Saturday 24 December 2011

தாயகத்தின் மீது ......


ஆழிப்பேரலையின் ஏழாவது ஆண்டு நினைவு. ஆழிப்பேரலையின் தாக்கத்திலிருந்து எமதுதேசம் தன்னைச் சுதாரிக்கும் முன் அனைத்து உலகமும் எமது தேசத்தின்மீது ஏற்படுத்திய செயற்கை ஆழிப்பேரலையின் தாக்கத்தின் விளைவுதான்.


முள்ளிவாய்க்கால் எனும் இனஅழிப்புப் பெரவலமாகும்.ஆழிப்பேரலையின் போது ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகளிலும் பன்மடங்காகும்.இயற்கை ஆழிப்பேரலையோ தமிழ்ஈழ மக்களின் ஒருபகுதியினரையே தாக்கி
அழித்த து.


அது இயற்கையின் சீற்றம்.ஆனால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதப் பேரவலம், இனச்சுத்திரிகரிப்பு, இனஅழிப்பு என்னும் செயற்கை ஆழிப்பேரலை  அனைத்து உலகநாடுகளும் ஒருமித்து அங்கீகாரம் கொடுத்து நன்கு திட்டமிட்டு செய்துமுடிக்கப்பட்டுள்ளது என்னும் வேதனையான விடயம்.


எம்மினத்தின் அழிவினை அட்டவணை போட்டு பலதடவை காலக்கெடு கூடக்கொடுத்து நெறிப்படுதியவர்கள் வேறுயாருமல்ல சமாதானப் புறாக்கள் எனத்தம்மைத்தாமே உலகிற்கு பறைசாற்றிக் கொண்டும்.

உலகில் சமாதானத்திற்காக உழைத்தவர்களிற்கு என வருடம் தோறும் நோபல் பரிசுகளை கொடுப்பவர்கள்தான்.


மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதன் ஊடாகவே பெரும்பணம் ஈட்டுவதால் போருளாதாரத்திலும், புகழிலும் உயர்நிலையில் வாழவேண்டும் என்பதற்காக எந்த இனம் அழிந்தாலும்,அளிக்கப்பட்டாலும் ஒருவார்த்தையும் கூறாது.


அவர்களுடைய புவிசார்நலன்,பொருளாதார நலன்களிற்காகவும்,உறுதியான ஒரு இனமாகவும் இனவிடுதலைப் போராட்டமாக இருந்தால் என்ன.

அவ்வினங்களின் தாயகப் பிரதேசங்களில் உள்ள இயற்கை வளங்களையோ தமது தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதலால் சுதந்திரத்திற்காக போராடுமினமும்,போராட்டக் கட்டமைப்புக்களை அள்ளித்துவிட்டு.


தங்களிற்கு ஒன்றுமே தெரியாதது போலிருப்பது.உலகமே வெட்கித் தலை குனிய வேண்டியவிடயமாகும்.இப்போது இந்த உலகில் இயற்கை அன்ர்த்தங்களிலும் பார்க்க செயற்கையாக ஏற்படுத்தப்படும்  அனர்த்தங்கள்தான் மிகப் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்துகிறது.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.