Thursday 24 May 2012

சரித்திரத்தில் முதல் தமிழன்...............!

ரோகன் சம்பத் என்ற தமிழ் மாணவன் தான் உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவன். ஆம் ஐ சி எஸ் ஈ ( ICSE ) என்னும் தேர்வில் உலக அளவில் 99.5% சதவிகிதம் பெற்று அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் இ டம் கிடைத்திருகிறது.

இவரின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக மும்பாய் சென்று பின்பு பூனே வழியாக துபாய் சென்று 18 வருடங்களுக்கு முன் செட்டில் ஆனவர்கள்.

இந்த மாணவன் இந்த மார்க்கை எடுக்க டியூஷன் வைக்க வில்லையாம். டியூஷன் வைத்தால் தன் ஆசிரியருக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்று தானாகவே படித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறான்.

இவன் தாயார் கூறுகிறார் நான் அவனின் படிப்பில் கவலை கொண்டாலும் இவன் இரவு வெகு நேரம் விழித்திருந்து படித்ததில்லை 

மற்றூம் குருப் ஸ்டியிஸும் கிடையாது அது போக பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கூட பள்ளீயில் ஒரு இன்டர்னேஷனல் டிபேட் ஃபெஸ்டிவளுக்கு பிரசிடன்டாக இருந்த போது இவர்கள் பயந்துவிட்டார்களாம், பையன் எப்படி நல்ல மதிப்பெண்ணில் பாஸ் பண்ண போகிறான் என்று.

கனிதம் 100/100, பிஸிக்ஸ் 100/100, கம்ப்யூட்டர் சைன்ஸ் 100/100 ஆங்கிலம் 98 வாங்கி உலகத்தின் நெ 1 ஸ்டூடன்ட் ஆக இவன் ஆனதை அவன் படித்த துபாய் மாடர்ன் ஸ்கூல் ஆசிரியர்கள் கொண்டாடுகின்றனர்.

கடைசி டிப்ஸ் - இவன் ICSE - 2012ல் உலகலவில் அதிக மதிப்பெடுத்த மாணவன் மட்டுமல்ல, இந்த வரலாற்றில் இது வரை அதிக மதிப்பெடுத்த முதல் சரித்திர நாயகனும் இவன் தான்........


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.