Saturday 24 December 2011

கோடரிக்காம்புகளாக தாயக........


தமிழர்களின் வரலாற்றைப் பார்ப்போமானால் அன்றிலிருந்து,இன்றுவரை மண்,பொன்,பெண் இவை மூன்றிற்காகவும் தம்மிடையே அடித்து கொண்டும்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும்.கன்னியாகுமரி முதல் கடாரம் வரை பெரும் சாம்ராச்சியங்களை வைத்திருந்த பேர் அரசுகள் எல்லாம் அன்றும் அழிந்தன.

இன்றும் தமிழ்ஈழ தாயக விடுதலை
ஆயுதவழிப் போராட்டமானது உலகநாடுகளினால் நசுக்கப் பட்டதற்கு முக்கிய காரணங்கள் எவை தமிழ்இனத்தின் ஒற்றுமையின்மை,பொறாமை,காட்டிக்கொடுப்பு இவற்றினூடாகக் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, புகழ்,பதவிகள் இல்லையேல் சலுகைகள்.

இவ்விதமான அற்பஇன்பங்களிற்காக எம்மினத்தையேவிற்று அதனூடே கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியிலும்,புகழிலும்,பதவி இல்லையேல் சலுகைகளிலும் நீங்கள் காண்பது இன்பமல்ல ஈழத்தமிழ் இனத்தையே மீட்சியில்லா படுகுழியில் தள்ளுகிறீர்கள்.

ஒருஇனத்தின் அழிவிலா உங்களது சுபீட்சம்,மேன்மை,தற்பெருமை இல்லவே இல்லை. என்பதை ஒன்றுபட்ட தமிழ் உறவுகளின் செயற்பாட்டால் முறியடிப் போம்.உங்களைப் போன்றோர்தான் எம் இன அழிப்பிற்குக் கிடைத்த கோடரிக்காம்புகளாகும்.

தமிஈழத் தாயக விடியலிற்காக உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்று இணைவோம்.

நன்றிகள் பல