Thursday 24 May 2012

2012 மே பதினெட்டில்..................!

2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன?
































தமிழர்கள் உலகம் முழுவதும் ஒன்றுதிரண்டு இலங்கையரசு தம் மீது திணித்த பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவை கடைப்பிடித்து (அனுஸ்டித்துக்) கொண்டிருந்த நாளில், இலங்கை இராணுவம் இரகசியமான முறையில் முள்ளிவாய்க்காலுக்கு முல்லைத்தீவிலிருந்து உள்நுழையும் பிரதான கடவையான வட்டுவாகலில் மிகப் பிரமாண்டமான பௌத்த விகாரையைத் திறந்துள்ளது.

இறுதிப் போரில் அதிகளவான தமிழ் உயிர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட காணியொன்றில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அயலில் இருக்கின்ற காணிகளையும் பெரியளவில் உள்வாங்கி அந்த விகாரைக்கான நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டடு வாரத்துக்கு முன்னர் சீன நிறுவனமொன்று கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்குமான கடற்கரை வீதியை நல்ல முறையில் செப்பனிட்டு வழங்கியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இல்லாத நிலையில் அந்தப் பாதை தெற்கிலிருந்து போரின் தடயங்களைப் பார்க்க வரும் சிங்கள சுற்றுலாபயணிகளுக்கே பயன்படுகின்றது.

அத்தோடு அந்தப்பாதை புலிமோட்டையிலிருந்து கொக்கிளாய் வரையான சிங்கள குடியேறிகளின் பயணத்துக்கு ஏற்பவே அஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் அருகாக அமைக்கப்பட்டுள்ள விகாயையை அண்டிய பகுதிகளில் தமிழர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தெற்கிலிருந்து வரும் சிங்கள சுற்றுலா பயணிகள் தமது நிரந்தரமான வணிகத்துக்கும் தங்கிச் செல்வதற்குமான வசதிகள் இந்தவிகாரையை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்காலிருந்து தெற்குப் பக்கமாக முல்லைத்தீவு நோக்கி செல்லும் பாதையில் வட்டுவாகலின் தொடக்க இடத்தில் இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனோடு இணைந்த ஊர்கள் பாரம்பரியமாக பண்டைக்காலம் தொட்டு வன்னித் தமிழரின் சமய மரபுகளைப் பின்பற்றி வருபவை. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில், வட்டுவாகல், சப்தகன்னிமார் கோயில் போன்றன இதற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.

அண்மையில் திருகோணமலையிலும் மன்னாரிலும் தமிழர்களின் சைவ ஆலயங்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளை இலங்கை அரசு திட்டமிட்டு அமைத்து திறந்திருந்தது. யாழ்ப்பாணத்திலும் பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பௌத்த சமய நிகழ்வுகள் கூட பெருமெடுப்பில் சிங்கள மக்களால் யாழில் அனுஸ்டிக்கப்படுகின்றது. நைனாதீவில் உள்ள விகாரைக்குச் செல்லும் சிங்கள மக்களுக்கு சிறப்பு படகு சேவை மற்றும் வாகன சேவை சலுகைளும் கடற்படையினரால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.