Saturday 5 May 2012

இவர்கள் ஏதாவது முயற்சி .......................?


நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும்.

அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அது இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்கெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார்.

அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்லியிருந்தார், ஆனால் தன்னுடைய தலைமையில் தான் தமிழ்மக்கள், தமிழ்ஈழத்தாயகமும் அழிப்பதற்கான மறைமுக வேலைத்திட்டம் திரைமறைவில் நடைபெறுகின்றது எப்போதாவது சொனாரா?

இல்லவேயில்லை அனைத்து வெளிநாட்டுச் சக்திகளும் தமிழ்மக்களையும், தமிழீழத்தாயகத்தையும் சீரளித்ததை நல்லதோர் பாடமாகக் கருதினால். தமிழ்மக்களினதும், தமிழ்ஈழத்தாயத்தின் விடிவின் போதாவது தமிழ் மக்களாகிய அனைவரினதும் கடமையை உணர்த்தும் என்பதே என்கருத்தாகும்.

இல்லையேல் தமிழ்மக்கள், தமிழ்ஈழத்தாயகத்தின் அழிவிற்குக் காரணகர்த்தாவான சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மிற்கோ அல்லது இவ்வளவு அழிவுகளிற்குமாக இலங்கை அரசிற்குத் துணையாக ஆயுதங்களையும், ஆட்பலத்தையும், தொழினுட்பங்களையும், பெரும் பணத்தினையும் கொட்டிக் கொடுத்த நாடுகளிற்கு ஏதாவது கண்டன அறிக்கையாவது சென்றடைந்திருக்குமா?

தினமும் அழிக்கப்படும் தமிழர் தாயகமும், தமிழ்மக்களின் விடிவிற்காவது இவர்கள் ஏதாவது முயற்சி எடுத்துள்ளார்களா?


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.