப்பட்ட கொழுகட்டையை வாயில் மென்று கொண்டிருப்பது ஏன்? கேட்டால் இந்திய ஒன்றும் சொல்லவில்லையாம்.. ஒருவேளை இந்திய அரசு தான் ஐநா வா?

செருப்படி கேள்வி - ( 4 )

பத்தாயிரம் மக்களை கொன்றவனை செர்பியா தலைவரை கைது செய்த ஐநா.ஒன்றரை லட்ச தமிழ் மக்களை கொன்ற ராசபக்சவை விட்டுவைத்தது இருப்பது ஏன்?

செருப்படி கேள்வி - ( 5 )

கொசோவோவின் விடுதலையை அங்கீகரிக்கும், வரவேற்கும் இந்த உலகம் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டும் மறுப்பதும், தடுப்பதும் ஏன்?

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

"அவர்கள் நம் மக்கள்"! என்றார்................!

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார். 












மகாத்மா காந்தி, முகமது அலி சி(ஜி)ன்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது.

இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' என விகடன் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்”இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன.

ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என 'சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும்.

போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். 

பாகிசு(ஸ்)தான், சீனா, ரசி(ஷ்)யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராசபக்ச அரசு.

இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, 'இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை.

இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிசு(ஸ்)தானையும் சமப்படுத்த செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். 

இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது.

அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித் தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

அதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!'' என்றார்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Thursday, 27 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-4)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

தேர்தலுக்கு முன்பு ‘முடிக்க’ விரும்பிய இந்தியா… பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.

கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது. பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது.

பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது. இந்த பயணத்தின் போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள்.

இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிசு(ஸ்)தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர்.

ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிசு(ஸ்)தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராசபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது – 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின் போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரசு அரசு விரும்பவில்லை. 

மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராசபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விசய் சிங் அணியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்)…

Wednesday, 26 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-3)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும்.

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராசபக்சே சகோதரர்கள்… இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராசபக்சேவும் உணர்ந்திருந்தார்.

தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார்.

இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

இதை ராசபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிசு(ஸ்)தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராசபக்சேவுக்கு.

இதனால் இந்தியா, பாகிசு(ஸ்)தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை புதுப்பிப்பது.

அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விசய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.

இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை.

மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின் போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது. இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான்.

அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்பு  
அடைந்திருந்தது. 2008 ஆவணி மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது.

இந்த நிலையில்தான் ஆனி மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விசய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் , சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது. அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.

ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது. அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், உலங்குவானூர்திகள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)

Tuesday, 25 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-2)........!

நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும் 

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

முதலில் போன உலங்குவானூர்திகள்… 2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. 

முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக உலங்குவானூர்திகளை  இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக்கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி உலங்குவானூர்திகள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த உலங்குவானூர்திகள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த உலங்குவானூர்திகள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய உலங்குவானூர்திகள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால். 

ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது.

ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம்.

இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)

தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளாக..........!


உலக ". [11] தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளாக இருந்த உள்ளது. [12] 3 ஆம் நூற்றாண்டு கி.மு. உள்ள பாறை பிரகடனங்கள் மற்றும் வீரக் கற்கள் தேதி காணப்படும் முந்தைய epigraphic பதிவுகள்.

[13] தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம் ஆரம்ப காலத்தில், 300 கி.மு. இருந்து தேதியிட்ட -. 300 CE.Tamil மொழி கல்வெட்டுகளில் கேட்ச் எழுதப்பட்ட 1 ஆம் நூற்றாண்டு கி.மு. மற்றும் 2 வது நூற்றாண்டில் ஒப்பு மற்றும் யுனெஸ்கோ நினைவகம் மூலம் பதிவு செய்ய, எகிப்து, இலங்கை மற்றும் இந்திய தாய்லாந்து. 

அந்த இரண்டு முந்தைய சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன 1997 மற்றும் 2005 ஆம் ஆண்டு உலக பதிவு தமிழ் இருந்தனர். epigraphical கல்வெட்டுகளில் அதிகமான 55% (55,000 பேர்) தமிழ் மொழியில் இருக்கும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு 2001 கணக்கெடுப்பின்படி, தமிழ் வெளியிடப்பட்ட 1.863 செய்தித்தாள்கள், அங்கு இதில் 353 நாளிதழ்கள் இருந்தன. இது மற்ற திராவிட மொழிகளை இடையே பழமையான நடைமுறையில் இலக்கியம் உள்ளது.

பாரம்பரிய தமிழ் இலக்கியத்தின் பல்வேறு மற்றும் தரம் அதன் உலகின் சிறந்த பாரம்பரிய மரபுகள் மற்றும் நூல்களை ஒன்று "என விவரித்தார் வழிவகுத்தது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Saturday, 22 September 2012

விடுதலைப் புலிகளை ஒழிக்க (பகுதி-1)........!



நிதர்சனம். நெற் என்னும் இணையத்தில் வெளியான கட்டுரை இதுவாகும் 

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)

இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது.

குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். 

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே. இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.

கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்… 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராசபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது.

விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராசபக்சே. அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும்.

அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராசபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார். ராசபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

அந்தப் பட்டியலில் – வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். 

இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. 

ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரசு கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தரமாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.

எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரசு கூட்டணி அரசு எடுத்தது.

(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)

Friday, 21 September 2012

யார் இந்த பலாங்கொட மனிதன் .................?

இற்றைக்கு 34,000 வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் உடற்கூற்றியல் சார்பில் நவீன மனிதனாகக் கணிக்கப்படும் மனிதன் தான் பலாங்கொட மனிதன்.

இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே இலங்கையில் மனிதக்குடியிருப்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவீன மனிதனின் வரலாறு பழங்கற்காலத்தின் மத்திய பகுதியிலிருந்து ஆரம்பிக்கிறது. அதாவது இற்றைக்கு 200,000 வருடங்களுக்கு முன்னரிருந்து ஆரம்பிக்கிறது.

அக்காலப்பகுதியில் உலகில் நவீன மனிதன் வாழ்ந்தமையை உறுதிப்படுத்தும் தடங்கள் 196,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவை எதியோப்பியாவின் ஒமா நதிக்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் சில பகுதிகளாகும்.


கற்காலத்தின் தொடக்க காலத்தை பழங்கற்காலம் என்பர். அதன் பின்னர் இடைக்கற்காலமும் பின்னர் புதிய கற்காலமும் தொடர்ந்தன. புதிய கற்காலத்துடன் அந்த யுகம் முடிவுற்று வெண்கல யுகம் ஆரம்பித்தது. 

வெண்கல யுகத்தின் முடிவில் இரும்பு யுகம் ஆரம்பித்தது. இரும்பு யுகம் முடியும் வரையான காலப்பகுதியை வரலாற்றுக்கு முந்தைய காலம் என வரலாற்றாய்வாளர்கள் பகுக்கிறார்கள்.

இரும்பு யுகத்தின் பின்னரான காலத்திலேயே வரலாறு ஆவணப்படுத்தப் பட்டதாகக் கூறுவர். ஆதலால் புராதன காலம் என்பது இரும்பு யுகத்தின் பின்னரான காலப்பகுதியைக் குறிக்கிறது.

இவை இப்படி இருக்க, இந்த பலாங்கொட மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன் தெரியுமா?

பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட இடைக்காற்காலத்தைச் சேர்ந்தவனாவான். இந்த இடைக்கற்கால கலாசாரம் பலாங்கொட கலாசாரம் என அழைக்கப்படுகிறது. இடைக்கற்காலத்தை குறுணிக்கற்காலம் என்றும் அழைப்பர்.

ஏனெனில் இக்காலப்பகுதியில் நுண்ணிய கல்லாயுதங்கள் பயன்பாட்டிலிருந்தன. உறுதியான மனிதனாகக் கருதப்படும் பலாங்கொட மனிதனின் (ஆண்) சராசரி உயரம் 174 செ.மீ ஆகக் கருதப்படுகிறது. 

இலங்கையில் கோ(ஹோ)ட்டன் சமவெளி உருவாவதற்கும் இந்த பலாங்கொட கலாசாரமே காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. இந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சில குகைகள் இலங்கையில் இன்னும் காணப்படுகின்றன.

கத்துல்கலவிலுள்ள பெலிலேன குகை, இரத்தினபுரியிலுள்ள வாவுல பனே குகை, குருவிட்டவிலுள்ள பட்டடொம்பலேன குகை, களுத்துறையிலுள்ள ஃபா கி(ஹி)யென் குகை, பலாங்கொடவிலுள்ள பெலன்பண்டி பல்லச, கோ(ஹோ)ட்டன் சமவெளி, கேகாலையிலுள்ள டொரவக்க லேன ஆகியனவே அந்த குகைகளாகும்.

ஃபா கி(ஹி)யென் குகையானது பலாங்கொட மனிதன் என்று அறியப்படும் மனிதன் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி பல தகவல்களை நமக்குப் பெற்றுத்தந்த இடமாகும்.

இக்குகைக்கு ஃபா கி(ஹி)யென் எனவும் அது அமைந்திருக்கும் பகுதிக்கு பகி(ஹி)யங்கல எனவும் பெயர் வர என்ன காரணம் தெரியுமா?

வெகு பிரபலமான ஃபா கி(ஹி)யென் என்ற சீன யாத்திரிகர், கி.பி 4 ஆம் நூற்றாண்டளவிலே இலங்கைக்கு வந்து சிவனொளிபாத மலைக்குச் செல்லும் இக்குகை அமைந்துள்ள பகுதியில் பெளத்த கல்வெட்டுகளைத் தேடியிருக்கறார்.

அதையடுத்தே அப்பகுதி பகி(ஹி)யங்கல எனவும் அக்குகை ஃபா கி(ஹி)யென் எனவும் அழைக்கப்படத் தொடங்கின.

அண்மையில் இந்த குகையிலே அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போது பலாங்கொட மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த எலும்புக்கூடு 37,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட மனிதன் தொடர்பாக இலங்கையில் கிடைக்கப்பெற்ற சான்றாதாரங்கள் யாவும் எலும்புக்கூட்டின் பகுதிகளாகவே கிடைக்கப்பெற்றிருந்தன.

இப்போது தான் முதன் முறையாக முழு எலும்புக் கூடு கிடைக்கப்பெற்றிருக்கிறது. எலும்புக்கூட்டோடு மிருகங்களின் எலும்பாலான ஆயுதங்கள் சிலவும் படிகங்கள், மணிகளாலான ஆபரணங்கள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திமிங்கிலத்தின் பல்லாலான ஆயுதம் ஒன்றும் அதிலடங்கும். தொல்பொருளாய்வாளர் நிமல் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தின் படி, இந்த எலும்புக் கூட்டின் அடிப்படையில் இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் நவீன மனித இனமான கோ (ஹோ)மோ சேப்பியன் குடியிருப்புகள் காணப்பட்டதை உறுதி செய்ய முடியும்.

மண்படைகளுக்குக் கீழ் புதையுண்டிருக்கும் இந்த எலும்புக்கூட்டின் சிறுபகுதி, பாறாங்கற்களுக்கிடையில் காணப்படுகிறது. அத்துடன் இந்த அகழ்வாராய்ச்சியின் போது பலாங்கொட மனிதனின் உணவுப்பாங்கு, சம்பிரதாயங்கள், ஆயுதங்கள் தொடர்பிலான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த பலாங்கொட மனிதனின் எலும்புக்கூடு தொடர்பில் ஆராய்ச்சி செய்ய வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்பொருளாய்வாளர்களும் வரவழைக்கப் படவுள்ளனர். அதேவேளை இந்த எலும்புக் கூட்டின் மாதிரிகள் காபன் திகதியிடலுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காபன் திகதியிடல் என்பது பழைமையான உயிர்ப்பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்கப் பயன்படும் நுட்பம் எனலாம். உதாரணமாக மரங்களின் வயதைக் கணக்கிட காபன் திகதியிடல் பயன்படுகிறது.

அதேபோல் எலும்புக்கூடுகளின் வயதைக் கணக்கிடவும் காபன் திகதியிடலைப் பயன்படுத்த முடியும். தற்போது இந்த எலும்புக்கூட்டை பொதுமக்கள் பார்வையிடுவதானது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்த எலும்புக் கூட்டை வெளியே எடுத்து பாதுகாப்பான முறையில் பேணுவ தற்கான வசதிகள் இல்லாமையால், அது இருந்த இடத்திலே வைத்தபடியே பேணப்படுவதாகவும் தெரிய வருகிறது. ஆய்வு முடிவுகள் என்ன சொல்லப் போகின்றன?

மேலதிக அகழ்வாராய்ச்சியின் போது இன்னும் என்னென்னவெல்லாம் கிடைக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

உலக வரைபடத்தில் வேண்டுமானால் இலங்கை ஒரு சிறு புள்ளியாக இருக்கலாம். அந்தச் சிறு புள்ளி புறக்கணிக்கப்படக்கூடியதாகவும் இருக்கலாம்.

ஆனால் மனித நாகரிகம் பரிணமித்து வந்த பாதையில் இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday, 19 September 2012

விழித்து எழு தமிழா ......................!!


உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி, போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!

பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின் அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!

ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை கூறியிருந்த எம் தமிழினம் !!

உலோகம் பற்றி ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!

பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!

அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய எம் தமிழினம் !!

பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம் சித்தவைத்தியத்தையும் தந்த எம் தமிழினம் !!

ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் (கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து விவசாயம் செய்த எம் தமிழினம் !!

இன்னும் எண்னில் அடங்கா மேன்மை வாய்ந்த எம் தமிழினம் இன்று, தன் முன்னே சொந்த சகோதரர்(ரி)கள் சாகக்கண்டும், ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?

'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும், அரவணைத்து கொண்டது ஏனோ?

தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?

அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் அடிமைகளானது ஏனோ?

தமிழன் என்ற கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து தமிழன் என்று சொல்லக்கூட தயங்குவது ஏனோ?

10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம் மேன்மையை, அறிவை. 800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா?

இந்நிலை மாற வேண்டாமா?

நம் அடிமை மோகம் தனிய வேண்டாமா?

இழந்த மேன்மையை மீட்க வேண்டாமா?

ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்.. விழித்து எழுவோம் !!

வீறு கொண்டு எழுவோம் !!

தமிழினத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்து உலகினுக்கு உரக்கச் சொல்வோம் !!.

இழந்த மேன்மையை அடைவதற்கான இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!

தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய இன்னும் பல சாதனை செய்வோம் !!

நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!

பின் விடியல் பிறக்கும் நம் தமிழுக்கும், நம் தமிழினத்திற்கும் !!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday, 18 September 2012

தமிழர்கள் இவ்வளவு பழமை...2..............?

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்!

(பகுதி 2)


சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது.

இது சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது.

பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது. தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன. 

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122) இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

முற்றும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday, 17 September 2012

இலங்கைக் கடைசித் தமிழ் மன்னனின்......!

கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி: 2300 ஆண்டு பாரம்பரியம்மிக்க இலங்கை தமிழ் மன்னர் ஆட்சியை ஆங்கிலேயர்கள் முடிவுக்கு கொண்டுவந்த பின், அங்கு கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களின் ஒருவரும் கண்டி பகுதியை ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னருமான "சிறீ விக்ரம ராச சின்கா" அவரை ஆங்கிலேயர்கள் தமிழகத்துக்கு நாடுகடத்தி வேலூர் கோட்டையில் வீட்டு கைதியாக சிறைபிடித்து வைத்தனர்.

பின்பு அவர் இறந்த பின் அவரை வேலூர் கோட்டையிலேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் வேலூர் கோட்டையில் காணலாம்.

சிறப்பு செய்தி:

அவரது ஆட்சி காலத்தில் உபயோகிக்கப்பட்ட சிங்கம் வாள் ஏந்தி நிற்பது போன்ற கொடியை, அவர் நினைவை போற்றும் விதமாக தற்போதுள்ள இலங்கை கொடியிலும் இடம் பெற செய்துள்ளனர்... 

அந்த மன்னன் ஒரு இந்திய தமிழர்,அவருடைய உண்மையான பெயர் கண்ணுசாமி , கடைசியாக கண்டி ராச்சியத்தை ஆண்ட மன்னன் முடி சூடி கொள்ளும் போது ,அந்த சிங்கள (சின்ஹல) மக்களுக்காக பெயரை மாற்றி வைத்ருக்கிறார்கள்.

திருமண பந்தத்தால்தான் இவருக்கு இந்த ஆட்சி கிடைத்ததாக படித்த கடைசியில் கண்டி ராச்சிய சிங்கள (சின்ஹல)  மக்களும், பிரதானிகளும் தான் வெள்ளையரிடம் காட்டி கொடுத்தார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Friday, 14 September 2012

ஏதோ குழந்தைகளின் விளையாட்டு.........!

ஏதோ குழந்தைகளின் விளையாட்டு சமாசாரமென்று நினைத்துவிட வேண்டாம்.

பாதுகாப்புத் துறையில் 21-ம் நூற்றாண்டிற்கான புதிய வரவு என்று வர்ணிக்கப்படும் இணக்கமான (Plastic) பீரங்கி, மிக வலிமையான போர்க்கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக போர்க்கருவிகள் செய்யும் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறது விக்கர்சு(ஸ்) என்ற பிரிட்டன் நிறுவனம்.


அந்நிறுவனம்தான் தற்போது வலுவூட்டப்பட்ட இணக்கமானவற்றைக்(Plastic) கொண்டு புதிய வகை பீரங்கிகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. எடை குறைந்த இந்த இணக்கமான (Plastic) பீரங்கி, நடைமுறையிலுள்ள 70000 கிலோ கிராம் பீரங்கிக்கு ஒரு மாற்றாக விளங்கும். 

கணனி பொருத்தப்பட்டுள்ள இந்த பீரங்கியை தொலைவில் இருந்தும் இயக்க முடியும். ஆறு மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பீரங்கி வெறும் 1500 கிலோ கிராம்  எடை கொண்டது. மின் காந்தங்களின் உதவியுடன் இயங்கும் (Plastic) பீரங்கி மிகவும் வேகமாக நகரும்.

அதே சமயம் கரடுமுரடான பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ளும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கால போர் உத்திகளுக்கு ஏற்றதாக இது கருதப்படுகிறது.

உலக நாடுகளிடையே இதற்குப் பெருத்த வரவேற்பு இருக்குமென விக்கர்சு நிறுவனம் எதிர்பார்க்கிறது. சமாதானப் பிரியர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தி என்பதில் சந்தேகமில்லை!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Monday, 10 September 2012

தனி ஈழத்தை பிரசவிக்க ......................!





































தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.






Sunday, 9 September 2012

ஈழத்தாய் சபதத்திலிருந்து.................!

ஆரியர் கொடுமை - மகா வம்ச காலம்
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)
விசயனென்றொரு முரடன் - தான் 
விரும்பியபடி அவன் நாட்டினிலே 
தசையினில் ஆசைகொண்டே - இளந்
தளிர்களைக் கசக்கிப் பின் தரையெறிந்தான் 
வசை வருமெனப் பயந்தே - அந்த 
வம்பனை அவனது தோழருடன்
திசையறியாக் கடலில் - என்றும்
திரும்பி வராவண்ணம் மரக்கலத்தில்

தந்தை அரசனவன் - உயர்
தர்மத்தைக் காத்திட அனுப்பிவைத்தார் 
விந்தையில் விந்தையடா - எங்கள் 
வினைப்பயனோ இல்லை விதியதுவோ 
முந்தையர் கொடுமைகளோ - அந்த
மூர்க்கனைச் சுழற்புயல் கொணர்ந்தெமது 
செந்தமிழ் ஈழத்திலே - கரை 
சேர்த்ததடா மறை வேர்த்ததடா

மண்டலத்தரசியவள் - உயர் 
மறத்தினள் ராவணன் வழியில் வந்தாள் 
வண்டமிழ்ப் பொற் 'குவை நீ"- எனும் 
வாயினி லினிக்கிற பெயருடையாள் 
புண்டரிகத் தெழிலாள் - அந்தப் 
புலையனைப் புணர்ந்திட ஆசை கொண்டாள்
பண்டைய பெருமையெல்லாம் - அந்தப் 
பாவியினால் எமக் கழிந்ததுவே

ஆயிரமாயிரமாய் - இளம் 
அனிச்சைகள் தனை முகர்ந் தெறிந்தவனை
நாயினை அவள் புணர்ந்தாள் - நாம் 
நாடிழந்தே நடுத்தெருவில் நின்றோம் 
தேயத்து வன்னியர் நாம் - தலை 
திருப்பிய புறமெங்கும் அன்னியர்கள் 
பேயெனச் சிரித்து நின்றார் - எங்கள்
பெருமையெல்லாம் அன்று எரித்து நின்றார்

துட்டனைப் புணர்ந்ததனால் - அவள் 
துயரினை அதன் பின்னர் சுமந்ததுவும்
கெட்டவன் எமதரசைத் - தன்றன் 
கீழ்க் கொண்டு வந்திட முயன்றதுவும்
பட்டத்து அரசியென - ஒரு
பாண்டிய மங்கையை மணந்ததுவும் 
பொட்டெனத் தமிழ் நிலங்கள் - அந்தப் 
புலையனின் கை வசமானதுவும்

நாட்டினை இழந்ததனால் - வெறும்
நடைப்பிணமாகிய தமிழரினம்
காட்டினி லுறைந்ததுவும் - தீவின் 
கரைகளில் ஒதுங்கியே வாழ்ந்ததுவும் 
வேட்டுவரானதுவும் - சிலர்
வெஞ்சினமுற்றுக் குவை நீ தனை
ஈட்டியில் முடித்ததுவும் - எங்கள்
ஈழத்தை இந்தியத் தமிழர்களாம்

பாண்டிய மன்னர்களும் - பலம் 
பொருந்திய புலிக் கொடிச் சோழர்களும் 
ஆண்டதும் விதிவலியால் - தமிழ் 
அன்னையைத் தவிக்கவிட்டவர் நிலமே 
மீண்டதும் பழைய கதை - பின்னர் 
மேற்குலகத்தினர் எமைப்பிடித்தே 
வேண்டிய பொருள் பறித்தார் - சுவை
மேவிய தமிழுக்கும் குழி பறித்தார்

தமிழ் கவிதைகள் (இணையத்தில் வலைவீசிப்பிடித்தவை)

நன்றிகள் பல.

Saturday, 8 September 2012

3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்..........!

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன் நாட்காட்டியை (Mayan Calendar)- வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது.


2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. மாயன்கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட மாயன் என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் மாயன் நாட்காட்டி பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன.

வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் மாயன் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். 

ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தை (Atlantic Ocean) குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கோலம்பசு (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அத்திலாந்திக் சமுத்திரத்தை  கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் கோலம்பசு (Columbus) தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார்.

அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். 

கோலம்பசுக்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் அமேரிக்கா (America) என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெறினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது.

ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொருத்தமாயிற்றே!

வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். 

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு வெளிநாட்டில் செய்யப்பட்டது (Made in Foreign) என்றாலே ஒரு கிளுகிளுப்புதானே!

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது.

இதற்கு வாழும் உதாரணம் தமிழனே. The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார்.

ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை.

இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம்.

தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது. செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன.

தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது.

தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். 

மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது. செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது.

காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள்.

அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துல்லியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த கால்நடைகளை மேய்ப்பவர்கள் (Cowboy) படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம். 

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது.

இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) அவுசுத்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. 

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று அவுசுத்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை.

முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான்.

ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கரையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது.

அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும். கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் அவுசுத்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே. நல்லவேளை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். 

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.