Monday 19 December 2011

தற்பெருமையா? தாயக....



புலம்பெயர் தேசங்களில் தாயக விடுதலைக்காக உழைக்கும் செயற்பாட்டாளர்களின் தாயக விடுதலைக்கான உணர்வை, உழைப்பை உருக்குலைகும். செயற்பாடுகளின் மூலம் தாயக விடுதலையையும்,அதன் செயற்பாடுகளையும் நிர்மூலம் ஆக்குவதோடு அதன் செயற்பாட்டாளர்களை புறம்தள்ளி.


தாயக விடுதலைக்கான சிறந்த செயற்பாட்டாளர்கள் என்று தற்பெருமை கொள்வதற்காக தாயவிடுதலையை பகடையாகப் பயன்படுத்தாது.

தாயகவிடுதலைக்கு ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்புக்களை இதயசுத்தியுடன் எவ்வித பலனையும் (உதாரணம் புகழ்,பதவி,சமூகத்தில் உயர்ந்த நிலையை எட்டலாம்)என்று எதிர்பார்க்காமல்.


தாயவிடுதலையை முழுமையான நோக்கம்,கொள்கை,குறிக்கோள் என்பவற்றை கருத்திற் கொண்டு உழைப்போம். அதுவே எமகிற்கு வளர்ச்சியைத்தரும்.


இல்லையேல் அது எமது இனத்தின் விடிவினை அன்றி அழிவையே ஏற்படுத்தும். ஒவொருவரும் தத்தமது இனத்தின் விடிவிற்காக உழைக்க வேண்டுமே அன்றி இனத்தின் அழிவில் தத்தமது தற்பெருமையை நிலைநிறுத்திக் கொள்வதை தவிர்க்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் ஈழத்தாயக விடிவினைக் காண உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.


நன்றிகள் பல