Friday 23 December 2011

இனவாதக் கல்வியும் தாயக......


இனவாதக் கல்வியும் அதன் வெட்டு முகமும்.1969 இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது.இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது.

1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக இனவாத அமைப்பு வளர்ச்சி பெற்றது.மலட்டுக் கல்வியும், காலனித்துவ கல்வியும் உண்மையில் மக்கள் நலனில் இருந்து பிரிந்து கிடக்கின்றது. இதனால் தேசத்துக்குரிய கல்வி முறை உருவாக்கப்படவேயில்லை.
தேச உற்பத்திகள், வருமானங்கள் இந்தகல்வியுடன பின்னிப்பினைய இல்லை. தேசிய பொருளாதார கட்டுமானங்கள் இந்த கல்வி முறைக்கு வெளியில் கதியற்று கிடக்கின்றது.

இதனால் சமுதாயத்தில் எற்பட்ட சமூக நெருக்கடிகளை, இந்த கல்வி முறை உற்பத்தி செய்தது. வாழ்வு உழைப்பும் ஒன்றாக இருக்க, கல்வி வேறு ஒன்றாக எதிர்திசையில் நீச்சலிட்டது. இதை சமளிக்க இனவாதத்தை கையில் எடுத்த ஆளும் வர்க்கங்கள் அதை கல்வியில் புகுத்தியது.

இதன் மூலம் சமூக நெருக்கடிகளை இன நெருக்கடியாக்கியது. கிடைக்கும் சில உயர் கௌவுரமான பட்டங்களை, இனத்துக்கிடையில் பகிரும் போட்டியாக்கியதன் மூலம், கல்வியை வக்கிரப்படுத்தி சமூக நெருக்கடியை இனநெருக்கடியாக்கினர்.

அதாவது கிடைக்கும் ஒரு சில எழும்புகள் யாருக்கு என்ற நிலைக்குள் கல்வி பந்தாடப்பட்டதன் மூலம், கல்வியை இனவாதமாக்கி முற்றாக அனைத்து சமூகத்துக்கும் மறுப்பது சாத்தியமாகியது. இதில் இன ஒடுக்கமுறை சார்ந்து, சிறுபான்மை இனங்கள் பாரிய மாறுப்புக்குள்ளாகின்றனர்.

இதுவே இந்த அமைப்பின் ஜனநாயகமாகியது. இனவாதக் கல்வி முறை இனத்தை மலடாக்குவதில் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இனவாத அமைப்பில் தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர்.

அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது.

கல்வியில் குறிப்பாக இனவாதம் புகுத்தப்பட்ட 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிகளின் குறிப்பான நியாமனம் முஸ்லிம் மந்திரி என்பதால் மட்டும் விதிவிலக்காகியது. ஆசிரியர் மாணவர் விகிதம் மேலும் குறிப்பாகும் போது, பின்தங்கிய பிரதேச சாதிய இன மாணவர்கள் அதிகம் பதிப்புக்கு உள்ளாகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 184350 யாகும். இங்கு 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர்என்னும் விகிதத்தில் காணப்படுகின்றது.

இதில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதியான கிளிநொச்சி முதல் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் அதிகம் பாதிப்படைகின்றது.

யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும், யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக காணப்படுகின்றது.

இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது ஆழமான கல்விப் பிளவை ஏற்படுத்துகின்றது. இது சாதி, மதம், இனம், பிரதேசம் என்று எங்கும் இது விரைவிப் போய்யுள்ளது.

ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைக் காணமுடியும்; 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர் 72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்தோரும் 2.3 சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகினர்.

இங்கும் யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும்.

கல்வியின் மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர்.1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180000 பேர் பங்கு கொண்ட போது, மலையக மாணவர்கள்; 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர்.

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்த போது, மலையக மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ் தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள்.
அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள் உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை. 12 பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே உள்ளனர்.

இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம் கிடைக்க வேண்டும்;. ஆனால் யாரும் இதை கண்டு கொள்வதில்லை.

யாழ்ப்பாணத்தில் 1998-1999 இல் 20 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை. 5 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட 132 859 பேரில் 17.1 சதவீதமான மாணவர்கள் அதாவது 23000 பேர் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை.

1.9 சதவீதமான 2500 குழந்தைகள் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. 13.3 சதவீதமான 17700 மாணவர்கள் இடம் பெயர்ந்து காணப்படுகின்றனர். 46.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் 2000 ரூபாவுக்கு குறைவான குடும்பங்களைச் சார்ந்த வறியவர்கள்.

6.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் அதாவது 9200 பேர் அன்றாட கஞ்சிக்கே உழைப்பில் ஈடுபடுகின்றனர். 10.2 சதவீதமான 13500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 0.09 சதவீதம்; அதாவது 1200 குழந்தைகள்ம் ஊனமுற்றவர்களாகும். 5.2 வீதமான 6908 இளம் வயதினர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர்.

இந்த சமூக அவலம் சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் என்ற பல்துறை சார்ந்து புரையோடிக் காணப்படுகின்றது. இது கால காலமாக நீடித்து இருக்கின்றது. இன்று இனவாத யுத்தம் இதை அகலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் மலட்டுக் கல்வி, மறுபுறம் சமூக அவலங்கள் இளம் குழந்தைகளின் வாழ்வில் நாசகாரமான நஞ்சாக திணிக்கப்படுகின்றது."தமிழ் ஈழத்தாயக விடிவிற்கான உலகத் தமிழர்களின் உரிமைக்குரலாக ஒன்றுபடுவோம்".


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..