Friday 14 September 2012

ஏதோ குழந்தைகளின் விளையாட்டு.........!

ஏதோ குழந்தைகளின் விளையாட்டு சமாசாரமென்று நினைத்துவிட வேண்டாம்.

பாதுகாப்புத் துறையில் 21-ம் நூற்றாண்டிற்கான புதிய வரவு என்று வர்ணிக்கப்படும் இணக்கமான (Plastic) பீரங்கி, மிக வலிமையான போர்க்கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக போர்க்கருவிகள் செய்யும் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறது விக்கர்சு(ஸ்) என்ற பிரிட்டன் நிறுவனம்.


அந்நிறுவனம்தான் தற்போது வலுவூட்டப்பட்ட இணக்கமானவற்றைக்(Plastic) கொண்டு புதிய வகை பீரங்கிகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. எடை குறைந்த இந்த இணக்கமான (Plastic) பீரங்கி, நடைமுறையிலுள்ள 70000 கிலோ கிராம் பீரங்கிக்கு ஒரு மாற்றாக விளங்கும். 

கணனி பொருத்தப்பட்டுள்ள இந்த பீரங்கியை தொலைவில் இருந்தும் இயக்க முடியும். ஆறு மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பீரங்கி வெறும் 1500 கிலோ கிராம்  எடை கொண்டது. மின் காந்தங்களின் உதவியுடன் இயங்கும் (Plastic) பீரங்கி மிகவும் வேகமாக நகரும்.

அதே சமயம் கரடுமுரடான பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ளும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கால போர் உத்திகளுக்கு ஏற்றதாக இது கருதப்படுகிறது.

உலக நாடுகளிடையே இதற்குப் பெருத்த வரவேற்பு இருக்குமென விக்கர்சு நிறுவனம் எதிர்பார்க்கிறது. சமாதானப் பிரியர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தி என்பதில் சந்தேகமில்லை!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.